பிரதமர் மோடி 22ஆம் தேதி சவுதி அரேபியா பயணம்
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

Modi Saudi Arabia Visit
மோடி சவுதி அரேபியா பயணம்
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் சவுதி அரேபியாவிற்கு பயணம் பமேற்கொள்ளவுள்ளார்.
பிரதமர் மோடியின் சவுதி அரேபியச் சுற்றுப்பயணம் ஏப்ரல் 22-23 ஆகிய நாட்களில் இருக்கும். மூன்றாவது முறையாக பிரதமரானதும் மோடி முதல் முறையாக சவுதி அரேபியாவுக்கு பயணிக்கிறார்.
Narendra Modi
இளவரசர் முகமது பின் சல்மான்
முன்னதாக, அவர் 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை சவுதி அரேபியாவுக்குப் பயணம் செய்துள்ளார். செப்டம்பர் 2023 இல் G20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவும், இந்தியா-சவுதி அரேபியா மூலோபாய கூட்டாண்மை கவுன்சிலின் முதல் கூட்டத்திற்காகவும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.
இந்தியாவும் சவுதி அரேபியாவும் சமூக-கலாச்சார மற்றும் வர்த்தக தொடர்புகளின் நீண்ட வரலாற்றைக் கொண்ட நெருக்கமான மற்றும் நட்பு உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன. அரசியல், பாதுகாப்பு, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் வலுவான உறவைக் கொண்டுள்ளன.
Modi in Saudi Arabia
வெளியுறவுத்துறை அறிக்கை
கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவுடனான உறவுகள் வலுவான மற்றும் நீடித்த கூட்டாண்மையாக உருவாகியுள்ளன. வளர்ந்து வரும் முதலீட்டு உறுதிமொழிகள், பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், துறைகளில் தீவிரமான உயர் மட்ட பரிமாற்றங்கள் ஆகியவை விரிவடைந்துள்ளன என்று வெளியுறவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் வருகை, சவுதி அரேபியாவுடனான இருதரப்பு உறவுகளுக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது. இது நமது பன்முக கூட்டுறவை மேலும் ஆழப்படுத்தவும் வலுப்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கும். அத்துடன் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் வாய்ப்பளிக்கும் என வெளியுறவுத்துதறை தெரிவித்துள்ளது.
Modi with Saudi Crown Prince
பொருளாதார வழித்தடம்
மேற்கு ஆசியாவில் ஹமாஸ்-இஸ்ரேலிய மோதல் காரணமாக நிலவும் பதட்டங்கள், அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்காவும் ஈரானும் நடத்தும் பேச்சுவார்த்தை ஆகியவற்றின் மத்தியில் பிரதமர் மோடியின் சவுதி அரேபியப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சவுதி அரேபியாவிற்குச்ச செல்ல இருக்கிறார்.
கடந்த 2023ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்ட இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (India Middle East Europe Economic Corridor) பற்றி மோடியின் சவுதி பயணத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது..