Asianet News TamilAsianet News Tamil

விண்வெளி தத்தளிக்கும் சுனிதா வில்லியம்ஸ் இன்னும் 6 மாசம் பூமிக்கு வர முடியாது: நாசா தகவல்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் சென்ற இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இன்னும் 6 மாதங்களுக்கு பூமிக்கு வர முடியாமல் போகலாம் என நாசா கூறியுள்ளது.

Astronaut Sunita Williams may not return to Earth for another 6 months: NASA sgb
Author
First Published Aug 8, 2024, 5:56 PM IST | Last Updated Aug 8, 2024, 5:57 PM IST

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் 2025 பிப்ரவரி மாதம் வரை விண்வெளியிலேயே இருக்க வேண்டியிருக்கும் என நாசா அறிவித்துள்ளது.

இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோருடன் கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளச் சென்ற அவர், பணிகளை முடித்துக்கொண்டு ஜூலை 13ஆம் தேதியே பூமிக்கு திரும்ப இருந்தார்.

ஆனால் எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இருவரும் திட்டமிட்டபடி பூமிக்குத் திரும்புவது ஒத்திவைக்கப்பட்டது. உடனடியாகத் தொடங்கிய தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகள் இன்னும் முடியவில்லை. இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் நீடிக்கிறது.

தமிழக அரசு சார்பில் ஆறுபடை வீடு இலவச சுற்றுலா! பக்தி பரவசத்தில் முருக பக்தர்கள்!!

இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இருவரும் 2025 பிப்ரவரி மாதம் வரை விண்வெளி நிலையத்திலேயே இருக்க வேண்டியிருக்கும் என நாசா கூறியுள்ளது. விண்வெளி நிலையத்தில் ஹீலியம் வாயு கசிவு ஏற்பட்டது, டெஃப்லான் சீல் பாதிக்கப்பட்டது ஆகியவை தான் முக்கியப் பிரச்சினையாக உள்ளன. அவற்றைச் சரிசெய்வதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன என்றும் நாசா தெரிவித்துள்ளது.

இந்தத் தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்ட பின்புதான் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வரமுடியும் என்பதுதான் இப்போதைய நிலையாக உள்ளது. பூமிக்குத் திரும்பும்போது, போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் ஸ்பேஷ் ஷிப்பிற்குப் பதிலாக ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் ஸ்பேஸ் ஷிப் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் நாதா குறிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே சுனிதா வில்லியம்ஸ் கடந்த ஜூன் மாதம் மூன்றாவது முறையாக விண்வெளிக்குச் செல்லும்போதும் பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

நோட் பண்ணிக்கோங்க... மூன்றாம் உலகப் போர் இந்த தேதியில்தான் தொடங்கும்... இந்தியாவின் நாஸ்டர்டாமஸ் உறுதி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios