- Home
- Cinema
- தொலைக்காட்சி
- இத்தனை நாட்களுக்கு பிறகு கிடைத்த வெற்றி - முதல் முறையாக வீட்டு தலையான ரம்யா ஜோ!
இத்தனை நாட்களுக்கு பிறகு கிடைத்த வெற்றி - முதல் முறையாக வீட்டு தலையான ரம்யா ஜோ!
Ramya Joo Become Captain : பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இத்தனை நாட்கள் கடந்த நிலையில் முதல் முறையாக வீட்டு தலைக்கான டாஸ்க்கில் வெற்றி பெற்ற ரம்யா ஜோ வீட்டு தலையாக தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்கூல் டாஸ்கில் ரம்யா ஜோ
கடந்த வாரம் நடந்த ஸ்கூல் என்னும் டாஸ்கில் ரம்யா ஜோ ஒரு அதிர்ச்சியான விஷயத்தை ஹவுஸ்மேட்ஸிடம் பகிர்ந்து கொண்டார். அதாவது எனக்கு தமிழ் எழுதவும் தெரியாது படிக்கவும் தெரியாது என்று சொன்னார். ஒன்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஒரு டான்சராக இருந்து வரும் நிலையில் தமிழ் தெரியாது என்று கூறியதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். ஆனால் இதுதான் உண்மை. அவருக்கு தமிழ் எழுதவும் தெரியாதாம் படிக்கவும் தெரியாதாம்.
உண்மையான பெயர் ஸ்டெல்லா
ஏன் என்றால் அவர் ஒரு கர்நாடகாவைச் சார்ந்தவர். அவரது உண்மையான பெயர் ஸ்டெல்லா என்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்த டாஸ்க்கில் கனி தமிழ் ஆசிரியராகவும் அதாவது தமிழ் அம்மா என்னும் பதவியை கொண்டவர். அவர் திருக்குறளை கற்பிக்கும் ஒரு ஆசிரியராக இருந்து வந்தார். ஒரு ஆசிரியையாக தமிழ் திருக்குறளை ஸ்டுடென்ட் அனைவருக்கும் சொல்லிக் கொடுத்தார். அதில் ஸ்டூடண்ட்ஸ் ஆக இருந்த அனைவரும் தனது தனித்திறமையை ஒவ்வொன்றாக வெளிப்படுத்தினர்.
ரம்யா ஜோவின் திருக்குறள்:
அந்த டாஸ்க் ரம்யாச்சோ ஐந்து திருக்குறளை நன்றாக மனப்பாடம் செய்து தமிழ் அம்மாவாக இருக்கும் கனியிடம் அச்சுப்பிசறாமல் ஐந்து திருக்குறளையும் அழகாக சொன்னார் தமிழ்நாட்டின் ஒன்பது ஆண்டுகளாக இருந்து வந்தும் தமிழ் தெரியாமல் திருக்குறளை கற்றது அவர் தனித்திறமை ஒன்று என்று கூறலாம்.
குட் ஸ்டுடென்ட்:
கடந்த வாரம் நடந்த ஸ்கூல் டாஸ்க்கில் ரம்யா ஜோ ஒரு நல்ல மாணவியாக நடந்து கொண்டார் என்பதை அவரது ஆசிரியர் மற்றும் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கூறினர். அதனால் அவருக்கு இந்த வாரத்தின் குட் ஸ்டூடண்ட் என்னும் பதவியை கொடுத்தனர். இந்தப் பதவி அவரின் அடுத்த வார வீட்டு தலையாகுவதற்கு ஒரு காரணமாக இருந்தது.
வீட்டு தலையான ரம்யா ஜோ:
ஹவுஸ் மேட்ஸ் அனைவராலும் குட் ஸ்டுடென்ட் என்று தேர்வு செய்யப்பட்ட ரம்யா ஜோ இந்த வாரத்தின் வீட்டு தலைவர் போட்டியில் பங்கேற்றார். குட் ஸ்டுடென்ட் என்னும் பதவியில் ரம்யா ஜோ வும் குட் டீச்சர் என்னும் பதவிக்கு பிரஜனும் ஹவுஸ்மேட்ஸ் அனைவராலும் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்பதாவது வாரமான 57 ஆம் நாளில் இந்த வாரத்தின் தலைவர் பதவிக்கு ரம்யா ஜோ, பிரஜன் மற்றும் புதிதாக வந்த ஆதிரை ஆகியோர் பங்கேற்றனர். அதில் ரம்யா ஜோ நான் தனியாகவே விளையாடப் போகின்றேன். யாருடனும் கூட்டு சேர மாட்டேன் என்று கூறிவிட்டு சென்று தலைவர் போட்டியில் வென்றார்.
லச்சரி ரூமில் முதல் வீட்டு தலை
அவரை இந்த வாரத்தின் வீட்டு தலையாகவும் லச்சரி ரூமில் முதல் வீட்டு தலை என்னும் தன்னிடத்தை பதிவு செய்தார். இந்த வாரத்தின் வீட்டு தலை ரம்யா ஜோ ரசிகர்களின் மத்தியில் என்ன சரவணன் இது என்னும் நிலைமையில் தான் உள்ளது. ஆகையால் இந்த வாரம் இவர் தலைமையிலான பிக் பாஸ் வீடு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலாகவே காத்திருக்கின்றனர். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.