- Home
- உலகம்
- Best Selling Alcohol: உலகத்துலயே அதிகம் விற்பனையாகும் சரக்கு இதுதான்! இதன் சக்சஸ் சீக்ரெட் தெரியுமா?
Best Selling Alcohol: உலகத்துலயே அதிகம் விற்பனையாகும் சரக்கு இதுதான்! இதன் சக்சஸ் சீக்ரெட் தெரியுமா?
Best Selling Alcohol: உலகத்துல எத்தனையோ சரக்கு பிராண்டுகள் இருக்கு. ஆனா, கடந்த 25 வருஷமா ஒரே ஒரு பிராண்ட்தான் டாப்புல இருக்கு. அது என்ன பிராண்ட், அதன் ஸ்பெஷாலிட்டி என்னனு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
13

Image Credit : Getty
25 ஆண்டுகளாக முதலிடத்தில் இருக்கும் பிராண்ட்
நிறைய பேருக்கு சரக்குன்னா பீர், விஸ்கி, வோட்காதான் தெரியும். ஆனா, கடந்த 25 வருஷமா உலகத்துல அதிகம் விற்பனையாவது தென்கொரியாவின் 'ஜின்ரோ' சோஜுதான். போன வருஷம் மட்டும் சுமார் 100 மில்லியன் (10 கோடி) பெட்டிகள் விற்பனையாகி இருக்கு. பக்கத்துல கூட வேற எந்த பிராண்டும் இல்லை.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
23
Image Credit : chat GPT
ஜின்ரோ பிராண்டின் வெற்றிக்குப் பின்னால் உள்ள காரணங்கள்
இந்த பிராண்டின் வெற்றிக்கு முக்கிய காரணம், இளைஞர்களைக் கவரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஃபிளேவர்ஸ்தான். கிரீன் கிரேப், பீச், லிச்சி, ஸ்ட்ராபெர்ரி போன்ற ஃபிளேவர்ஸ் இளைஞர்களை சீக்கிரமா கவர்ந்துடுச்சு. அதுமட்டுமில்லாம, அந்த பச்சை நிற பாட்டில் இந்த பிராண்டோட அடையாளமாவே மாறிடுச்சு.
33
Image Credit : AI Image
குடிக்கும் முறையில் ஒரு பாரம்பரியம்
கொரியாவில் இந்த சோஜுவை குடிக்க ஒரு பாரம்பரிய முறையையே வச்சிருக்காங்க. இரண்டு கையால் பாட்டிலைப் பிடிப்பது, பெரியவர்களுக்கு முதலில் ஊற்றுவதுனு இதுவும் ஒரு மார்க்கெட்டிங் ஆனது. கொரியன் படங்கள், வெப் சீரிஸ்களில் அடிக்கடி இதைக் காட்டி உலக அளவில் பிரபலப்படுத்தினாங்க. இதனால, கொரியன் கல்ச்சர் ரசிகர்களுக்கு ஜின்ரோ மீது ஆர்வம் அதிகமாகி, விற்பனை உச்சம் தொட்டது.
Latest Videos

