- Home
- உலகம்
- அடுக்குமாடி குடியிருப்பு பயங்கர தீ விபத்து! 44 பேர் உடல் கருகி ப*லி! 279 பேர் எங்கே? திட்டமிட்ட சதி அம்பலம்?
அடுக்குமாடி குடியிருப்பு பயங்கர தீ விபத்து! 44 பேர் உடல் கருகி ப*லி! 279 பேர் எங்கே? திட்டமிட்ட சதி அம்பலம்?
ஹாங்காங்கின் தை போவில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். 279 பேர் மாயமாகியுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கின் தை போவில் உள்ள ஒரு கட்டிட வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44ஆக உயர்ந்துள்ளது. 279 பேர் மாயமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பு வளாகத்தின் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தின் அதிகாரிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹாங்காங்கின் வாங் ஃபுக் கோர்ட் என்ற பல மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் பராமரிப்புப் பணிகளுக்காக சுற்றிலும் அமைக்கப்பட்டிருந்த மூங்கில் சாரங்களால் தீ மளமளவென அனைத்து இடங்களில் பரவியது.
வாங் ஃபுக் கோர்ட் என்பது எட்டு பிளாக்குகளில் சுமார் 2000 குடியிருப்புகளைக் கொண்ட ஒரு குடியிருப்பு கட்டிடம். ஹாங்காங்கில் அதிக குடியிருப்பாளர்களைக் கொண்ட கட்டிடங்களில் ஒன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது 800க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயை அணைக்கும் முயற்சியில் 37 வயது தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தார். இரவில் 7 கட்டிடங்களில் தீ பரவியிருந்தது. நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு, தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு நான்கு கட்டிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை தீ விபத்தில் சிக்கி 44 உயிரிழந்துள்ளதாகவும், 29 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மற்றொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால் 279 பேர் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு 1400 வீடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஹாங்காங் வீட்டு வசதி அமைச்சர் தெரிவித்தார். இதில் 280 வீடுகள் தை போவிலேயே உள்ளதாகவும் அமைச்சர் விளக்கினார். தை போ மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1983ல் கட்டப்பட்ட பல மாடி கட்டிடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தைச் சுற்றியிருந்த மூங்கில் சாரங்கள் தீ வேகமாகப் பரவக் காரணம் என்று தெரியவந்துள்ளது. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 4600 குடியிருப்பாளர்களும் 1984 வீடுகளும் உள்ளன. பாலிஸ்டிரீன் போர்டுகள் ஜன்னல் பார்வையை மறைத்ததும், மூங்கில் பயன்பாடும் தீ கட்டுப்பாட்டை மீறிச் சென்றதற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. தீ இன்னும் முழுமையாக அணைக்கப்படவில்லை. பல இடங்களில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறி வருகிறது.

