MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • 3-ம் உலகப்போர் ஏற்படுமா? 2025 குறித்து நாஸ்ட்ராடாமஸின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்

3-ம் உலகப்போர் ஏற்படுமா? 2025 குறித்து நாஸ்ட்ராடாமஸின் அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்

2025-ம் ஆண்டுக்கான நாஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இயற்கை பேரிடர்கள், விண்வெளி ஆய்வு முன்னேற்றங்கள், உலகளாவிய மோதல்கள், பொருளாதாரக் குழப்பம் மற்றும் தொழில்நுட்பப் புரட்சி ஆகியவை இதில் அடங்கும்.

2 Min read
Author : Ramya s
Published : Dec 14 2024, 11:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Nostradamus predictions for 2025

Nostradamus predictions for 2025

2024-ம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. அனைவரும் 2025-ம் ஆண்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 2025-ம் ஆண்டில் என்ன நடக்கும் என்பது பிரபல தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் வெளியாகி உள்ளன. 

16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு தீர்க்கதரிசியான நோஸ்ட்ராடாமஸ், இறந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் பிரபலமான நபராக இருக்கிறார். Les Prophéties என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்ட அவரது ரகசிய கணிப்புகள் குறிப்பிடத்தக்க உலக நிகழ்வுகளை முன்னறிவிப்பதாகக் கருதப்படுகின்றன.  2025க்கான நோஸ்ட்ராடாமஸின் சில கணிப்புகள் குறித்து பார்க்கலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Nostradamus predictions

Nostradamus predictions

இயற்கை பேரிடர்கள் மற்றும் காலநிலை மாற்றம்

சுற்றுச்சூழல் நெருக்கடிகள் அதிகரிக்கும் என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில், அவரது தீர்க்கதரிசனங்கள் கடுமையான வெள்ளம், வறட்சி மற்றும் பூகம்பங்களை பரிந்துரைக்கின்றன, இது தற்போதைய காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். 2025-ல் கடுமையான நிலநடுக்கம், வெள்ளம் ஆகியவை ஏற்படலாம் என்று அவர் கணித்துள்ளார். இது உலகளாவிய நிலப்பரப்புகளை மறுவடிவமைக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

35
Nostradamus predictions for 2025

Nostradamus predictions for 2025

உலகளாவிய மோதல் மற்றும் அமைதியின்மை

சக்தி வாய்ந்த உலக நாடுகளிடையே போர் அல்லது அமைதியின்மை ஏற்படலாம் என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். போர் பற்றிய தீர்க்கதரிசனங்கள் புவிசார் அரசியல் பதட்டங்களின் சாத்தியத்தை தெரிவிக்கின்றன. எனவே 2025-ம் ஆண்டில் உலகளாவிய போர் அல்லது அமைதியின்மை ஏற்படலாம். தற்போது சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே நாஸ்ட்ராடாமஸி உலகப்போர் குறித்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. 

45
Nostradamus predictions for 2025

Nostradamus predictions for 2025

விண்வெளி ஆய்வில் முன்னேற்றங்கள்

விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்படலாம் என்று அவர் கணித்துள்ளார்.. விண்வெளி தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியுடன், 2025-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் பயணம் மேற்கொள்ளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளி ஆய்வில் மனிதகுலம் ஒரு மாபெரும் பாய்ச்சலை முன்னெடுத்துச் செல்லும் ஆண்டாக இது இருக்க முடியுமா?

55
Nostradamus predictions for 2025

Nostradamus predictions for 2025

பொருளாதாரக் குழப்பம்

நாஸ்ட்ராடாமஸின் சில கணிப்புகள் நிதி நெருக்கடிகளைக் குறிப்பிடுகின்றன, பங்குச்சந்தை உறுதியற்ற தன்மை அல்லது குறிப்பிடத்தக்க உலகளாவிய பொருளாதார மாற்றத்தை சுட்டிக்காட்டலாம். நோஸ்ட்ராடாமஸின் சர்வதேச நிதி அமைப்பில்  மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தகூடும்.

தொழில்நுட்ப புரட்சி

2025-ம் ஆண்டில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடையும் என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். குறிப்பாக 2025-ம் ஆண்டி AI, ஆட்டோமேஷன், ரோபாட்டிக்ஸ் மற்றும் பயோடெக்னாலஜி ஆகியவற்றில் ஏற்படும் முன்னேற்றங்கள் தொழில்களை மாற்றியமைக்கலாம். 

நோஸ்ட்ராடாமஸின் தீர்க்கதரிசனங்கள் எதிர்காலத்தைப் பற்றிய துல்லியமான கணிப்புகளா? அல்லது அவை நமது விளக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளனவா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Free Trip : உணவுப் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! இலவசமாக ஃபின்லாந்து நாட்டுக்குச் சென்று வர அரிய வாய்ப்பு!
Recommended image2
Burj Khalifa: உலகின் மிக உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபாவில் ஒரு வீடு வாங்க எவ்வளவு கோடி வேணும் தெரியுமா? விலை கேட்டா தலை சுத்திடும்.!
Recommended image3
Ebola: காங்கோவில் எபோலா அவசரநிலை! இந்த வைரஸ் ஏன் இவ்வளவு ஆபத்தானது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved