MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • முன்னாள் காதலியை பார்த்து பேசிய சரவணன்: தடம் மாறியதா வாழ்க்கை? சீரியலில் அரங்கேறிய சென்டிமென்ட் ட்விஸ்ட்!

முன்னாள் காதலியை பார்த்து பேசிய சரவணன்: தடம் மாறியதா வாழ்க்கை? சீரியலில் அரங்கேறிய சென்டிமென்ட் ட்விஸ்ட்!

Saravanan Meets Ex Girlfriend Anjali : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 711ஆவது எபிசோடில் சரவணன் தனது முன்னாள் காதலி அஞ்சலியை கோயிலில் வைத்து சந்தித்த தருணம் ஒவ்வொரு காதல் ஜோடிகளுக்கும் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 09 2026, 03:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Saravanan Meets Ex Girlfriend Anjali
Image Credit : Jio Hotstar

Saravanan Meets Ex Girlfriend Anjali

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த வாரம் பாண்டியன், கோமதி, கதிர் மற்றும் ராஜீ தொடர்பான காட்சிகள் மாறி மாறி ஒளிபரப்பு செய்யப்பட்டன. மேலும், தனக்கு தெரியாமல் கதிருக்கு திருமணம் செய்து வைத்ததோடு மட்டுமின்றி இத்தனை நாட்களாக அதை தன்னிடம் சொல்லவில்லை என்று கூறி பாண்டியன் இதுவரையில் கோமதியிடம் பேசிக் கொள்ளவில்லை. 

26
Pandian Stores 2 Serial Today 711th Episode
Image Credit : Jio Hotstar

Pandian Stores 2 Serial Today 711th Episode

வீண் பிடிவாதமாக கோபத்தில் இருந்து வருகிறார். தனது கணவரிடம் ஒரு நாள் கூட பேசாமல் இருந்தது கிடையாது. அப்படியிருக்கும் போது இப்போது பல நாட்கள் கடந்தும் பாண்டியன் மற்றும் கோமதி இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. தனது கணவரிடம் பேச பல டிராமா போட்டும் அதற்குரிய பலன் கிடைக்கவில்லை.

36
Pandian Stores 2 Serial
Image Credit : Jio Hotstar

Pandian Stores 2 Serial

இது ஒரு புறம் இருக்க ரசிகர்களுக்கு போர் அடிக்க கூடாது என்பதற்காக கதிர் மற்றும் ராஜீயின் காதல் காட்சிகள் ஒளிபரப்பாகின. சென்னைக்கு கோட்சிங் கிளாஸில் சேர வந்த இருவரும் மெரினா பீச், ஹோட்டல், பார்க், துணிக்கடை என்று ஜாலியாக இருக்கின்றனர். இதே போன்று செந்தில் மற்றும் மீனா இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டாலும் இருவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள். 

46
Anjali and Saravanan Scene update today
Image Credit : Jio Hotstar

Anjali and Saravanan Scene update today

இதில் சரவணன் வாழ்க்கை மட்டும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் தான் இன்றைய 711ஆவது எபிசோடில் சரவணன் தனது முன்னாள் காதலியை பார்த்து பேசியுள்ளார். கோயிலில் நடந்த இந்த சந்திப்பின் முதல் சீனாக இருவரும் மோதிக்கொண்டனர். அதன் பின்னர் அஞ்சலி, சரவணன் என்று கூறிக் கொண்டு இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர். அஞ்சலி, சரவணனின் குடும்ப வாழ்க்கை பற்றி கேட்க, சரவணன், அஞ்சலியின் கல்யாண வாழ்க்கை பற்றி கேட்டார்.

56
Pandian Stores 2 Serial Saravanan and Anjali Love Secrets
Image Credit : Jio Hotstar

Pandian Stores 2 Serial Saravanan and Anjali Love Secrets

ஆனால், அஞ்சலியோ, தான் கணவருடன் இல்லை. இப்போது அம்மா வீட்டில் தான் இருக்கிறேன். திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது என்று கூறினார். மேலும், நான் திருமணம் வேண்டாம் என்று சொல்ல, அப்பா, அம்மாவோ விடாப்பிடியாக திருமணம் செய்து வைக்க அவசர அவசரமாக நடந்த திருமணம் என்று மன வேதனையுடன் கூறினார். இதைத் தொடர்ந்து வீட்டில் அப்பா, அம்மா, அரசி எல்லோரும் எப்படி இருக்காங்க என்று கேட்டார். கடைசியாக சரவணனின் மொபைல் நம்பரை கேட்டார். அதற்கு சரவணன் சற்று பதற்றத்துடன் தனது போன் நம்பரை கொடுத்தார்.

66
Saravanan and Anjali Love Memories Tamil Article
Image Credit : Jio Hotstar

Saravanan and Anjali Love Memories Tamil Article

அதோடு சரவணன் மற்றும் அஞ்சலி தொடர்பான காட்சிகள் முடிந்தன. இனி வரும் காலங்களில் இவர்கள் தொடர்பான காட்சிகள் சீரியலில் கூடுதலாக இருக்கும் என்றும், இருவரும் முறையாக விவாகரத்து பெற்ற பிறகு திருமணம் செய்யக் கூடும் என்றும் தெரிகிறது. மேலும், அப்படி சரவணன் மற்றும் அஞ்சலி திருமணத்தின் போது கோமதியின் அண்ணன்கள் மற்றும் தங்கமயிலின் குடும்பத்தினரால் பிரச்சனைகள் வரலாம் என்று கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சீரியல் நடிகைகளுக்கு வாரி வழங்கப்படும் சம்பளம்... யாருக்கு அதிகம்? யாருக்கு கம்மி தெரியுமா?
Recommended image2
தேவசகாயத்தின் பிளானை ஒட்டுக்கேட்ட ஜனனி... கதிரை கதிகலங்க வைத்த நந்தினி - எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ட்விஸ்ட்
Recommended image3
ட்விஸ்ட் வைத்த சரவணணின் முன்னாள் காதலி... மயிலுக்கு வில்லியாக மாறும் அஞ்சலி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved