- Home
- உலகம்
- Sunita Williams & Wilmore 2025 வரை பூமிக்கு திரும்ப முடியாது! -எவ்வளவு நாட்கள் விண்வெளியில் தங்க முடியும்?
Sunita Williams & Wilmore 2025 வரை பூமிக்கு திரும்ப முடியாது! -எவ்வளவு நாட்கள் விண்வெளியில் தங்க முடியும்?
விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக வரும் பிப்ரவரி 2025 வரை அவர்கள் ISS-ல் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ISS-ல் அவர்களுக்கு போதிய பாதுகாப்பிடம் இருக்குமா? விண்வெளியில் அவர்களின் உடல்கள் எவ்வாறு செயல்படும்? இனி என்ன ஆகும்? இதோ...!

விண்வெளிப் பயணம்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் கடந்த ஜூன் மாதம் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS)க்கு பயணம் செய்தனர். இந்த ஸ்டார் லைனர் விண்கலம் இதற்கு முன்பு ISS-க்கு இரண்டு பயணங்களை மேற்கொண்டது ஆனால் விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்றது இதுவே முதல் முறை. பயணம் தொடங்குவதற்கு முன், ஸ்டார்லைனரின் உந்துவிசை அமைப்பில் ஹீலியம் கசிவு கண்டறியப்பட்டது, ஆனால் பயணத்தை கைவிடும் அளவுக்கு அது ஆபத்தானது இல்லை என கருதப்பட்டதால் Starliner எந்த பிரச்சனையும் இல்லாமல் ISSக்கு சென்றடைந்தது.
சுனிதா பூமிக்கு திரும்புவது எப்போது?
இருப்பினும், அது ISS உடன் இணைக்கப்பட்டு, இரண்டு விண்வெளி வீரர்கள் உள்ளே மாற்றப்பட்ட பிறகு, ஸ்டார்லைனரில் மேலும் சில பிரச்சனைகள் இருப்பதை கண்டறிந்தனர். அதைத்தொடர்ந்து, விண்வெளி வீரர்கள் திரும்பும் பயணம் ஒரு வாரத்திற்குப் பிறகு முதலில் திட்டமிடப்பட்டது. அது, அவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பிய நிலையில், மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. நாசா விஞ்ஞானிகளும், போயிங் பொறியாளர்களும் தொடர்ந்து ஸ்டார்லைனரை சரிசெய்ய தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வரும்நிலையில், வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் வீடு திரும்புவதற்கு வாகனம் இல்லாததால் விண்வெளியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
விண்வெளி தத்தளிக்கும் சுனிதா வில்லியம்ஸ் இன்னும் 6 மாசம் பூமிக்கு வர முடியாது: நாசா தகவல்
பிப்.,2025ல் பூமிக்கு திரும்புவர்!
வரும் செப்டம்பரில் ISS-க்கு பயணிக்கத் திட்டமிடப்பட்ட மற்றொரு வாகனமான ஸ்பேஸ்எக்ஸால் இயக்கப்படும் இந்த விண்கலம், நான்கு விண்வெளி வீரர்களை ஐ.எஸ்.எஸ்-க்கு ஏற்றிச் சென்று பிப்ரவரி 2025ல் கொண்டு வர வேண்டும். இருப்பினும், வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோரையும் மீண்டும் அழைத்து வர வேண்டும் என்றால், ஸ்பேஸ்எக்ஸ் விண்கலம் செப்டம்பர் மாதத்தில் இரண்டு விண்வெளி வீரர்களை மட்டுமே ஏற்றிச் செல்லும்.
விண்வெளியில் இருப்பதில் என்ன ஆபத்து?
ஐ.எஸ்.எஸ்ஸில் மைக்ரோ கிராவிட்டி நீண்ட நேரம் வெளிப்படுவதால், விண்வெளி வீரர்கள் எலும்பு அடர்த்தி குறைப்பு, பார்வை தொடர்பான பிரச்சினைகள் போன்ற பல உடல்நல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும், மேலும் டிஎன்ஏ பாதிப்பு காரணமாக புற்றுநோயின் அதிக ஆபத்து உள்ளது. இதனால் தான் விண்வெளி ஆய்வுப் பணிகள் குறுகியதாக வைக்கப்படுகின்றன. சில வாரங்களுக்கு மேல் நீடிக்காது.