- Home
- Lifestyle
- USA Lifestyle: அமெரிக்காவில் தரையில் தண்ணீர் ஊற்றினால் லட்சங்களில் அபராதம்.. சுவாரஸ்யமான காரணம்!
USA Lifestyle: அமெரிக்காவில் தரையில் தண்ணீர் ஊற்றினால் லட்சங்களில் அபராதம்.. சுவாரஸ்யமான காரணம்!
USA Lifestyle: அமெரிக்காவில் தரையில் தண்ணீர் ஊற்றினால் மிக கடுமையான நடவடிக்கையுடன் அபாரதம் விதிக்கப்படும். இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

அமெரிக்காவில் தரையில் தண்ணீர் ஊற்றக்கூடாது
நமது நாட்டில் குளியலறை தரையைக் கழுவித் தண்ணீரைத் தாராளமாக வெளியே தள்ளுவதும், பால்கனியில் உள்ள செடிகளுக்குத் தண்ணீரை ஊற்றிவிட்டு அது கீழே வடிவதைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதும் இயல்பான ஒன்று. ஆனால், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இதுபோன்ற செயல்களை செய்தால் மிகக்கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்.. இது வேடிக்கை அல்ல; உண்மை. இது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.
அமெரிக்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் (Apartments) மற்றும் காண்டோமினியம்களில் (Condos) வசிக்கும்போது, அங்குள்ள வீட்டுச் சங்கங்கள் மற்றும் நிர்வாகங்கள் சில விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கண்டிப்பாகப் பின்பற்றுகின்றன. இதில் முக்கியமாக தண்ணீர் பயன்பாடு மற்றும் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தராமல் இருப்பது தொடர்பான சில முக்கிய நடைமுறைகள் அங்கு பின்பற்றுப்படுகின்றன.
பால்கனியில் தண்ணீர் கொட்டினால் சிக்கல்
அமெரிக்காவில் பல மாடி கட்டடங்களின் பால்கனிகளில் அமர்ந்து செடிகளை வளர்ப்பது வழக்கம்தான். ஆனால், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும்போதோ அல்லது பால்கனித் தரையைக் கழுவும்போதோ, அந்தத் தண்ணீர் கொஞ்சம் கூட கீழே சொட்டக்கூடாது என்பது கடுமையான விதியாகும். நீங்கள் விடும் தண்ணீர் கீழே உள்ளவர்களின் பால்கனியிலோ அல்லது அவர்கள் மீதோ பட்டால், உடனடியாக நிர்வாகத்திடம் புகார் அளித்துவிடுவார்கள். இதன் மூலம் பெரும் அபராதம் உங்களுக்கு விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
துணியை வெளியில் காயப்போடக்கூடாது
நமது வீடுகளைப் போல அமெரிக்க வீடுகளில் தரையில் தண்ணீரை ஊற்றி வாளியால் அள்ளித் துடைக்க முடியாது. குறிப்பாக, பெரும்பாலான அமெரிக்க வீடுகளில் மரத்தாலான தளம் (Wooden Flooring) பயன்படுத்தப்பட்டிருக்கும். அங்கே தண்ணீர் தேங்கினாலோ அல்லது கசிந்து கீழே சென்றாலோ தளம் பட்டுப்போய்விடும். அது மட்டுமின்றி கீழ் வீட்டுக்குக் தண்ணீர் கசிவு ஏற்பட்டு பெரும் சேதத்தை உருவாக்கும். இதனால், தரை துடைக்கும்போது எப்போதுமே காய்ந்த அல்லது ஈரமான துணியை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இதை மீறினால் வீட்டையே காலி செய்ய நேரிடும். இதேபோல் துணிகளையும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இடையூறாக வெளியில் காயப்போடக்கூடாது.
பிரைவசிக்கு மிக முக்கியத்துவம்
அமெரிக்க வாழ்க்கை முறையில் மற்றவர்களின் தனித்தன்மைக்கும் அமைதிக்கும் அதாவது பிரைவசிக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலே இருப்பவர்கள் சத்தமாக நடப்பது, தரையில் தண்ணீரை ஊற்றிப் பெருக்குவது போன்ற செயல்களால் கீழே இருப்பவர்களின் அமைதி கெடும். இதைக் கட்டுப்படுத்தவே அங்குள்ள சங்கங்கள் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் நம்முடைய சுதந்திரம் அடுத்தவர்களின் அமைதியைக் குலைக்கக் கூடாது என்ற சமூகப் பொறுப்புணர்வுதான் அங்குள்ள மேற்கண்ட விதிகளுக்கு அடிப்படை காரணமாகும். உங்கள் சொந்தக்காரர்கள் அல்லது நண்பர்கள் யாரும் அமெரிக்காவில் இருந்தால் இதைப்பற்றி கேட்டுப்பாருங்கள் பக்கம் பக்கமாக விளக்குவார்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

