MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • காசாவில் 8 பேரை பொது இடத்தில் சுட்டுக் கொன்ற ஹமாஸ்! டிரம்ப் கொடுத்த வார்னிங்!

காசாவில் 8 பேரை பொது இடத்தில் சுட்டுக் கொன்ற ஹமாஸ்! டிரம்ப் கொடுத்த வார்னிங்!

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு, காசாவில் தனது கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்ட ஹமாஸ் முயல்கிறது. இதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலுக்கு உதவியதாகக் கூறி 8 பேரை பொதுவெளியில் சுட்டுக் கொன்றுள்ளது.

2 Min read
Author : SG Balan
Published : Oct 16 2025, 04:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மீண்டும் காசாவைக் கைப்பற்ற முயலும் ஹமாஸ்
Image Credit : Asianet News

மீண்டும் காசாவைக் கைப்பற்ற முயலும் ஹமாஸ்

இஸ்ரேஸ் ஹமாஸ் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், பாலஸ்தீனிய காசா பகுதியில் தனது பிடியை மீண்டும் நிலைநாட்ட ஹமாஸ் முயற்சி செய்கிறது. காசாவில் தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் 8 பேரை பொதுவெளியில் நிறுத்தி சுட்டுக்கொலை செய்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று எச்சரித்துள்ள நிலையில், இந்த கொடூர நடவடிக்கையின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

பச்சை தலைப்பாகை அணிந்து துப்பாக்கி ஏந்திய பேர் கண்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில் உள்ள 8 ஆண்களை வீதியில் வைத்துச் சுட்டுக்கொல்வது வீடியோவில் காணப்படுகிறது. இந்தச் சம்பவம் திங்கட்கிழமை மாலை நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த எட்டுப் பேரும் எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டவர்கள் என ஹமாஸ் குற்றம்சாட்டுகிறது.

சுற்றியுள்ள கூட்டத்தினரிடையே, “அல்லாஹு அக்பர்” என்ற முழக்கங்களும் கேட்கின்றன. ஹமாஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், கொல்லப்பட்டவர்கள் "குற்றவாளிகள் மற்றும் இஸ்ரேலின் கூட்டாளிகள்" என்று கூறப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
ஹமாஸ் காசாவை கட்டுப்பாட்டில் வைக்க முயல்வது ஏன்?
Image Credit : X

ஹமாஸ் காசாவை கட்டுப்பாட்டில் வைக்க முயல்வது ஏன்?

இஸ்ரேலிய ராணுவம் (IDF) காசாவின் சில பகுதிகளில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அங்கு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப ஹமாஸ் விரைவாகத் தனது கட்டுப்பாட்டை மீண்டும் நிலைநாட்ட முயல்கிறது. உள்ளூர் ஆயுதக் கும்பல்களை ஹமாஸ் குறிவைக்கிறது.

இஸ்ரேலியப் படைகள் விலகிய பகுதிகளில், தங்களுக்கு எதிரானவர்களை அடையாளம் கண்டு கொல்வதன் மூலம் தங்கள் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயல்கிறது. இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளில் மக்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த கும்பல்களுக்கு எதிராகவே நடவடிக்கை எடுத்து வருவதாக ஹமாஸ் கூறுகிறது.

இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல்களின் போது கலைந்து சென்ற ஹமாஸ் குழுவினர் தற்போது மீண்டும் வீதிகளில் ரோந்து செல்லத் தொடங்கியுள்ளனர். காசாவுக்கு வந்த நிவாரணப் பொருட்களைக் கடத்தி அதிக விலைக்கு விற்ற கும்பல்களுக்கு எதிராகவே ஹமாஸ் செயல்படுவதாக சில பாலஸ்தீனியர்கள் கருதுகின்றனர்.

33
ஹமாஸ் குழுவுக்கு டொனால்டு டிரம்பின் எச்சரிக்கை
Image Credit : ANI

ஹமாஸ் குழுவுக்கு டொனால்டு டிரம்பின் எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார். "அவர்கள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், நாங்கள் அவர்களை நிராயுதபாணிகளாக்குவோம். அது விரைவாகவும், ஒருவேளை வன்முறையாகவும் நடக்கும்," என்று டிரம்ப் எச்சரித்தார். ஆனால், ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடுவதற்கான காலக்கெடு எதையும் அவர் தெரிவிக்கவில்லை.

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் முற்றிலுமாக கலைக்கப்படும் வரை போர் நிற்காது என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஹமாஸ் ஆயுதங்களுடன் இருக்கும் வரை, அது காசாவில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தும் என்றும், தனது இராணுவத் திறன்களை மீண்டும் கட்டியெழுப்ப முயலும் என்றும் இஸ்ரேலியர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்பதை முழுமையாக ஏற்கவில்லை. மேலும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறி வருகிறது. போர்நிறுத்த காலத்தில் குழப்பம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளத் தாங்கள் விரும்புவதாகவும் ஹமாஸ் கூறுகிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
உலகம்
டொனால்ட் டிரம்ப்
ஹமாஸ்
காசா
இசுரேல்
பாலஸ்தீனம்
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(7.2 ov)71/1
INDIND
(20.0 ov)191/8
NZ need 121 runs in 76 balls
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Viral : வாக்குவாதம் செய்யத் தயக்கமா? உங்களுக்காக சண்டை போட ஆள் இருக்கு! கட்டணம் ரூ.2,600!
Recommended image2
Dubai Gold Road: உலகிலேயே முதல்முறையாக தங்கத்தால் ஒரு ரோடு.. நாமும் நடக்கலாம், எங்கே தெரியுமா?
Recommended image3
Baby With Thick Mustache: பிறந்த குழந்தைக்கு அடர்த்தியான மீசையா? இணையத்தை கலக்கும் ஈக்வடார் வீடியோ
Related Stories
Recommended image1
டிரம்பை கண்டு அஞ்சும் பிரதமர்.. இந்திய விஷயங்களில் டிரம்ப் முடிவெடுக்க அனுமதிப்பதா..? ராகுல் சரமாரி கேள்வி
Recommended image2
ஒரே வாரத்தில் முடிக்க வேண்டிய போர்.. போர் வெறி பிடித்த புடின்.. டிரம்ப் குற்றச்சாட்டு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved