சன்னி லியோனாக மாறிய சுனிதா... இணையத்தை அதிரவிடும் பிகினி போட்டோஸ் இதோ
விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் சுனிதா. அவர் நீச்சல் உடையில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகிறது.

Sunita Gogoi SwimSuit Photos Viral
அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்தவர் சுனிதா. நடனத்தின் மீது ஈடுபாடு கொண்டிருந்த சுனிதா, வட மாநிலங்களில் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்பின்னர் சென்னைக்கு வந்த சுனிதா, விஜய் டிவி நடத்திய டான்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அதன்பின்னர் சினிமாவிலும் நடிக்கத் தொடங்கினார் சுனிதா.
சினிமாவில் நடிக்கும் சுனிதா
நடிகை சுனிதா, தனுஷ் நடிப்பில் வெளியான மூணு திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்திருந்தார். அப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனின் பள்ளித் தோழியாக நடித்திருந்தார் சுனிதா. இதன்பின் பெரியளவில் பட வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் சின்னத்திரை பக்கம் திரும்பினார் சுனிதா.
குக் வித் கோமாளி
சுனிதா அசாம் மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர் சென்னைக்கு வந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் கற்றுக்கொண்டார். அவர் கொஞ்சி பேசும் தமிழுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும்போது இவர் தமிழில் பேசி அட்ராசிட்டி செய்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.
பிக் பாஸ் சென்ற சுனிதா
சுனிதா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் சண்டைக்கோழியாக வலம் வந்த சுனிதா பாதியிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.
மீண்டும் விஜய் டிவியில் சுனிதா
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்டார் சுனிதா. அதில் போட்டியாளராக கலந்துகொண்ட உமைர் உடன் சுனிதா காதல் வயப்பட்டதாக கிசுகிசுக்கள் பரவின.
பிகினியில் சுனிதா
இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் சுனிதா. சினிமா ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சுனிதா நடத்தியுள்ள பிகினி போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

