- Home
- Cinema
- தொலைக்காட்சி
- அடிச்சு புடிச்சு ஓடி வந்த மீனா: எல்லாத்துக்கும் ஆமா சாமி போட்ட தங்கமயில்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அதிரடி ஆக்ஷன்!
அடிச்சு புடிச்சு ஓடி வந்த மீனா: எல்லாத்துக்கும் ஆமா சாமி போட்ட தங்கமயில்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அதிரடி ஆக்ஷன்!
Thangamayil Shocking Statement against Pandian Family: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 677ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்று இந்த தொகுப்பில் முழுவதும் பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 677ஆவது எபிசோடு
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 677ஆவது எபிசோடில் தனது தம்பியின் கையை பிடித்து கொண்டு கோமதி கதறி அழுதார். எங்கள் மீதே இப்படியொரு புகார் கொடுத்துவிட்டாள். சரவணன் வாழ்க்கையை கெடுத்துவிட்டு இப்போது அவன் மீதே புகார் கொடுத்திருக்காங்க. நான் எப்படி அவளை பார்த்து கொண்டேன் உனக்கு தெரியும். ராஜீ மற்றும் அரசியை பாரு. அவங்க என்ன தப்பு பண்ணாங்க என்று கூறி கதறி அழுதார்.
தம்பியை பார்த்து கதறி அழுத கோமதி
மேலும், உன்னுடைய மச்சான் எப்போதும் நிலை குலையாமல் இருப்பார். ஆனால், இப்போது எப்படி இருக்கிறார் என்று பார் என்றார். இதையடுத்து சரவணன் நீ கொஞ்சம் பொறுமையாக இரு. நீ விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் தான் இப்போது கோபத்தில் இப்படியொரு வேலையை பார்த்துவிட்டாங்க. சந்தோஷமாக வாழ்வார்கள் என்று தான் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைத்தோம். ஆனால், இப்போது, அவர்கள் செஞ்ச வேலையை பார்த்தீயா என்று பாண்டியன் கூறினார். அவர்கள் பண்ணுனதுக்கு அவர்கள் கண்டிப்பாக அனுபவிப்பார்கள் என்று பழனிவேல் ஆறுதல் கூறினார். அடுத்ததாக மேடம், எங்களை வைத்து விசாரிங்க. கோமதிக்கு உடல்நிலை சரியில்லை. அவர்களை வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள் என்று கேட்க, சார் சும்மா சும்மா இப்படி வந்து நிற்காதீர்கள் என்றார்.
போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மீனா:
இதைத் தொடர்ந்து மீனாவின் காட்சிகள் ஒளிபரப்பானது. இதில் ஸ்டேஷனுக்கு வந்த மீனா அத்தையை பார்த்து பேசினார். அத்தை நான் அவர்கள் வீட்டிற்கு போயிருந்தேன். கொஞ்ச நாள் அமைதியாக இருங்கள். எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்னேன். ஆனால், இப்படி செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. அதனால் தான் என் மீது புகார் கொடுக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். பின்னர், பழனிவேல் மற்றும் மீனா இருவரும் பேசிக்கொண்டனர். அதில், சரவணன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருக்கிறான். அதனால், தான் அவர்கள் இப்போது புகார் கொடுத்திருக்கிறார்.
நாடகத்தை அரங்கேற்றிய தங்கமயில் மற்றும் பாக்கியம்
இதெல்லாம் குடும்பத்தை பழி வாங்க அவர்கள் ஆடிய நாடகம். அப்புறம், என்ன, பாக்கியம் மற்றும் தங்கமயிலின் நாடகம் அரங்கேறியது. இதில் எஸ் ஐ ஸ்டேட்மெண்ட் வாங்க வந்த போது, கடுமையான காய்ச்சல், நீண்ட நாட்களாக சாப்பிடாமல் இருந்த்து போன்று படுக்கையில் படுத்தபடி இருந்தார். எஸ் ஐ வந்து விசாரிக்க தங்கமயில் அமைதியாக இருக்கவே பாக்கியம் மட்டும் தான் பதிலளித்தார். இதனால், கோபமடைந்த எஸ்ஐ நீ கொஞ்சம் அமைதியாக இரு. நான் அவரிடம் தான் விசாரிக்கிறேன் என்றார்.
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துனாங்க:
இதையடுத்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துனாங்க என்று பாக்கியம் சொல்ல ஆமாம் என்றார், இதே போன்று அடிச்சு துன்புறுத்தினாங்க என்று சொல்ல ஆமாம் என்றார். மேலும், வேலைக்கு போக சொல்லியும், வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும் பார்க்க சொல்லியும் வற்புறுத்துகிறார்கள் என்றும் சொல்ல ஆமாம் என்றார். இப்படியே தங்கமயிலிம் ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கினார்கள்.
ஸ்டேஷனுக்கு வந்த மீனாவின் அப்பா
கடைசியாக மீனாவின் அப்பா ஸ்டேஷனுக்கு வந்தார். மீனாவிடம் என்ன நடந்தது என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை அப்பா என்றார். கடைசியாக முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் வழக்கறிஞரை பார்த்து பேசிக் கொண்டிருக்கும் போது மீனாவின் அப்பாவும் அவர்களிடம் பேசினார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடு முடிந்தது.
அடுத்து என்ன நடக்கும்?
பாக்கியம் நினைத்தபடி விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்டு தங்கமயிலை ஏற்று கொள்வார்களா? இல்லை பாண்டியன் குடும்பத்தினர் வைராக்கியத்தோடு இருந்து இந்த வழக்கை நட்த்துவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எதிர்பார்ப்பு:
வரதட்சணை வழக்கு மற்றும் உடல், உணர்ச்சி, மன ரீதியாக துன்புறுத்தல் என்று பல வழக்குகள் பாண்டியன் குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ளது. இது உண்மை என்று தங்கமயிலும் கையெழுத்திட்டுள்ளார். இந்த நிலையில் தான் அடுத்ததாக அவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு கோர்ட்டுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டியன் குடும்பத்தினருக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.