- Home
- Cinema
- தொலைக்காட்சி
- உண்மையை கண்டுபிடித்த சரவணன் – காலில் விழுந்து கதறி அழுத தங்கமயில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
உண்மையை கண்டுபிடித்த சரவணன் – காலில் விழுந்து கதறி அழுத தங்கமயில் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
Saravanan Find The Truth about Thangamayil Age Difference : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயிலின் ஆதார் கார்டை பெற்று அதில் தங்கமயிலின் வயதை பார்த்து சரவணன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நாளுக்கு நாள் சரவணன் மற்றும் தங்கமயில் இடையிலான விரிசல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. எம் காம் படித்துள்ளதாக பொய் சொல்லி சரவணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்கள். அதோடு, தங்கமயில் வீட்டில் போட்டுவிட்ட நகை அனைத்தும் கவரிங். இதுல தங்கமயில் சர்வர் வேலை பார்ப்பது சரவணனுக்கு தெரிந்துவிட்டது.
சரவணன் மற்றும் தங்கமயில்
இதைத் தொடர்ந்து இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாத சரவணன், தங்கமயிலை அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார். அப்போது தான் தங்கமயில் கர்ப்பமாக இருப்பதாக கூறி மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தார். கொஞ்ச நாட்கள் அந்த டாபிக் சென்றது. ஒரு கட்டத்தில் தங்கமயில் கர்ப்பமாக இல்லை என்று தெரிந்து சரவணன் கோபம் அடைந்தார்.
சரவணன் மற்றும் தங்கமயில் வயது வித்தியாசம்
அதன் பிறகு அவரை விட்டு பிரிந்தார். வீட்டிற்குள் எல்லோர் முன்னிலையிலும் கணவன் மனைவி தான். ஆனால், அவர்கள் இருவரும் தனித்தனியாக இருந்தனர். இதைத் தொடர்ந்து தங்கமயிலின் அப்பா பாண்டியனின் கடையில் வேலை பார்க்க, தங்கமயிலும் கடைக்கு வேலைக்கு வந்தார். முதல் நாளில் ரூ.500 பணத்தை எடுத்த மாணிக்கம், அடுத்த நாள் ரூ.1100ஐ ஆட்டைய போட்டார். கடைசியாக தீபாவளி பண்டிகைக்கு மகளுக்கு சீர் செய்ய வேண்டும் என்று ரூ.10,000 பணத்தை எடுத்துக் கொண்டார்.
காலில் விழுந்து கதறி அழுத தங்கமயில்
ரூ.1100 பணம் எடுப்பதை பார்த்த சரவணன், தங்கமயிலிடம் கேட்டு சட்டையிட்டார். இச்சம்பவம் குறித்து தங்கமயில் தனது மாமனார், மாமியாரிடம் உள்டாவாக சொல்லி தப்பு செய்தது எல்லாம் சரவணன் என்று அவரை கை காட்டிவிட்டார். இப்போது தங்கமயிலே தனது வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டார். அவர் தன்னை விட வயதில் மூத்தவர் என்ற சந்தேகம் சரவணனுக்கு தோன்றியது.
வீட்டில் சொல்ல போவதாக மிரட்டல்
தான் 2010ல் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக சொல்லி மாட்டிக் கொண்டார். இதையெல்லாம் சரவணன் கேட்க தங்கமயில் மீது சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து தங்கமயிலிடம் ஆதார் கார்டு கேட்டார். ஆனால், அவர் கடைசி வரை எடுத்துக் கொடுக்கவே இல்லை. பின்னர் மக்கள் தொகை கணக்கெடுக்கிறார்கள். அதற்கு எல்லோருடைய ஆதார் கார்டும் வேண்டும் என்று கேட்டு பார்த்தார்.
மாணிக்கம் கொடுத்த ஆதார் கார்டின் விளைவு
ஆனால், தங்கமயில் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தான் மாணிக்கத்திடம் நான் தங்கமயிலுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க போகிறேன். அதற்கு ஆதார் கார்டு தேவைப்படுகிறது என்று கேட்டு பெற்றுக் கொண்டார். பின்னர் தங்கமயிலை தனியாக அழைத்துக் கொண்டு சென்று அவரது வாயாலேயே உண்மையை வரவழைத்தார். பின்னர் தன்னை விட 2 வயது மூத்தவர் என்ற உண்மை தெரிந்து அதிர்ச்சி அடைந்த சரவணன், தங்கமயில் பற்றிய உண்மையை வீட்டில் சொல்ல இருப்பதாக சொன்னார்.
இனி என்ன நடக்கும்?
இதையெல்லாம் கேட்டு தங்கமயில் காலில் விழுந்து கதறி அழுதார். ஆனால், சரவணனுக்கு வயது வித்தியாசத்தை எல்லாம் பெரியதாக நினைக்கவில்லை. அதனை மறைத்து ஏன், இத்தனை நாட்களாக டிராமா செய்ய வேண்டும். ஆதார் கார்டை கேட்கும் போதெல்லாம் ஏன் நாடகம் ஆட வேண்டும் என்ற வலியும், வேதனையும் தான் இப்போது கோபமாக மாறியது. தங்கமயில் பற்றிய உண்மையை வீட்டில் சொல்வாரா? அப்படி சொன்னால், பாண்டியன் மற்றும் கோமதியின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும். தங்கமயில் இதில் வேறேதாவது டிராமா செய்வாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.