- Home
- உலகம்
- இந்துக்களாக மாறிய 2 லட்சம் இத்தாலியர்கள்..! ஐரோப்பாவின் 2வது பெரிய பூர்வீக இந்து மக்கள் தொகை..! இந்தியாவை நேசிப்பதாக பூரிப்பு..!
இந்துக்களாக மாறிய 2 லட்சம் இத்தாலியர்கள்..! ஐரோப்பாவின் 2வது பெரிய பூர்வீக இந்து மக்கள் தொகை..! இந்தியாவை நேசிப்பதாக பூரிப்பு..!
தற்போது இத்தாலியில் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய பூர்வீக இந்து மக்கள் தொகை உள்ளது. இதில் மதிப்பிடப்பட்ட 80% பேர் உள்ளூர் இத்தாலியர்கள் ஆவர். குடியரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஒன்றியம் அமைதி மற்றும் ஒற்றுமைக்காக நிற்கிறது.

‘‘200,000-க்கும் மேற்பட்ட இத்தாலியர்கள் இந்துக்கள் ஆவர். நாங்கள் இத்தாலியக் குடியரசுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். நாங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மதம்’’ என இத்தாலிய இந்து ஒன்றியத்தின் தலைவர் ஃபிராங்கோ டி மரியா ஜெயேந்திரநாதா தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். இத்தாலியில் சுமார் 223,000 இந்துக்கள் வசித்து வருகின்றனர். இது மொத்த மக்கள்தொகையில் 0.4%ஐ உள்ளடக்கியது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியா, நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து குடியேறியவர்கள். இவர்களை தவிர 2 லட்சம் இத்தாலியர்கள் இந்துக்களாக மாறியுள்ளனர். ஃபிராங்கோ டி மரியா ஜெயேந்திரநாதா இத்தாலிய இந்து யூனியன் தலைவராக இருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "இத்தாலியில் 200,000க்கும் மேற்பட்ட இத்தாலியர்கள் இந்துக்களாக உள்ளனர் என்று கூறியுள்ளார், இந்து மதம் இத்தாலியில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மதமாகும். இத்தாலிய அரசுடன் இந்து யூனியன் கையெழுத்திட்ட ஒப்பந்தம் மூலம், தீபாவளி போன்ற பண்டிகைகள் அதிகாரப்பூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றன. இந்து சமூகம் இத்தாலியில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக ரோம், மிலன் போன்ற நகரங்களில் கோயில்கள் சமூக நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
தற்போது இத்தாலியில் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய பூர்வீக இந்து மக்கள் தொகை உள்ளது. இதில் மதிப்பிடப்பட்ட 80% பேர் உள்ளூர் இத்தாலியர்கள் ஆவர். குடியரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஒன்றியம் அமைதி மற்றும் ஒற்றுமைக்காக நிற்கிறது. நாங்கள் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கிறோம். நாங்கள் இந்தியாவை மிகவும் நேசிக்கிறோம். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட இத்தாலியர்கள் இந்துக்களாக உள்ளனர். நாங்கள் இத்தாலியக் குடியரசுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம். நாங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மதமாக இருக்கிறோம். இதன் மூலம் எங்கள் மதத்திற்கு நிதி உதவி வழங்க முடியும். ஐரோப்பாவில் இந்த வகையான அங்கீகாரத்தைப் பெற்ற ஒரே நாடு நாங்கள் தான். நாங்கள் அனைத்து வகையிலும், நிபந்தனையின்றி பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள். நாங்கள் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கிறோம், அந்த நாட்டை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம்" என்றார்.
