MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • விண்வெளி வீரர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் எப்படி சிகிச்சை பெறுவார்கள்? முழு விவரம்!

விண்வெளி வீரர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் எப்படி சிகிச்சை பெறுவார்கள்? முழு விவரம்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் மருத்துவர்கள் இல்லை. ஆனால் விண்வெளி வீரர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் எப்படி மருத்துவ சிகிச்சை பெறுவார்கள்? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 30 2025, 02:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
How Astronauts Get Medical Treatment In Space
Image Credit : Google

How Astronauts Get Medical Treatment In Space

'ஆக்சியம் மிஷன் 4' திட்டத்தின் மூலம் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் அடங்கிய குழுவினர் பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் 16 நாள் தங்கி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றனர். அவர்கள் கையோடு சில உணவுப் பொருட்களையும் கொண்டு சென்றுள்ளனர். 

இது ஒருபக்கம் இருக்க, விண்வெளியில் மருத்துவர் இல்லை என்றால் விண்வெளி வீரர்கள் எப்படி சிகிச்சை பெறுவார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். விண்வெளியில் ஒரு முழுநேர மருத்துவர் எப்போதும் இல்லை என்றாலும், விண்வெளி வீரர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி கிடைக்கும். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
விண்வெளி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை
Image Credit : Axiom Space/ YouTube (Via ANI)

விண்வெளி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை

விண்வெளிக்குச் செல்லும் முன், விண்வெளி வீரர்கள் மிக விரிவான மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். உடல் ரீதியாக மிகவும் தகுதியானவர்கள் மட்டுமே விண்வெளி பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் தொடர்ச்சியான உடல்நலக் கண்காணிப்பு ஆகியவை நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.

அடிப்படை மருத்துவ பயிற்சிகள்

மேலும் ஒவ்வொரு விண்வெளி வீரர் குழுவிலும், குறைந்தது ஒரு விண்வெளி வீரர் குழு மருத்துவ அதிகாரியாக (CMO) நியமிக்கப்படுகிறார். இந்த அதிகாரிக்கு முதலுதவி, காயங்களுக்கு சிகிச்சை, ஊசி போடுவது, பல் பிடுங்குவது போன்ற அடிப்படை மருத்துவ பயிற்சிகள் சுமார் 40 மணி நேரம் வழங்கப்படுகின்றன. 

இது தவிர அனைத்து விண்வெளி வீரர்களுக்கும் அடிப்படை முதலுதவி, சி.பி.ஆர் (CPR) மற்றும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது தவிர விண்வெளி வீரர்கள் தங்கள் உடல்நலனை சுயமாக மதிப்பிட்டு, சில சிகிச்சைகளை மேற்கொள்ளவும் தனியாக பயிற்சி பெறுகின்றனர்.

34
விண்வெளியில் மருந்துகள் இருக்குமா?
Image Credit : ANI

விண்வெளியில் மருந்துகள் இருக்குமா?

இது மட்டுமின்றி சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) மற்றும் பிற விண்கலங்களில் வலி நிவாரணிகள், ஒவ்வாமை மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் உள்ளன. மேலும் இரத்த அழுத்த மானிட்டர்கள், இரத்த சர்க்கரை பரிசோதனை கருவிகள், காயங்களை சுத்தம் செய்யும் பொருட்கள் போன்ற அடிப்படை மருத்துவ உபகரணங்களும் அங்கு உள்ளன. நோயறிதலுக்கான சிறிய அல்ட்ராசவுண்ட் கருவிகள் போன்றவையும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும்.

வாரம் ஒருமுறை மருத்துவ கண்காணிப்பு

இது தவிர விண்வெளி வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பூமியில் உள்ள சிறப்பு மருத்துவர்கள் குழு விண்வெளி வீரர்களின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிப்பார்கள். அது மட்டுமின்றி விண்வெளி வீரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மருத்துவர்களுடன் வாரம் ஒருமுறை மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்வார்கள். 

விண்வெளி வீரர்களுக்கு உடல்நலக்குறைவு அல்லது உடலில் காயம் ஏற்பட்டால் அவர்கள் ஆடியோ மற்றும் வீடியோ இணைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதலை பெறுவார்கள்.

44
என்னென்ன உடல்நலக்குறைவு ஏற்படும்?
Image Credit : ANI

என்னென்ன உடல்நலக்குறைவு ஏற்படும்?

ஒருவேளை விண்வெளி வீரர்களுக்கு குணமாக முடியாத அளவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் அவசரமாக விண்கலம் மூலம் பூமிக்கு திரும்ப முடியும். விண்வெளி வீரர்களுக்கு விண்வெளியில் என்னென்னெ உடல்நலக்குறைவுகள் ஏற்படும்? என நீங்கள் கேட்கலாம்.

 பூமிக்கும், விண்வெளிக்கும் நிறைய மாறுபாடுகள் இருப்பதால் அங்கு செட் ஆகும் வரை சிறு உடல்நலக்குறைவு ஏற்படும். விண்வெளி வீரர்களுக்கு எலும்பு அடர்த்தி மற்றும் தசை இழப்பு ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கதிர்வீச்சு தாக்கமும் ஏற்படும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விண்வெளி
நாசா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Viral : வாக்குவாதம் செய்யத் தயக்கமா? உங்களுக்காக சண்டை போட ஆள் இருக்கு! கட்டணம் ரூ.2,600!
Recommended image2
Dubai Gold Road: உலகிலேயே முதல்முறையாக தங்கத்தால் ஒரு ரோடு.. நாமும் நடக்கலாம், எங்கே தெரியுமா?
Recommended image3
Baby With Thick Mustache: பிறந்த குழந்தைக்கு அடர்த்தியான மீசையா? இணையத்தை கலக்கும் ஈக்வடார் வீடியோ
Related Stories
Recommended image1
விண்வெளி பயணத்திற்கு முன் சுபான்ஷு சுக்லா கேட்ட ஏ.ஆர்.ரகுமான் பாடல்
Recommended image2
Shubhanshu Shukla: சர்வதேச விண்வெளி நிலையத்தில் காலடி பதித்த சுபான்ஷு சுக்லா! வரலாற்று சாதனை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved