MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • USA Rules: அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே துணி காயப்போட கூடாதா? காரணம் தெரிஞ்சா சிரிப்பே வந்துடும்!

USA Rules: அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே துணி காயப்போட கூடாதா? காரணம் தெரிஞ்சா சிரிப்பே வந்துடும்!

USA Rules: நம்ம ஊரில் வீட்டிற்கு வெளியே துணி காயப்போடுவது மிகச் சாதாரணமான ஒன்று. ஆனால், அமெரிக்காவில் சில இடங்களில் இது மிகப்பெரிய குற்றமாகும். மீறி காயப்போட்டால் என்ன நேரும் தெரியுமா? இதோ முழு விவரம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 04 2026, 03:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே துணி காயப்போட கூடாதா?
Image Credit : x

அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே துணி காயப்போட கூடாதா?

இந்தியாவில் பால்கனி மற்றும் மொட்டை மாடிகளில் கொடிகட்டித் துணிகளைக் காயவைப்பது நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதி. ஆனால், அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் வெளியில் துணிகளைக் காயவைப்பது பல இடங்களில் சட்டவிரோதமான செயலாகவோ அல்லது கடுமையான அபராதத்திற்குரிய குற்றமாகவோ கருதப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள முக்கியக் காரணங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
துணி காயப்போட்டால் ஆயிரக்கணக்கில் அபராதம்
Image Credit : Pixabay

துணி காயப்போட்டால் ஆயிரக்கணக்கில் அபராதம்

அமெரிக்காவின் பல குடியிருப்புப் பகுதிகளில், குறிப்பாக HOA (Homeowners Association) கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில், வீடுகளுக்கு வெளியே துணி காயவைக்கக் கடுமையான தடை உள்ளது. இந்த விதியை மீறினால், 100 முதல் 500 டாலர் வரை, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,000 முதல் ரூ.45,000 வரை அபராதம் விதிக்கப்படும்.

Related Articles

Related image1
H-1B Visa: அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. H-1B விசா ஊழியர்களுக்கு நிம்மதி தரும் தகவல்!
Related image2
Interesting Facts: அமெரிக்காவில் ஒரு இளநீர் விலை எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!
35
இந்த விதிமுறை ஏன்?
Image Credit : instagram

இந்த விதிமுறை ஏன்?

அமெரிக்காவில் வீடுகள் அனைத்தும் ஒரே மாதிரியாகவும், அழகாகவும், நேர்த்தியாகவும் இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். வெளியே துணிகளைக் காயப் போடுவதால், அந்தப் பகுதியின் அழகு கெட்டு, ஒழுங்கற்றதாகத் தோன்றும் என அவர்கள் நம்புகிறார்கள். இதனால்தான் இந்த விதிமுறை.

வீட்டின் வெளிப்புறத் தோற்றம் என்பது தனிப்பட்ட வீட்டின் அழகு மட்டுமல்ல, அது அந்தச் சுற்றியுள்ள பகுதியின் அழகையும் தீர்மானிக்கிறது. வெளிப்புறத்தில் திறந்தவெளியில் துணிகளைக் காயப் போடுவது, அந்த நேர்த்தியான சூழலைக் குலைத்துவிடும் என்று மக்கள் கருதுகிறார்கள்.

வெளியில் துணிகள் தொங்குவது கண்ணிற்கு அழகாக இருக்காது என்றும், அது அப்பகுதியின் அமைப்பையும் ஒழுங்கையும் கெடுத்து, ஒரு குழப்பமான அல்லது கவனிப்பாரற்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

45
துணிகளை எப்படி உலர்த்துவது?
Image Credit : Asianet News

துணிகளை எப்படி உலர்த்துவது?

அழகியல், சீரான தன்மை மற்றும் ஒழுங்கு ஆகிய மூன்றையும் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்ற இந்த எண்ணமே, 'வெளியே துணி காயப்போடக் கூடாது' என்ற கடுமையான விதிமுறை அங்கு உருவாவதற்குக் முதன்மை காரணமாக அமைந்தது.

அமெரிக்கர்கள் துணிகளைக் காயவைக்க வெயிலை நம்புவதில்லை, டெக்னாலஜியைத்தான் நம்புகிறார்கள். அங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஹை-டெக் வாஷிங் மெஷின் மற்றும் 'டிரையர்' (Dryer) இருக்கும். இந்த டிரையர், துவைத்த துணிகளைச் சில நிமிடங்களிலேயே முழுமையாக உலர்த்திவிடும். அதனால் வெளியே கொண்டுவர வேண்டிய அவசியமே இல்லை.

55
அமெரிக்கா சென்றால் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்
Image Credit : Asianet News

அமெரிக்கா சென்றால் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்பவர்களுக்கு இது முதலில் விசித்திரமாகத் தோன்றலாம். ஆனால், அங்குள்ள சமூக விதிகளைப் பின்பற்றுவது கட்டாயம். அந்தப் பகுதியின் அழகையும், ஒழுங்கையும் பாதுகாக்க மக்கள் இந்த விதிகளை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். மீறினால், நோட்டீஸ் மற்றும் அபராதம் நிச்சயம்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Necklace Chains : நெக்லஸ் மாதிரி டிசைன்ல அட்டகாசமான செயின் போடுங்க!
Recommended image2
Fashion Tips: புது டிரஸ் வேண்டாம்..இருக்கும் Dress-க்கே புது Look கொடுக்க இந்த Tricks-ஐ Try பண்ணுங்க!
Recommended image3
Snakes : மனிதர்களை பாம்புகள் எப்படி காப்பாத்துது தெரியுமா? இது தெரிஞ்சா இனி பாம்புகளை அடிக்க மாட்டீங்க!
Related Stories
Recommended image1
H-1B Visa: அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. H-1B விசா ஊழியர்களுக்கு நிம்மதி தரும் தகவல்!
Recommended image2
Interesting Facts: அமெரிக்காவில் ஒரு இளநீர் விலை எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved