- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்..!
சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் அதிக வியூஸ்களை வாரிசுருட்டிய டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்..!
சின்னத்திரையில் சீரியல்களை போட்டிபோட்டு ஒளிபரப்பி வரும் சன் டிவி, விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் ஆகிய சேனல்களின் டாப் 5 சீரியல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Top 5 Most Watched Tamil Serials
சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதால், முன்பெல்லாம் வாரத்தின் ஐந்து நாட்கள் மட்டும் ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் தற்போது வாரத்தின் ஏழு நாட்களும் ஒளிபரப்பாகின்றன. இதனால் சீரியல்களுக்கான டிஆர்பி ரேட்டிங்கும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், 2025-ம் ஆண்டின் 42வது வாரத்திற்கான டிஆர்பி பட்டியலில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஆகியவற்றில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 சீரியல்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது. அதில் என்னென்ன சீரியல்கள் இடம்பிடித்துள்ளன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சன் டிவி டாப் 5 சீரியல்கள்
டிஆர்பி கிங் ஆக திகழ்ந்து வரும் சன் டிவியில், டாப் 5 சீரியல்கள் பட்டியலில் முதலிடத்தை சிங்கப்பெண்ணே சீரியல் பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு 10.86 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதையடுத்து இரண்டாவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியல் உள்ளது. இந்த சீரியல் 10.55 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது. அடுத்ததாக 9.65 புள்ளிகளுடன் கயல் சீரியல் மூன்றாவது இடத்தில் உள்ளது. நான்காவது இடத்தை பிடித்திருக்கும் மருமகள் சீரியலுக்கு 9.17 டிஆர்பி கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பிடித்திருக்கிறது. இந்த சீரியலுக்கு 8.96 டிஆர்பி கிடைத்திருக்கிறது.
விஜய் டிவி டாப் 5 சீரியல்கள்
விஜய் டிவியில் இந்த வாரம் அய்யனார் துணை சீரியல் தான் முதலிடத்தை பிடித்துள்ளது. வழக்கமாக முதலிடத்தில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலை பின்னுக்கு தள்ளி 8.13 டிஆர்பி உடன் நம்பர் ஒன் சீரியலாக ஜொலிக்கிறது அய்யனார் துணை. இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள சிறகடிக்க ஆசை சீரியலுக்கு 7.81 புள்ளிகள் கிடைத்துள்ளன. 7.27 புள்ளிகள் உடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மூன்றாம் இடத்தில் உள்ளது. நான்காம் இடத்தை பிடித்துள்ள சின்ன மருமகள் சீரியலுக்கு 6.32 புள்ளிகள் கிடைத்துள்ளது. ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கும் சிந்து பைரவி சீரியலுக்கு 4.96 புள்ளிகள் கிடைத்துள்ளன.
ஜீ தமிழ் டாப் 5 சீரியல்கள்
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் டாப் 5 சீரியல்கள் பட்டியலில் வீரா சீரியல் தான் முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த சீரியலுக்கு 4.77 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதையடுத்து இரண்டாம் இடத்தில் உள்ள கார்த்திகை தீபம் சீரியலுக்கு 4.59 புள்ளிகள் கிடைத்திருக்கின்றன. மிர்ச்சி செந்தில் நடித்த அண்ணா சீரியல் 4.54 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. நான்காம் இடத்தில் உள்ள அயலி சீரியலுக்கு 4.39 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் ஐந்தாம் இடத்தை சின்னஞ்சிறு கிளியே என்கிற சீரியல் பிடித்துள்ளது. அதற்கு 4.34 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது.