MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • Sri lanka President : இலங்கையின் அதிபர் பதவிக்கு 5 பேர் போட்டி! வெற்றி பெறப்போவது யார்?

Sri lanka President : இலங்கையின் அதிபர் பதவிக்கு 5 பேர் போட்டி! வெற்றி பெறப்போவது யார்?

இலங்கையின் அதிபர் தேர்தல் வரும் 20ம் தேதி நடைபெறுகிறது. இதில் தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதசா உள்ளிட்ட 5 பேர் போட்டியிடுகின்றனர். 

2 Min read
Dinesh TG
Published : Jul 16 2022, 02:57 PM IST| Updated : Jul 16 2022, 03:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இலங்கையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவு, எரிபொருள், ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இலங்கை பொருளாதாரத்தை சீரழிவுக்குக் கொண்டு வந்த ராஜகபக்ச குடும்பத்தினர் அரசியலைவிட்டே ஒதுங்க வேண்டும் எனக் கோரி மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.
 

27

உணவுப் பொருட்கள், காய்கறிகள், மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் விலை மக்கள் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்தது. 12 மணிநேரம் மின்வெட்டு, பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் தட்டுப்பாட்டால், மக்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தனர். இதன் உச்சகட்டமாக பாதுகாவலர்களின் தடைகளை மீறி ஆளுநர் மாளிகையை கைப்பற்றினர். பிரதமரின் தனி வீட்டிற்கு தீவைத்தனர்.
 

37

இதையடுத்து மக்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தால் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்ச கடந்தமாதம் பதவி விலகினார். கடந்த 9ம் தேதி மக்கள் நடத்திய மிகப்பெரி்ய போராட்டத்தைப் பார்த்து, அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சவும் பதவி விலகினார்.

sri lanka crisis: ranil wickremesinghe: இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவிஏற்றார்
 

47

முன்னதாக இலங்கையிலிருந்து தப்பிச் சென்று மாலத்தீவு சென்ற கோத்தபய, அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். நேற்று மின்அஞ்சலில் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு கோத்தபய ராஜபக்ச அனுப்பிவைத்தார். இதைத்தொடர்ந்து, இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோக்தபய விலகியதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கோத்தபய ராஜபக்சே ராஜினாமாவை அறிவித்தார் சபாநாயகர்; 7 நாட்களில் புதிய அதிபர்!!
 

57
sri lanka

sri lanka

அடுத்ததாக நாட்டை வழிநடத்துவதற்காக இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டு அண்மையில் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமா கடிதம் வாசிக்கப்பட்டு அதிபர் பதவி காலியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. அப்போது, அதிபர் பதவிக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வரும் 20ம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

sri lanka crisis: கொழும்பில் தொடரும் பதற்றம்.. வேறு வழியில்லாமல் மீண்டும் ஊரடங்கு அமல்
 

67

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஏற்கனவே அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இடைக்கால அதிபரான ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அவர்களைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் அனுர யாப்பா அபேவர்தன,, டலஸ் அழகப்பெரும மற்றும் முன்னாள் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நாட்டை விட்டு வெளியேற மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சேவுக்கு தடை... இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி!!

77

இதனால், இலங்கை அதிபர் தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. ராஜினாமா செய்த கோத்தபய ராஜபக்சேவின் பதவிக்காலம் வரும் 2024ம் ஆண்டு முடிவடைகிறது. அதுவரை புதிய அதிபர் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அடுத்த அதிபராக தேர்வாகும் நபர், இலங்கையின் புதிய பிரதமரை நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

DT
Dinesh TG
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved