- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சன் டிவி vs விஜய் டிவி... சீரியல்களில் யார் டாப்பு? அசர வைக்கும் டாப் 10 சீரியல்களின் டிஆர்பி..!
சன் டிவி vs விஜய் டிவி... சீரியல்களில் யார் டாப்பு? அசர வைக்கும் டாப் 10 சீரியல்களின் டிஆர்பி..!
சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்களின் டிஆர்பி நிலவரம் வெளியாகி உள்ளது. இதில் டாப் 10 இடம்பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Top 10 Tamil Serial TRP Rating
சின்னத்திரை சீரியல்களின் சக்சஸை அதன் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தான் கணிப்பார்கள். ஒவ்வொரு வாரமும் சின்னத்திரை சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் நிலவரம் வெளியிடப்படும். இந்த வாரத்திற்கான டிஆர்பி நிலவரம் தாமதமாக வெளியிடப்பட்டது. ஏனெனில் இந்த வாரம் விநாயகர் சதுர்த்தி விடுமுறையால் ஒரு நாள் தாமதமாக டிஆர்பி ரேட்டிங்கை BARC வெளியிட்டுள்ளது. இதில் எந்தெந்த சீரியல்கள் எவ்வளவு டிஆர்பி ரேட்டிங்கை பெற்றன. கடந்த வாரத்தை போல் இந்த வாரம் விஜய் டிவி சீரியல்களை சன் டிவி சீரியல்கள் டாமினேட் பண்ணியதா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டாப் 10 தமிழ் சீரியல்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புராண கதையம்சம் கொண்ட தொடரான இராமாயணம் தான் இந்த வாரமும் 10வது இடத்தில் உள்ளது. கடந்த வாரம் 7.07 டிஆர்பியை பெற்றிருந்த இந்த தொடருக்கு இந்த வாரம் 6.40 புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளது. அடுத்தபடியாக விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் உள்ளது. கடந்த வாரத்தைப் போல் இந்த வாரமும் 9-வது இடத்தை தக்க வைத்துள்ள இந்த சீரியலுக்கு 7.02 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது. கடந்த வாரம் 8.02 புள்ளிகளுடன் 8-ம் இடத்தில் இருந்த அய்யனார் துணை சீரியல், இந்த வாரம் டிஆர்பியில் சற்று சரிவை சந்தித்து 7.67 ரேட்டிங்கை பெற்றுள்ளது.
மீண்டும் சீனுக்கு வந்த சிறகடிக்க ஆசை
கடந்த வாரம் விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான சிறகடிக்க ஆசை, 8.34 புள்ளிகளுடன் 7ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருந்தது. ஆனால் இந்த வாரம் டிஆர்பியில் பிக் அப் ஆனதோடு, ஒரு இடம் முன்னேறி 6ம் இடத்தை பிடித்துள்ள அந்த சீரியலுக்கு 8.37 ரேட்டிங் கிடைத்திருக்கிறது. மறுபுறம் கடந்த வாரம் 6-ம் இடத்தை பிடித்திருந்த சன் டிவியின் அன்னம் சீரியல், 8.61 புள்ளிகளை பெற்றிருந்தது. ஆனால் இந்த வாரம் சரிவை சந்தித்த அன்னம் தொடர் 8.14 புள்ளிகளுடன் 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இதையடுத்து மருமகள் சீரியல் இந்த வாரமும் ஐந்தாம் இடத்தில் நீடிக்கிறது. இந்த சீரியலுக்கு 8.50 டிஆர்பி ரேட்டிங் கிடைத்திருக்கிறது.
டிஆர்பியில் டாப்பு யார்?
வழக்கம்போல் சன் டிவி சீரியல்கள் தான் இந்த வாரமும் முதல் நான்கு இடங்களை தட்டிதூக்கி இருக்கின்றன. குறிப்பாக நான்காவது இடத்தில் உள்ள எதிர்நீச்சல் சீரியல், கடந்த வாரம் 8.91 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், இந்த வாரம் அது 8.66 ஆக குறைந்துள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள கயல் சீரியல் கடந்த வாரம் 9.68 டிஆர்பியும், இந்த வாரம் 9.12 டிஆர்பியும் பெற்றிருக்கிறது. இரண்டாவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியல் உள்ளது. கடந்த வாரம் 10.24 புள்ளிகளை பெற்றிருந்த இந்த சீரியலுக்கு இந்த வாரம் வெறும் 9.59 புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளது. முதலிடத்தில் உள்ள சிங்கப்பெண்ணே சீரியல் கடந்த வாரத்தைக் (10.55) காட்டிலும் இந்த வாரம் கம்மியான டிஆர்பி (10.29) பெற்றிருக்கிறது.