- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அம்மா நீங்க ரீல் ஓட்டுனது போதும்... விஜயாவுக்கு வில்லனாக மாறிய முத்து - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
அம்மா நீங்க ரீல் ஓட்டுனது போதும்... விஜயாவுக்கு வில்லனாக மாறிய முத்து - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
சிறகடிக்க ஆசை சீரியலில் ஏமாற்றி டாக்டர் பட்டம் வாங்க இருந்த விஜயாவை வசமாக சிக்க வைத்துள்ளார் முத்து. அதன் பின் என்ன ஆனது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா டாக்டர் பட்டம் வாங்குவதற்காக சமூக சேவை செய்வது போல் நடித்து வரும் விஷயம் கோமதி மூலம் முத்துவுக்கு தெரியவருகிறது. தன்னுடைய அம்மா சீட்டிங் பண்ணி தான் டாக்டர் பட்டம் வாங்கப் போகிறார் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடிவெடுக்கும் முத்து - மீனா ஒரு பிளான் ஒன்றை போடுகிறார்கள். விஜயா தன்னுடைய யோகா செண்டருக்கு செல்லும் வழியில் அவரிடம் ஒரு பெண் தன்னுடைய மகனின் படிப்பு செலவுக்கு உதவி கேட்கிறார். அதற்கு விஜயா, உன் புள்ள படிச்சா என்ன படிக்கலேனா எனக்கென்ன என சொல்லிவிட்டு செல்கிறார்.
வீடியோ எடுக்கும் மீனா
அதேபோல் முத்து பிச்சைக்காரன் போல் வேடமிட்டு, நடுரோட்டில் விஜயாவிடம் பிச்சை கேட்கிறார். விஜயா பிச்சை போட மறுக்க, அவரை பின் தொடர்ந்து வந்து பிச்சை கேட்கிறார். அதனால் கடுப்பான விஜயா, கோபத்தில் கம்பெடுத்து பிச்சக்காரனை அடிவெளுக்கிறார். இதை மீனா ஒளிந்து நின்று வீடியோ எடுத்துவிடுகிறார். பின்னர் யோகா செண்டரில் தனக்கு டாக்டர் பட்டம் வழங்க சிபாரிசு செய்வதாக சொல்லி இருந்த கோகிலா காத்திருக்க, அவரிடம் சென்று, தன்னைப் பற்றி மிகவும் பில்டப் செய்து பேசுகிறார். அதைக்கேட்டு கோகிலாவும், தான் உங்களுக்கு டாக்டர் பட்டம் வழங்க சிபாரிசு செய்வதாக கூறுகிறார்.
விஜயாவிற்கு ஆப்பு வைத்த முத்து
இதையடுத்து உள்ளே எண்ட்ரி கொடுக்கும் முத்து, கோகிலாவிடம் ஒரு வீடியோவை காட்டுகிறார். அது என்ன வீடியோ என விஜயா கேட்க, நீங்க பூ சுத்துன வீடியோ என சொல்கிறார் முத்து. விஜயா பிச்சக்காரனை அடிக்கும் வீடியோவை பார்த்து டென்ஷன் ஆன கோகிலா, என்ன நினைச்சிட்டு இருக்கீங்க, என்னை ஏமாத்துறீங்களா... உங்களை சமுதாய அக்கறை இருப்பவர் என நினைத்தேன். ஆனா நீங்க சாதாரண மனுஷங்கள எப்படி நடத்துறீங்கனு நல்லா தெரிஞ்சுகிட்டேன். நல்ல வேளை நான் ஏமாந்து உங்களை டாக்டர் பட்டத்துக்கு சிபாரிசு செய்யல. அப்படி பண்ணிருந்தா எனக்கு தான் பெயர் கெட்டுப் போயிருக்கும் என திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் கோகிலா.
அடிவாங்கும் மனோஜ்
மறுபுறம் தன்னை ஏமாற்றிய ராணியின் வீட்டுக்கு செல்லும் மனோஜ், கையில் பூவை சுற்றிக் கொண்டு வருகிறார். எதுக்கு இப்படி வந்திருக்கீங்க என ராணி கேட்டதற்கு, உன்கிட்ட தப்பா நடந்துக்காமயே நீ என்மேல் பழிபோட்டேல, அதனால் உண்மையிலேயே அப்படி பண்ணலாம்னு வந்திருக்கேன் என சொல்லுகிறார். பின்னர் ராணி கத்தி கூச்சல் போட்டதை அடுத்து, மனோஜை அக்கம் பக்கத்தினர் அடி வெளுக்கிறார்கள். இந்த முறையும் பிளான் சொதப்பியதால் வசமாக சிக்கிக் கொள்கிறார் மனோஜ். இதன்பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.