- Home
- Cinema
- தொலைக்காட்சி
- TRP ரேஸில் டாப்புக்கு வந்த சிறகடிக்க ஆசை... இந்த வார டாப் 10 சீரியல் பட்டியலில் அதிரடி மாற்றம்..!
TRP ரேஸில் டாப்புக்கு வந்த சிறகடிக்க ஆசை... இந்த வார டாப் 10 சீரியல் பட்டியலில் அதிரடி மாற்றம்..!
சிறகடிக்க ஆசை, எதிர்நீச்சல் தொடர்கிறது, மருமகள், கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, அய்யனார் துணை, அன்னம் உள்பட இந்த வார டிஆர்பி ரேஸில் டாப் 10 இடம்பிடித்த சீரியல்களை பார்க்கலாம்.

Top 10 Tamil Serial TRP Rating
சினிமாவுக்கு பாக்ஸ் ஆபிஸ் வசூல் போல், சின்னத்திரைக்கு டிஆர்பி ரேட்டிங். ஒரு சீரியலுக்கு எந்த அளவுக்கு ஆடியன்ஸ் மத்தியில் ரெஸ்பான்ஸ் இருக்கிறது என்பதை டிஆர்பி ரேட்டிங் மூலம் தான் கணிப்பார்கள். ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங் வெளியிடப்படும். அந்த வகையில் 2025-ம் ஆண்டின் 45-வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் நிலவரம் வெளியாகி இருக்கிறது. இதில் எந்தெந்த சீரியல் இடம்பெற்றுள்ளது? சன் டிவி சீரியல்களுக்கு அதிக டிஆர்பி கிடைத்ததா? விஜய் டிவி சீரியல்களுக்கு அதிக ரேட்டிங் கிடைத்ததா? என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
மீண்டும் டாப் 10-ல் சின்ன மருமகள்
டிஆர்பி ரேஸில் கடந்த சில வாரங்களாக தலைகாட்டாமல் இருந்தது விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல். இதற்கு காரணம் சன் டிவியின் ஆன்மிக தொடரான ஹனுமன் தான். கடந்த வாரம் 10வது இடத்தில் இருந்த ஹனுமன் சீரியல், இந்த வாரம் 11வது இடத்துக்கு தள்ளப்பட்டு, 10வது இடத்தை சின்ன மருமகள் சீரியல் தட்டிதூக்கி இருக்கிறது. அந்த சீரியலுக்கு 7.34 டிஆர்பி ரேட்டிங் கிடைத்துள்ளது. இதையடுத்து 8 மற்றும் 9-வது இடங்களை அய்யனார் துணை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்கள் தான் பிடித்துள்ளன. 8.09 புள்ளிகள் உடன் 9வது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும், 8.55 புள்ளிகள் உடன் 8-வது இடத்தில் அய்யனார் துணை சீரியலும் உள்ளது.
சரிந்த சன் டிவி சீரியல்கள்
சன் டிவியின் பிரைம் டைம் சீரியல்களில் ஒன்றான மருமகள், கடந்த வாரம் 8.63 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் இருந்த நிலையில், இந்த வாரம் சரசரவென சரிந்து 8.62 புள்ளிகளுடன் 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் 7-ம் இடத்தில் இருந்த அன்னம் சீரியல் இந்த வாரம் சற்று முன்னேறி 8.63 புள்ளிகள் உடன் ஆறாம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் 8.55 புள்ளிகள் உடன் 5-ம் இடத்தில் இருந்த சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இந்த வாரம் அதைவிட கூடுதலாக டிஆர்பி ரேட்டிங் (8.91) பெற்றிருந்தாலும் அதே இடத்தில் தான் நீடித்து வருகின்றது.
தூள்கிளப்பிய சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் கடந்த சில வாரங்களாக டாப் 5-ல் இடம்பெறாமல் இருந்தது. கடந்த வாரம் 8.41 புள்ளிகள் உடன் 6-ம் இடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை சீரியல், இந்த வாரம் மளமளவென முன்னேறி 9.35 புள்ளிகள் உடன் 4-ம் இடத்தை பிடித்திருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக 9.41 புள்ளிகளுடன் கயல் சீரியல் மூன்றாவது இடத்திலும், 9.48 புள்ளிகளுடன் சிங்கப்பெண்ணே சீரியல் இரண்டாவது இடத்திலும் நீடிக்கிறது. வழக்கம்போல் மூன்று முடிச்சு சீரியல் தான் இந்த வாரமும் டிஆர்பி ரேஸில் முதலிடம் பிடித்து அசத்தி உள்ளது. அந்த சீரியலுக்கு 10.18 புள்ளிகள் கிடைத்துள்ளன.

