- Home
- Cinema
- தொலைக்காட்சி
- ரேவதியின் அதிரடி ஐடியா.. அசந்துபோன மத்திய அமைச்சர்! சாமுண்டீஸ்வரி வீட்டில் கோலாகலமாக நடந்த சுமங்கலி பூஜை!
ரேவதியின் அதிரடி ஐடியா.. அசந்துபோன மத்திய அமைச்சர்! சாமுண்டீஸ்வரி வீட்டில் கோலாகலமாக நடந்த சுமங்கலி பூஜை!
Revathi Master Plan in Karthigai Deepam Serial : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய 1120 ஆவது எபிசோடில் ரேவதியின் ஐடியாவின் படி மத்திய அமைச்சர் ரங்கநாயகி உடன் இணைந்து எல்லோரும் சுமங்கலி பூஜையில் ஈடுபட்டனர்.

Chamundeswari home special Pooja highlights
கார்த்திகை தீபம் சீரியலில் குடும்ப ஜோதிடர் சுமங்கலி பூஜை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், மத்திய அமைச்சரோ தான் வெளியில் இருப்பதாகவும் இந்த முறை முடியாது. அதனால், அடுத்த வருடம் செய்து கொள்ளலாம் என்று ஜோதிடரிடம் கூறினார். அப்போது ரேவதி ஒரு ஐடியா கொடுத்தார். அதாவது, இந்த முறை எங்களது வீட்டில் நாம் எல்லோரும் சேர்ந்து சுமங்கலி பூஜை செய்யலாமா என்று கேட்டார். அதற்கும், இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே என்று கூறினார்.
Today's episode twist Revathi and Chamundeswari
இந்த நிலையில் தான் இன்றைய 1120ஆவது எபிசோடில் சுமங்கலி பூஜை செய்ய ரேவதிக்கு அவ்வளவு ஆசை. மத்திய அமைச்சரும் ஓகே சொல்லவே, ரோகிணி அதற்கான ஏற்பாடுகளை செய்தார். பின்னர் மத்திய அமைச்சர் ரங்கநாயகி சுமங்கலி பூஜையை மேற்கொண்டார். அவருடன் இணைந்து மற்ற அனைவரும் பூஜையில் ஈடுபட்டனர். இதில், ரேவதி தனது கணவர் கார்த்திக்கின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். பிறகு கார்த்திக்கோ ரேவதிக்கு நெற்றியில் மட்டுமின்றி அவரது தாலிக்கும் குங்குமமிட்டார்.
மத்திய அமைச்சரை கவர்ந்த ரேவதியின் ஐடியா
இதே போன்று ரோகிணிக்கு மயில்வாகனம் குங்குமம் வைத்துவிடவே, அவரது காலில் விழுந்து ரோகிணி ஆசிர்வாதம் பெற்றார். பிறகு சுவாதியின் பாடல் கச்சேரி ஆரம்பமானது. ரேவதி, தனது தங்கை சுவாதி நன்றாக பாடுவாள் என்று சொல்லவே, மத்திய அமைச்சரும் ஓகே என்றார். பிறகு சுவாதியும் நன்றாக பாடி முடிக்க ரங்கநாயகி பாராட்டு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பூஜைக்கு வந்தவர்களுக்கு வளையல், குங்குமம், மாங்கல்ய கயிறு ஆகியவற்றை கொடுத்தார். அதன் பிறகு அவரது வேலையும் முடிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
சாமுண்டீஸ்வரி வீட்டில் நடந்த பூஜை பின்னணி
பின்னர் அமெரிக்கா மாப்பிள்ளையின் காமெடி காட்சிகள் அரங்கேறியது. தான் ஒரு பலசாலி என்பதை நிரூபிக்க வீட்டின் மொட்டை மாடியில் செங்கற்கலை வைத்து உடற்பயிற்சி செய்தார். அவர் உடற்பயிற்சி செய்வதை பார்த்து ரேவதி உள்ளிட்டோர் சிரித்து மகிழ்ந்தனர்.