- Home
- Cinema
- தொலைக்காட்சி
- டம்மி பீஸ் ஆக்கப்படும் ஹீரோ; எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இருந்து விலகினாரா பிரபல நடிகர்? உண்மை என்ன?
டம்மி பீஸ் ஆக்கப்படும் ஹீரோ; எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இருந்து விலகினாரா பிரபல நடிகர்? உண்மை என்ன?
எதிர்நீச்சல் சீரியலில் ஹீரோ ரேஞ்சுக்கு பில்டப் செய்யப்பட்ட நடிகர் ஒருவர் தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் டம்மி பீஸ் ஆக்கப்படுவதால் அவர் சீரியலில் இருந்து விலக உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

Ethirneechal Thodargiradhu Serial
சன் டிவியில் தற்போது செம டிரெண்டிங் ஆக சென்றுகொண்டிருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தான். இந்த சீரியல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நாயகியாக நடித்த மதுமிதா விலகியதால் அவருக்கு பதில் பார்வதி என்பவர் ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த சீரியலின் முதல் சீசனை இயக்கிய திருச்செல்வம் தான் அதன் இரண்டாவது சீசனையும் இயக்குகிறார். எதிர்நீச்சல் தொடரில் நடித்த அதே கேரக்டர்கள் இந்த தொடரிலும் நடிக்கிறார்கள். புதிதாக அன்புக்கரசி உள்பட சில கேரக்டர்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன.
டிஆர்பியில் கலக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் தொடங்கியதில் இருந்து முதல் ஆறு மாதங்கள் பெரியளவில் சோபிக்கவில்லை. எப்போது இந்த தர்ஷனின் கல்யாண எபிசோடு ஆரம்பமானதோ, அப்போதிலிருந்தே இந்த சீரியல் களைகட்டத் தொடங்கி உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்ற 3வது சீரியலாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் உள்ளது. இது நம்பர் 1 இடத்தையும் பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் தர்ஷன் யாரை திருமணம் செய்துகொள்ள உள்ளார் என்கிற விறுவிறுப்பான கட்டத்தை அந்த சீரியல் எட்டி உள்ளது. இதனால் வரும் வாரங்களில் இந்த சீரியலின் டிஆர்பி உச்சத்தை தொட வாய்ப்பு உள்ளது.
எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து விலகும் பிரபலம்?
எதிர்நீச்சல் சீரியலின் முதல் சீசனில் மிகவும் ஹைலைட்டாக பேசப்பட்டது ஜனனி - சக்தி ஜோடி தான். இதில் ஜனனியாக மதுமிதாவும், சக்தியாகவும் சபரியும் நடித்திருந்தனர். அவர்களிடையே கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகி இருந்தது. ஆனால் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியாக பார்வதி வந்த பின்னர் சக்தியாக நடிக்கும் சபரியின் கேரக்டர் டம்மி ஆக்கப்பட்டு உள்ளது. இதனால் அவருக்கு போதுமான ஸ்கிரீன் ஸ்பேஷும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர் இந்த சீரியலை விட்டு விலக முடிவெடுத்துள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் ஒன்று காட்டுத்தீ போல் பரவி வந்தது.
உண்மை என்ன?
ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி சக்தி கேரக்டரில் நடிக்கும் சபரி இந்த சீரியலை விட்டு விலகுவதாக கூறப்படும் தகவல் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு குட் நியூஸாக இருந்தாலும், அவரின் கேரக்டருக்கு இன்னும் கொஞ்சம் ஸ்கோப் கொடுக்கலாம் என்கிற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் அந்த சீரியலில் நியூ எண்ட்ரியாக வந்த அன்புக்கரசி கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் கூட சக்தி கேரக்டருக்கு கொடுக்கப்படுவதில்லை என்று தங்கள் ஆதங்கத்தை கொட்டி வருகிறார்கள். இதனால் வரும் நாட்களில் சக்தி கேரக்டர் பிக் அப் ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.