- Home
- உலகம்
- இலங்கைக்கு விமான உதவி அனுமதி மறுத்ததா இந்தியா..? பாகிஸ்தானின் அபத்தமான செயல்..! வண்டி வண்டியாய் வதந்தி..!
இலங்கைக்கு விமான உதவி அனுமதி மறுத்ததா இந்தியா..? பாகிஸ்தானின் அபத்தமான செயல்..! வண்டி வண்டியாய் வதந்தி..!
பாகிஸ்தான் கோரிய விமான அனுமதியை வழங்குவதில் இந்தியா தாமதப்படுத்தியதாக பாகிஸ்தானின் கூறியதை இந்தியா ‘அபத்தமானது’ என்று கூறியுள்ளது.

இலங்கைக்கு மனிதாபிமான உதவிப் பணிக்காக இந்திய வான்வெளியைப் பயன்படுத்த ஒரு விமானத்திற்கு அனுமதி கோரி டிசம்பர் 1, 2025 அன்று பிற்பகல் 1 மணியளவில் பாகிஸ்தான் ஒரு கோரிக்கையை சமர்ப்பித்ததாகவும், அதே நாளில் அனுமதி வழங்கப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் தாக்கிய இலங்கைக்கு இந்தியா 53 டன் உதவியை அனுப்பியது, விமானங்களை அனுப்பியது.2004 சுனாமிக்குப் பிறகு இலங்கை அதன் மோசமான பேரழிவை எதிர்த்துப் போராடும் நிலையில், இந்திய விமானங்கள், கடற்படைக் கப்பல்கள் மற்றும் மீட்புப்படையினருடன் இந்தியா நிவாரணப் பணிகளை விரிவுபடுத்துகிறது.
இந்நிலையில், இலங்கைக்கு உதவ பாகிஸ்தானின் விமான உதவி அனுமதி வழன்குவதில் இந்தியா தாமதப்படுத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இதனையடுத்து இந்தியா தவறான தகவல்களைப் பரப்பியதற்காக பாகிஸ்தான் மீது வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கண்டனம் தெரிவித்தார்.
"இந்தியாவுக்கு எதிரான தவறான தகவல்களைப் பரப்புவதற்கான மற்றொரு முயற்சியான பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் அபத்தமான அறிக்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்லும் பாகிஸ்தான் விமானங்களுக்கு வான்வெளி அனுமதி வழங்குவதற்கான கோரிக்கை டிசம்பர் 1, 2025 அன்று மதியம் 1.30 மணிக்கு இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தால் பெறப்பட்டது.
மனிதாபிமான உதவியின் அவசரத்தைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசாங்கம் அதே நாளில் கோரிக்கையை விரைவாக செயல்படுத்தி, டிசம்பர் 01, 2025 அன்று 17.30 மணிக்கு முன்மொழியப்பட்ட பயணத்திட்டத்தின்படி வான்வெளி அனுமதியை வழங்கியது," என்று அவர் கூறினார்.
இந்த சவாலான காலங்களில் இலங்கை மக்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும் உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் கூறியது. பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் தவறான தகவல்களின் அம்சத்தை இந்தியா சுட்டிக்காட்டியது. இந்த சம்பவம் ஆக்ஸ்போர்டு யூனியன் விவாதத்தில் இந்தியா பங்கேற்பது தொடர்பான தவறான கருத்துக்கள் உட்பட, பாகிஸ்தான் ஊடகங்கள்,ராஜதந்திர கையாளுதல்கள், தவறான பேச்சுக்களை பரப்புவதற்கான வேலைகளை சமீபத்திய காலமாக தொடர்ந்து வருகிறது என்றும் குறிப்பிட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்குச் செல்லும் மனிதாபிமான உதவி விமானங்களுக்கு வான்வெளியை இந்தியா பாகிஸ்தானுக்கு வழங்க மறுத்ததாக வான்வெளியை வழங்க பாகிஸ்தான் ஊடகங்கள் தவறான கூற்றுக்களை வெளியிட்டன. இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயலால் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளத்தில் குறைந்தது 355 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 300 க்கும் மேற்பட்டோர் இன்னும் காணவில்லை.
வெள்ளிக்கிழமை தாக்கிய பலத்த காற்று, கனமழையுடன் கூடிய டிட்வா புயல், தீவு நாட்டின் நீண்ட காலத்திற்கு பிறகு ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தைக் கொண்டு வந்தது. இதனால் மலைப்பாங்கான மத்தியப் பகுதியில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய மிகவும் சவாலான இயற்கை பேரழிவு முழு நாட்டையும் தாக்கியது இதுவே முதல் முறை என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கூறியுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திங்களன்று ஜனாதிபதி திசாநாயக்கவுடன் பேசினார். டித்வா சூறாவளியால் ஏற்பட்ட துயரமான உயிர் இழப்பு, பரவலான பேரழிவு குறித்து மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்தார். டித்வா புயல் கரையைக் கடந்த பிறகு, இலங்கையில் நிவாரணம், மீட்புப் பணிகளுக்காக இந்தியா ஆபரேஷன் சாகர் பந்துவைத் தொடங்கியது.
