இடை விடாத கனமழை.. 7 மாவட்டங்களுக்கு விடுமுறை.. பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு
Heavy Rain | கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை உட்பட 7 மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கேப் விடாத கனமழை
வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் டெல்டா மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் சென்னை அருகே மையம் கொண்டது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. ஒருசில பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தொடர் கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தற்போதும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி உட்பட செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும் கனமழை தொடரும்..
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புபடி இன்று புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே போன்று நீலகிரி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

