இந்தியாவின் உதவியால் ஹைஃபா நகரைக் காப்பாற்றிக் கொண்ட இஸ்ரேல்!
இப்போது பாலஸ்தீனம், ஈரான் மற்றும் லெபனானுக்கு எதிராக கடுமையான போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலின் முக்கிய வர்த்தகத் துறைமுக நகரத்தை இந்தியா காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது.
ஈரானின் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் இன்று வெவ்வேறு முனைகளில் சண்டையிட்டு வருகிறது. ஆனால், இதேபோன்ற தாக்குதல் அந்நாட்டின் வரலாற்றில் ஏற்கெனவே பதிவாகி இருக்கிறது. அப்போது இஸ்ரேலின் பொருளாதாரத்தை இயக்க உதவும் முக்கியமான நகரத்தை இந்தியா காப்பாற்றிக் கொடுத்திருக்கிறது. இந்த ஒரு நகரத்தின் காரணமாக, இஸ்ரேல் உலக வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நகரம் வருங்காலத்தில் பெரிய பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாக மாறப்போகிறது.
இஸ்ரேலின் இந்த நகரத்தின் பெயர் ஹைஃபா. இது இஸ்ரேலின் முக்கியத் துறைமுக நகரம். இது எதிர்காலத்தில் இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இந்த சர்வதேச வர்த்தக வழித்தடத்திற்கான திட்டமிடல் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின்போது நடைபெற்றது. இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் கௌதம் அதானியும் ஹைஃபாவின் முக்கிய துறைமுகத்தில் 10 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளார்.
Israel India
டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமுக்கு அடுத்தபடியாக ஹைஃபா இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமாகும். ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான வர்த்தகத்தின் பெரும்பகுதி இந்த ஹைஃபாவில் உள்ள துறைமுகத்தின் வழியாக நடக்கிறது. முதல் உலகப் போரின்போது இஸ்ரேல் இந்திய வீரர்களின் உதவியுடன் இந்த நகரத்தை தன்வசம் கொண்டுவந்தது. அப்போது ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டனர். போரின் போது இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுடன் இணைந்து போரிட வேண்டியிருந்தது.
முதலாம் உலகப் போரின் போது ஹைஃபா நகரம் சுதந்திரம் பெற்றது. அந்த நேரத்தில், செப்டம்பர் 23, 1918 இல், ஹைஃபா போர் மூண்டது. ஹைஃபா நகரத்தில் ஒட்டோமான் பேரரசு முடிவுக்கு வந்தது. அங்கு ஆங்கிலேயர் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் நகரம் இஸ்ரேலின் ஒரு பகுதியாக மாறியது. இந்த வகையில் இஸ்ரேல், இந்தியா இரு நாடுகளும் ஹைஃபா போரில் வென்றுள்ளன.
ஹைஃபாவை விடுவிப்பதற்காக அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட வீரர்களின் பிரிவு 15வது குதிரைப்படைப் படை என்று அழைக்கப்பட்டது. இந்த போரில் ஜோத்பூர், ஹைதராபாத், பாட்டியாலா, மைசூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பல வீரர்கள் பங்கெடுத்தனர். சில வீரர்கள் காஷ்மீர் மற்றும் கத்தியவாரைச் சேர்ந்தவர்கள்.
Israel India
ஹைஃபா இஸ்ரேல் நாட்டுக்கு மட்டுமின்றி, மத்தியதரைக் கடல் பிராந்தியத்திலேயே மிக முக்கியமான பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் இந்தத் துறைமுகத்தில் 3 கோடி டன்களுக்கு மேல் சரக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இஸ்ரேலின் சரக்கு போக்குவரத்தில் 3 சதவீதம் ஹைஃபா துறைமுகம் வழியாக மட்டுமே நடக்கிறது.
ராணுவப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் துறைமுகம் இந்தத் துறைமுகம் முக்கியமானதாக உள்ளது. கணினி மற்றும் மின்னணு உற்பத்திக்கான இஸ்ரேலின் மையமாக ஹைஃபா நகரம் உள்ளது. ஹைஃபா நகரத்தின் பொருளாதாரத்தில் இந்தத் துறையின் பங்களிப்பு 11 சதவீதம்.