MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் 2 சீரியல் படைத்த மிக மோசமான சாதனை

டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் 2 சீரியல் படைத்த மிக மோசமான சாதனை

சன் டிவியில் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகத்திற்கு டிஆர்பி ரேஸில் கடும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : May 30 2025, 02:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ethirneechal Thodargirathu Serial TRP
Image Credit : our own

Ethirneechal Thodargirathu Serial TRP

சன் டிவியில் சக்கைப்போடு போட்ட சிரியல்களில் எதிர்நீச்சல் சீரியலும் ஒன்று. இந்த சீரியலின் முதல் பாகம் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது. திருச்செல்வம் இயக்கிய இந்த சீரியல் ஒளிபரப்பான முதல் வாரத்தில் இருந்தே பிக் அப் ஆனது. இதனால் டிஆர்பியிலும் ஜெட் வேகத்தில் முன்னேறிச் சென்றது. இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க முக்கிய காரணமாக இருந்தது மாரிமுத்து தான். அவர் நடித்த ஆதி குணசேகரன் கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் டிஆர்பி பட்டியலில் எதிர்நீச்சல் சீரியல் தான் முதலிடத்தில் இருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மாரி முத்துவால் பிக் அப் ஆன எதிர்நீச்சல் சீரியல்
Image Credit : Google

மாரி முத்துவால் பிக் அப் ஆன எதிர்நீச்சல் சீரியல்

இப்படி டாப் கியரில் சென்றுகொண்டிருந்த எதிர்நீச்சல் சீரியலுக்கு திடீரென ஒரு சரிவு ஏற்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு இந்த சீரியலின் முதுகெலும்பாக இருந்த மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. மாரிமுத்துவின் மறைவு எதிர்நீச்சல் சீரியலுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

34
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஆரம்பம்
Image Credit : our own

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஆரம்பம்

இதையடுத்து மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கேரக்டரில் வேல ராமமூர்த்தி நடித்து வந்தார். ஆனால் மாரிமுத்து அளவுக்கு அவரால் அந்த கேரக்டரை தூக்கி நிறுத்த முடியவில்லை. அதேபோல் கதையை நகர்த்துவதிலும் சொதப்பியதால் வேறுவழியின்றி எதிர்நீச்சல் சீரியல் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. பின்னர் கதைக்களத்தை சற்று மாற்றி எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகம், எதிர்நீச்சல் தொடர்கிறது என்கிற தலைப்புடன் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. டிசம்பர் மாதம் முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

44
டிஆர்பி-யில் சரிவை சந்தித்த எதிர்நீச்சல் தொடர்கிறது
Image Credit : Google

டிஆர்பி-யில் சரிவை சந்தித்த எதிர்நீச்சல் தொடர்கிறது

முதல் பாகத்திற்கு இருந்த அளவுக்கு இரண்டாம் பாகத்திற்கு வரவேற்பு கிடைக்காததால் டிஆர்பியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நாளுக்கு நாள் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த சீரியல் கடந்த மாதம் வரை டாப் 10 பட்டியலில் 6ம் இடத்தில் இருந்த எதிர்நீச்சல் சீரியல், இந்த மாதம் 10ம் இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த சீரியலுக்கு கடந்த வாரம் 6.05 டிஆர்பி புள்ளிகள் தான் கிடைத்திருந்தது. எதிர்நீச்சல் சீரியல் முதல் பாகமும் சரி, இரண்டாம் பாகமும் சரி தொடங்கியதில் இருந்து இதுவரை இந்த அளவுக்கு குறைவான டிஆர்பி ரேட்டிங்கை பெற்றதில்லை. தற்போது மிக மோசமான சாதனையில் இடம்பிடித்துள்ள இந்த சீரியல் வரும் வாரங்களில் டாப் 10 பட்டியலில் இடம்பெறுவதே கேள்விக் குறியாக உள்ளது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சன் தொலைக்காட்சி
தொலைக்காட்சி
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Diwali Movies : தீபாவளி-க்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் என்னென்ன புதுப்படங்கள் வரப்போகுது? முழு லிஸ்ட் இதோ
Recommended image2
Bigg Boss-ல் விஜய் சேதுபதியை விட ரம்யா கிருஷ்ணனுக்கு அதிக சம்பளமா? அடேங்கப்பா ஒரு எபிசோடுக்கு இவ்வளவா?
Recommended image3
TTF Vasan Net Worth : யூடியூப்பில் கோடிக்கணக்கில் வருமானம்... டிடிஎஃப் வாசனின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ
Related Stories
Recommended image1
TRP ரேஸில் டம்மி பீஸ் ஆன எதிர்நீச்சல் 2! இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ
Recommended image2
எதிர்நீச்சல் 2-வில் பட்டாசாய் எண்ட்ரி ஆன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved