மலேசியா முருகன் கோவிலில் காதலனை ரகசிய திருமணம் செய்துகொண்ட ரோஜா சீரியல் நடிகை - வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்
ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமான நடிகை பிரியங்கா நல்காரிக்கு மலேசியா முருகன் கோவிலில் வைத்து ரகசிய திருமணம் நடைபெற்று உள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்தவர் பிரியங்கா நல்காரி. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான அந்தரி பந்துவயா என்கிற தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து இவர் தமிழிலும் தீயா வேலை செய்யனும் குமாரு, சம்திங் சம்திங், காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்திருந்தார்.
சினிமாவில் பெரியளவில் வரவேற்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் சென்ற பிரியங்கா நல்காரி, கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து தெலுங்கு சீரியல்களில் நடித்து வந்தார். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரோஜா என்கிற சீரியல் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார் பிரியங்கா.
இதில் நடிகர் சிபுவிற்கு ஜோடியாக நடித்து வந்தார் பிரியங்கா. இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்க தொடங்கியதன் காரணமாக இதன் டிஆர்பியும் எகிறியது. மக்களின் பேவரைட் சீரியலாக இருந்து வந்த இந்த ரோஜா நெடுந்தொடர் நான்கு ஆண்டுகள் ஒளிபரப்பானது. கடந்த வருடம் தான் இந்த சீரியலுக்கு எண்டு கார்டு போட்டனர்.
இதையும் படியுங்கள்... viduthalai Part 1 : விடுதலை படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்டு.. படத்துல அப்படி என்ன தான் இருக்கு?
ரோஜா சீரியல் முடிவுக்கு வந்த பின்னர் சீதா ராமன் என்கிற தொடரில் தற்போது நடித்து வருகிறார் பிரியங்கா நல்காரி. இந்த தொடருக்கும் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் பிரபல வில்லி நடிகையான ரேஷ்மா பசுபுலேட்டியும் நடித்துவருகிறார். இந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில், நடிகை பிரியங்கா நல்காரி தற்போது ரகசிய திருமணம் செய்துகொண்டுள்ளார். மலேசியாவில் உள்ள முருகன் கோவிலில் தான் பிரியங்காவின் திருமணம் நடைபெற்று உள்ளது. இவர் ராகுல் வர்மா என்கிற தொழிலதிபரை தான் காதலித்து கரம்பிடித்துள்ளார். பல சிக்கல்களை தாண்டி தனது திருமணம் நடைபெற்று உள்ளதாக கூறி உள்ளார் பிரியங்கா. அவரின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... watch : காஷ்மீரில் இராணுவ பாதுகாப்புடன் நடந்த ஷூட்டிங்.. பிரம்மிக்க வைக்கும் லியோ படத்தின் மேக்கிங் வீடியோ இதோ