ஒரே நேரத்தில் 2 முக்கிய சீரியல்களை இழுத்து மூடும் சன் டிவி... காரணம் என்ன?
சன் டிவி சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அப்படி இருக்கையில் அதில் ஒளிபரப்பாகி வந்த இரண்டு முக்கியமான சீரியல்கள் விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட உள்ளதாம்.

Sun TV Serials End Soon
சன் டிவி சீரியல்களுக்கு பட்டி தொட்டியெங்கும் வரவேற்பு கிடைப்பதால் தான் அந்த சேனல் டிஆர்பியில் நம்பர் 1 இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய சேனல்கள் சீரியல்களை ஒளிபரப்பினாலும், சன் டிவியை நெருங்க கூட முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக டிஆர்பி ரேஸில் தனிக்காட்டு ராஜாவாக சன் டிவி இருந்து வருகிறது. அதுவும் கடந்த சில மாதங்களாக டாப் 5 சீரியல்கள் இடத்தை சன் டிவி தான் ஆக்கிரமித்து உள்ளது. இந்த நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இரண்டு சீரியல்கள் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முடிவுக்கு வரும் சன் டிவி சீரியல்
அதில் ஒன்று மல்லி சீரியல். சன் டிவியில் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல், ஓராண்டுக்கு மேலாக வெற்றிநடைபோட்டு வந்தது. ஆரம்பத்தில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் நல்ல டிஆர்பி ரேட்டிங்கையும் பெற்று வந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தொடங்கப்பட்டதும், மல்லி சீரியலை தூக்கி இரவு 10 மணிக்கு போட்டனர். அப்போதிலிருந்தே அதன் டிஆர்பி சரியத் தொடங்கியது. பின்னர் ஆடுகளம் சீரியல் இரவு 10 மணிக்கு வந்ததும் மல்லி சீரியல் இரவு 10.30 மணிக்கு மாற்றப்பட்டது. இதனால் டிஆர்பி மேலும் அடிவாங்கியது.
மல்லி சீரியலுக்கு எண்டு கார்டு
நிகிதா ராஜேஷ் மற்றும் விஜய் வெங்கடேஷன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த சீரியலின் கதைக்களமும் போகப் போக டல் அடிக்க தொடங்கி உள்ளது. இதன் கதைக்களத்தை பொறுத்தவரை விஜய்யுடைய முதல் மனைவி என ஒரு கேரக்டரை கொண்டுவந்திருக்கிறார்கள். அது விஜய்யுடைய முதல் மனைவி கிடையாது என்கிற சீக்ரெட் உடைந்துவிட்டால் அந்த சீரியலில் அதன் பின்னர் பெரியளவில் எந்த ஒரு கதைக்களமும் இல்லை. இதனால் இந்த சீரியலை இம்மாத இறுதிக்குள் முடிவுக்கு கொண்டுவர சன் டிவி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலக்கியா சீரியல் முடிவுக்கு வருகிறது
சன் டிவி முடிவுக்கு கொண்டு வர உள்ள மற்றொரு சீரியல் இலக்கியா. இதில் சாம்பவி, நந்தன், சுஷ்மா நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த சீரியல் பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. சம்பந்தமே இல்லாம சொத்துக்களையெல்லாம் இழந்துவிட்டு அவர்கள் வெளியே வரும்படியான கதைக்களத்தை கொண்டு செல்கிறார்கள். கார்த்திக்கும் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்கும்படியான ஸ்டோரியும் இருக்கிறது. அவர்கள் குடும்பத்தோடு ஒன்று சேர்வதோடு இந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வர உள்ளார்களாம். இந்த சீரியல் 900 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.