- Home
- Cinema
- தொலைக்காட்சி
- காலையிலேயே நல்ல வியாபாரம்; கல்லாவில் கட்டுக்கட்டாக பணம் – ஆனு பாத்த சம்பந்தி மாணிக்கம்!
காலையிலேயே நல்ல வியாபாரம்; கல்லாவில் கட்டுக்கட்டாக பணம் – ஆனு பாத்த சம்பந்தி மாணிக்கம்!
Saravanan angry With Manickam : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 612ஆவது எபிசோடில் கல்லாப்பெட்டியில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதைப் பார்த்து தங்கமயிலின் அப்பா மாணிக்கம் ரொம்பவே ஆச்சரியமாக பார்த்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 612ஆவது எபிசோடில் மாமனார் வீட்டிக்ற்கு வந்த மீனாவின் காட்சிகள் முதலில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மாமனார் வீட்டிற்கு வந்ததும் எல்லோரையும் பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்ட மீனா காலை உணவாக பருப்பு சாம்பார் ஊற்றி இட்லி சாப்பிட்டு மதிய சாப்பாடும் கட்டிக் கொண்டு ஆபிஸிற்கு புறப்பட்டுச் சென்றார். மேலும், ராஜீயுடன் பேசிக் கொண்ட மீனா தனது வீட்டில் நடந்த எல்லாக் கதைகளையும் கூறிக் கொண்டே சென்றார்.
ராஜீயின் கதைகளை பற்றி கேட்டார்
பின்னர் ராஜீயின் கதைகளை பற்றி கேட்டார். பாண்டியன் டிராவல்ஸ் எப்படி போகிறது என்பது பற்றி விசாரித்தார். அதில், கதிர் உடன் இருப்பது ரொம்பவே ஜாலியாக இருக்கிறது. இருவரும் ஒன்றாக பேசிக் கொண்டு டீ, காபி குடித்துக் கொண்டும், சாப்பிட்டுக் கொண்டும் ரொம்பவே ஜாலியாக போகிறது என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையின் காட்சி
அந்த நேரம் பார்த்து செந்தில் கால் பண்ணவே, நான் புறப்பட்டு வந்துட்டேன், இங்கு சாப்பிட்டு மதிய சாப்பாடும் எடுத்துக் கொண்டேன் என்றார். அப்போ எனக்கு என்று செந்தில் கேட்க, நான் ஆபிஸிற்கு சென்ற பிறகு பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார். அடுத்த காட்சியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையின் காட்சி ஒளிபரப்பானது. இதில் கடைக்கு வரும் வழியில் பழனி காலில் அடிபட்ட நிலையில் கடைக்கு வந்தார்.
சரவணன் மற்றும் பாண்டியன்
அப்போது இருவரும் ரொம்ப காயமா, ஹாஸ்பிடலுக்கு போக வேண்டுமா என்று கேட்டுக் கொண்டனர். பின்னர் பாண்டியன் வெளியில் புறப்படும் போது தங்கமயில் மற்றும் மாணிக்கம் இருவரும் கடைக்கு வந்தனர். பாண்டியன் வெளியில் செல்ல மாணிக்கம் கடையின் கல்லாவில் உட்கார சரியாக இருந்தது. உட்கார்ந்தவர் சும்மா இருக்காமல் கல்லாப்பெட்டியை திறந்து, இன்னிக்கு வசூல் ரொம்ப ஜாஸ்தி போல, காலையிலே கல்லாப்பெட்டியில் கட்டுக்கட்டாக பணம் இருக்கே என்று ஆச்சரியமாக பேசினார்.
ரூ.10 லட்சத்த ஆட்டைய போட்டு ரூ.42000க்கு டைனிங் டேபிள் வாங்கிய செந்தில்:அதிர்ச்சியில் ஆடிப்போன மீனா!
பழனிவேலுவை கல்லாவில் உட்கார வைத்தார்
உடனே சரவணனுக்கு கோபம் வரவே மாமனார் மாணிக்கத்தை எழுப்பி விட்டுவிட்டு பழனிவேலுவை கல்லாவில் உட்கார வைத்தார். பிறகு பழனிவேலுவிற்கு வலி கொஞ்சம் குறைந்த மாதிரி இருக்கவே, அவரை எழுப்பிவிட்டு டிராமா போட்டுக் கொண்டு தங்கமயில் கல்லாவில் உட்கார்ந்தார். இதனால், ஆத்திரமடைந்த சரவணன், மாமா பழனிவேலுவை வீட்டிற்கு அனுப்பி வைக்கும் போது என்னால் கடினமான வேலைகளை எல்லாம் செய்ய முடியாது என்று மாமனார் மந்திரம் ஓத, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சரவணன் வாயைத் திறந்து சொல்ல மாணிக்கம் அமைதியானார்.
கோபத்தில் சரவணன்
எப்போது சரவணன் கோபத்தில் வெடிக்க போகிறார் என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் கண்டிப்பாக கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் சரவணன் மாணிக்கம் மற்றும் தங்கமயிலுக்கு எதிராக பூகம்பமாக வெடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மைத்துனருக்காக களமிறங்கிய ஜூனியர் என்.டி.ஆர்; 2 மெகா பரிசுகள்!
மாணிக்கம் கடையில் வேலை பார்ப்பது சரவணனுக்கு பிடிக்காத நிலை
ஏற்கனவே மாணிக்கம் கடையில் வேலை பார்ப்பது சரவணனுக்கு பிடிக்காத நிலையில் இப்போது தங்கமயில் வேறு கடைக்கு வந்துள்ளார். இருவரும் சேர்ந்து கொண்டு கடையில் பண்ணாத சேட்டைகள் கிடையாது. இதன் மூலமாக சரவணன் தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார். இது போன்ற நிலை தொடர்ந்தால் சரவணன் கோபத்தில் சண்டை போடவும் வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி சண்டை போடும் நிலையில் கடையை எழுதி வாங்கும் நிலை கூட ஏற்படலாம் என்று தெரிகிறது.
சரவணனுக்கு எதுவும் கொடுக்கவில்லை
இதற்கு முன்னதாக செந்தில் மற்றும் கதிருக்கு தலா ரூ.10 லட்சம் கொடுத்த நிலையில் சரவணனுக்கு எதுவும் கொடுக்கவில்லை. ஆதலால் மாணிக்கம் மற்றும் தங்கமயில் இருவரும் சேர்ந்து கொண்டு கடையை எழுதி வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதற்கு முன்னதாக கடையில் காய்கறி விற்பது குறித்தும், ஃபேன்ஸி ஸ்டோர் வைப்பது குறித்தும் தங்கமயில் பாண்டியனிடம் பேசினார். ஆனால், கடையின் வியாபாரம் நன்றாக நடக்கும் போது அதெல்லாம் எதற்கு என்று கேட்டார். அதுமட்டுமின்றி ஏற்கனவே நம் கடை இருக்கும் வீதியில் இதெல்லாம் இருக்கும் போது அதெல்லாம் வேண்டாம் என்றார்.