- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ஆதி முத்து குடும்பத்தை பற்றி வெளிவரப்போகும் மர்மம்... குணசேகரன் எடுத்த விபரீத முடிவு - எதிர்நீச்சல் தொடர்கிறது
ஆதி முத்து குடும்பத்தை பற்றி வெளிவரப்போகும் மர்மம்... குணசேகரன் எடுத்த விபரீத முடிவு - எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் பற்றிய ரகசியங்களை தெரிந்துகொள்ள இராமேஸ்வரம் சென்றுள்ள சக்திக்கு ஹிண்ட் ஒன்று கிடைத்துள்ளது. அதைப் பற்றி பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகனின் ரூமில் இருந்து எடுத்த லெட்டரை வைத்துக் கொண்டு, அதை எழுதிய தேவகி யார் என்பதை தெரிந்துகொள்ள சக்தி இராமேஸ்வரம் கிளம்பி சென்றிருக்கிறார். அங்கு ஒவ்வொரு இடமாக சென்று அவர் விசாரித்து வந்த நிலையில், அந்த தகவல் ஆதி குணசேகரனுக்கு கிடைக்கிறது. சக்தியை பாலோ பண்ண தன்னுடைய ஆள் ஒருவரை அங்கு செட் அப் செய்து வைத்திருக்கும் ஆதி குணசேகரன், அவன் ஏதேனும் எல்லைமீறி சென்றால் அவனை முடிச்சிரு எனவும் சொல்லி இருந்தார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
உடையப்போகும் மர்மம்
சக்தி இராமேஸ்வரத்தில் உள்ள ஒரு ரிட்டயர்டு போஸ்ட் மேனை சந்திக்கிறார். அப்போது அந்த லெட்டரை காட்டி அவர் விசாரிக்கும் போது, அந்த நபர், இந்த லெட்டரை நான் தான் எழுதினேன் என சொல்கிறார். இதை எழுதச் சொன்னது ஒரு வட நாட்டுப் பெண், அவர் பெயர் தேவகி என்றும் சொல்கிறார். அவர் இப்போ எங்கு இருக்கிறார் என்று தெரியுமா என சக்தி கேட்க, அதற்கு அந்த பெரியவர், இங்கு நிறைய சத்திரங்கள் இருக்கு அங்க போய் தேடிப் பாருங்க என கூறுகிறார். இதனால் அந்த பெண்ணை தேடி கிளம்புகிறார் சக்தி. அப்போது ஜனனியிடம் இருந்து சக்திக்கு போன் வருகிறது.
ஜனனிக்கு வந்த சந்தேகம்
போனில் தான் அஸ்வின் வீட்டிற்கு போன விஷயத்தை கூறும் ஜனனி, இங்கு எதுவும் கிடைக்கவில்லை, ஆனா ஏதோ ஒரு விஷயம் மட்டும் இடிக்குது. இனனைக்கு நம்ம வீட்டிற்கு பிசினஸ் பேச வந்த ஆளுக்கும், முகமே காட்டாத மூன்றாவது நபர், இவை எல்லாத்துக்கும் பின்னாடி அந்த குணசேகரன் மட்டுமில்லை என தோணுது. குணசேகரன் சம்பந்தப்பட்ட வீடியோ வேற யார்கிட்டயாவது போயிருக்கானு கனெக்ட் பண்ணி பாக்கும்போது, எனக்கு ஒன்னே ஒன்னு மட்டும் இடிக்குது. என் கையில் ஒரு விசிடிங் கார்டு இருக்கு, நான் அங்கு சென்று விசாரிச்சுட்டு வருவதாக சொல்கிறார் ஜனனி. அவரை கவனமாக இருக்க சொல்லும் சக்தி, உன்னுடைய பெயரை எங்கும் சொல்லாத என கூறுகிறார்.
ஆர்டர் போட்ட ஆதி குணசேகரன்
சக்தி போஸ்ட் மாஸ்டர் வீட்டில் விசாரித்துவிட்டு சென்ற விஷயம் ஆதி குணசேகரனுக்கு தெரியவருகிறது. அவனை அங்கேயே முடிச்சி விட்ரு என உத்தரவிடுகிறார் குணசேகரன். இதனால் சக்தியை கொலை செய்ய அந்த ஆள் முடிவெடுத்து, அவரை பாலோ செய்கிறார். கடற்கரையில் காத்துவாங்கும் சக்தியை சுட்டுக் கொல்ல பிளான் போடுகிறார். இதையடுத்து என்ன ஆனது? ஆதி குணசேகரனின் பேச்சைக் கேட்டு சக்தியை அந்த நபர் சுட்டுக் கொன்றாரா? சக்தி இந்த சூழ்ச்சியில் இருந்து தப்பித்து, தேவகியை கண்டுபிடித்தாரா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.