MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • வருகிறதா பேரழிவு? 2025ல் என்ன நடக்கும்? அலெர்ட் கொடுக்கும் பாபா வாங்காவின் கணிப்புகள்!

வருகிறதா பேரழிவு? 2025ல் என்ன நடக்கும்? அலெர்ட் கொடுக்கும் பாபா வாங்காவின் கணிப்புகள்!

Baba Vanga Predictions : பாபா வாங்கா என்று அழைக்கப்படுபவர் தான் வங்கேலியா பாண்டேவா குஷ்டெரோவா. இவர் பல்கேரிய நாட்டை சேர்ந்தவர். பிறக்கும்போதே கண் பார்வையற்ற இவர் எதிர்காலத்தை கணிக்கும் திறன்கொண்டவர் என்று கூறப்படுகிறது.

2 Min read
Ansgar R
Published : Oct 15 2024, 05:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Baba Vanga

Baba Vanga

எதிர்காலத்தை கணிக்கும் திறன் சிலரிடம் உள்ளதாக உலக அளவில் பரவலாக நம்பப்படுகிறது. அந்த வகையில் பல்கேரிய நாட்டை சேர்ந்த பாபா வாங்காவின் கணிப்புகள் உண்மையாகி வருவதாக கூறப்படுகிறது. 1911ம் ஆண்டு பிறந்த அவர், 1996ம் ஆண்டே தனது 85வது வயதில் இறந்துவிட்டார் என்றாலும், அவருடைய கணிப்புகள் இன்றளவும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. 5079ம் ஆண்டுக்கு பிறகு அவருடைய கணிப்புகள் இல்லை என்று, ஆகையால் அதன் பிறகு இந்த உலகம் அழிந்துவிடும் என்றும் நம்பப்படுகிறது. ஆனால் இதற்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் வேகமாக வளரும் டாப் 10 நகரங்கள்: 4 இந்திய நகரங்களும் லிஸ்ட்ல இருக்கு!

24
Global Warming

Global Warming

பாபா வாங்கா கணிப்புகள் உண்மையாகியுள்ளதா?

அதிகப்படியான மாசுபாடு மற்றும் இயற்கை வளங்களை வீணடிப்பதால், பருவநிலை மாற்றங்கள் ஏற்படும் என்றும். புவி வெப்பாகி பேரழிவு ஏற்படும் என்றும் பாபா வாங்கா ஏற்கனவே கணித்ததாக கூறப்படுகிறது. அதேபோல சயின்ஸ் அட்வான்சஸில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, உலகளாவிய வெப்ப அலைகள் 67 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்த வெப்ப அலைகளின் போது அதிக வெப்பநிலை 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவானதை விட அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

அதே போல வாங்காவின் கணிப்புகள் அனைத்தும் வெறும் அழிவு பற்றியது மட்டுமல்ல என்றும், மாறாக அல்சைமர் மற்றும் புற்றுநோய்க்கான மருந்தை 2024 ஆம் ஆண்டில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கலாம் என்றும் அவர் கணித்தார் என்று நம்பப்படுகிறது. இந்த சூழலில் தான் இந்தியா தனது சொந்த HPV (மனித பாப்பிலோமா வைரஸ்) இந்த ஆண்டு உருவாக்கியது. இப்படி பாபா வாங்காவின் கணிப்புகள் அடுத்தடுத்து உண்மையாகி வருவதாக கூறப்படுகிறது.

34
Venus Planet

Venus Planet

பாபா வாங்காவின் 2025ம் ஆண்டுக்கான கணிப்புகள்

வீனஸ் செல்லும் மனித இனம் 

ஏற்கனவே மனிதன் நிலவில் அல்லது செவ்வாய் கிரகத்தில் வாழ வழியுள்ளதா என்ற ஆய்வுகள் நடந்தது வருகின்றது. இந்த சூழலில் பூமி வாழ்வதற்கு ஏற்றதாக இடமாக இல்லாமல் போவதால், வரும் 2028ம் ஆண்டில் மனிதர்கள் வீனஸ் கிரகத்தில் வாழ முடியுமா என்ற ஆய்வுகளை துவங்குவார்கள். அதற்காக ஆராய்ச்சிகள் எதிர்வரும் 2025ம் ஆண்டில் துவங்கும் என்று பாபா வாங்கா கூறியுள்ளார். ஆனால் இது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது குறித்த தகவல்கள் தெரியவில்லை.  

துவங்கும் உலகின் அழிவு 

ஏற்கனவே 5079ம் ஆண்டு இந்த உலகம் முற்றிலும் அழிந்துவிடும் என்று கனிந்துள்ள பாபா வாங்கா, அந்த முடிவுக்கான ஆரமம் இந்த 2025ம் ஆண்டில் தான் துவங்கும் என்றும் கூறியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் தான் முதலில் பெரும் பிரச்சனை வெடிக்கும். போர் மற்றும் பெரிய அளவிலான சேதங்கள் மூலம் உலகின் அழிவு துவங்கும் என்று கணித்துள்ளார் பாபா வாங்கா.

44
Alien Invasion

Alien Invasion

உயரும் கடம் மட்டம், ஏலியன் வருகை 

ஏற்கனவே புவி வெப்பமாவதால் உலக அளவில் கடல் மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வருகின்றது. மேலும் வருகின்ற 2025ம் ஆண்டில் இந்த புவிவெப்பமயமாவது என்பது அதிகரிக்கும் என்றும். உலக அளவில் கடல் மட்டம் தொடர்ந்து உயரும் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். அடுத்த நூற்றாண்டில் பிற கிரகங்களில் வாழும் உயிரினங்கள் பூமியை பார்வையிடாமல் என்றும், அவர்கள் விரைவில் பூமியை தொடர்புகொள்ள துவங்குவார்கள் என்றும் பாபா வாங்கா கணித்துள்ளார்.

இந்தியாவின் உதவியால் ஹைஃபா நகரைக் காப்பாற்றிக் கொண்ட இஸ்ரேல்!

About the Author

AR
Ansgar R
உலக வெப்பமயமாதல் (Ulaga Veppamayamaadal)
பாபா வங்கா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved