MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • கதிர் பேச்சைக் கேட்காமல் வீம்புக்கு பரோட்டா ஆர்டர் பண்ணிய ராஜீ – என்ன ஆச்சு, கடிக்கவே முடியலயா?

கதிர் பேச்சைக் கேட்காமல் வீம்புக்கு பரோட்டா ஆர்டர் பண்ணிய ராஜீ – என்ன ஆச்சு, கடிக்கவே முடியலயா?

Raji Order Parotta to eat against Kathir : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜீயின் பசி அறிந்த கதிர் ஒரு ஹோட்டலில் காரை நிறுத்தி அவருக்கு சாப்பிட என்ன வாங்கி கொடுத்தார் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

4 Min read
Author : Rsiva kumar
Published : Sep 10 2025, 09:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Jio Hotstar Screenshot

கதிர் மற்றும் ராஜீ இருவரும் ஏதோ ஒரு சந்தர்ப்ப சுழல் மற்றும் அம்மாவின் கட்டாயத்தின் காரணமாக திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இருவருக்கும் ஒருவருக்கொருவர் பிடிக்கவே இல்லை. எப்போது பார்த்தாலும் இருவருக்கும் இடையில் சண்டை வந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் இருவரும் தங்களை அறியாமல் ஒருவர் மீது ஒருவர் காதலை வளர்த்துக் கொண்டனர். ஆனால், அவர்கள் ஒரு போதும் தங்களது காதலை வெளிக்காட்டிக் கொள்ளவே இல்லை.

கதிருக்காக ராஜீ ஏதாவது செய்வதும், ராஜீக்காக கதிர் ஏதாவது செய்வதுமாக தான் இருவரும் தங்களது காதலை வெளிக்காட்டினர். ஒரு கட்டத்தில் ராஜீ கதிருக்காக டான்ஸ் ஆடி பைக்கை ஜெயித்து கொடுத்து அசத்தினார். இப்போது கதிர் டிராவல்ஸ் வைக்க அவருக்கு பண உதவி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட ராஜீ அதற்காக சென்னையில் நடந்த டான்ஸ் போட்டியில் குடும்பத்தையும் மீறி கலந்து கொண்டார். 

ஆனால், அங்கு நடுவர்களிடம் மாட்டிக் கொண்டார். உண்மையில் அப்படி ஒரு டான்ஸ் போட்டி நடைபெறவில்லை. அது ஏமாற்றுக்காரர்களின் சதி வேலை என்பதை கதிர் அறிந்து கொண்டு சென்னை புறப்பட்டு வந்து ராஜீயை அவர்களிடம் சண்டையிட்டு காப்பாற்றினார்.

27
Image Credit : Jio Hotstar Screenshot

இதைத் தொடர்ந்து இன்றைய 582ஆவது எபிசோடில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அந்த டான்ஸ் போட்டியிலிருந்து வெளியில் வந்த ராஜீ கதிரை கட்டிப்பிடித்து கதறி அழுதார். அதன் பிறகு அவரை சமாதானப்படுத்தி தண்ணீர் கொடுத்து காரில் அழைத்து வந்தார். இதைத் தொடர்ந்து ஒரு இடத்தில் காரை நிறுத்தினார். அப்போது ராஜீ தனது மனக்குமுறை கதிரிடம் கொட்டித் தீர்த்தார். நான் ரொம்பவே பயந்துட்டேன். அங்கிருந்து கிளம்பினால் போதும் என்று இருந்தது. 

ஆனால், சைன் பண்ணிட்ட, போட்டி முழுவதும் கலந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் ரூ.10 லட்சம் கட்ட வேண்டும் என்றார்கள். நான் மட்டும் தான் அப்படி இருக்கிறேன் என்று நினைத்து திருத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணினான். ஆனால், அதன் பிறகு தான் தெரிந்தது. அங்கு நான் மட்டும் தான் சரியாக இருந்திருக்கிறேன். போனையும் பிடுங்கி வைத்துக் கொண்டார்கள். எனக்கு உயிரே போய்விட்டது என்று கதறி அழுதார்.

37
Image Credit : Jio Hotstar Screenshot

அதன் பிறகு கதிர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். என்னை பார்த்தால் எப்படி தெரியுது. நீ கிளம்பி போய்விட்ட, தப்பு என்று தெரிந்தும் என்னிடம் சொல்ல வேண்டியதுதான, அங்கிருந்ததை விட என்னிடம் சொல்வதற்கு உனக்கு ரொம்ப பயமா? நான் தான் பெரிய போலீஸ்காரி என்ற நெனப்போட்டு சுற்றக் கூடாது. அப்படி என்றால் இப்படிதான் ஆகும். நீ கிளம்பி போனது சரி, நாம் போகிற இடம் பாதுகாப்பானதா என்றெல்லாம் பார்க்கமாட்டாயா, 

எதுக்கு உனக்கு இந்த வேலை எல்லாம், வீட்டில் இருப்பவர்களுக்கு தெரிந்தால் எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அவர்களை விட உன்னுடைய வீட்டிற்கு தெரிந்தால் என்னாகும்? நீ என்ன முட்டாளா, உனக்கு என்ன அவ்வளவு திமிரா, நீ எவ்வளவு பெரிய கேடி என்று எனக்கு நன்கு தெரியும். இப்படியெல்லாம் நடக்குமா என்று எதிர்பார்க்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்தையும் செய்வதற்கு முன் அதனால் என்னாகும் என்று எதிர்பார்க்க வேண்டும். நாம் செய்வது சரியா தவறா என்றெல்லாம் யோசிக்க வேண்டும்.

47
Image Credit : Jio Hotstar Screenshot

அப்படியே முந்திரிக் கொட்டை மாதிரி எனக்கு தான் எல்லாமே தெரியும் என்று நினைக்க கூடாது. அங்கிருந்தவர்களை பார்த்தாலே தெரிய வேண்டாமா? என்றெல்லாம் கதிர் திட்டிக் கொண்டிருக்க ராஜீ மூஞ்சிய அப்பாவியாக வைத்துக் கொண்டு கதிரிடம் பேசினார். பின்னர் இருவரும் காரில் ஏறி ஒரு சாப்பாட்டுக் கடைக்கு சென்றனர். அங்கு கதிர் தோசை ஆர்டர் செய்ய, ராஜீ எனக்கு பரோட்டா வேண்டும் என்று அடம் பிடித்தார்.

கதிர் தோசை வாங்கு சாப்பிட, ராஜீயால் பரோட்டாவை பிய்க்க கூட முடியவில்லை. அதன் பிறகு மீண்டும் ராஜீக்கு தோசை ஆர்டர் செய்து கொடுத்தார். உனக்கு எப்படி தெரிந்தது என்று ராஜீ கேட்க, அதற்கு நீ பேசும் போது தெரிந்தது. அதன் பிறகு நெட்டில் பார்த்து தெரிந்து, என்னுடைய நண்பர்களிடம் விசாரித்தேன். அப்படி ஒரு போட்டியே நடைபெறவில்லை என்று தெரிந்து கொண்டேன் என்றார்.

57
Image Credit : Jio Hotstar Screenshot

இருவரும் சாப்பிட்டு முடித்த பிறகு ரொமான்ஸாக பேசிக் கொண்டனர். அதில், ராஜீ நீ எனக்காகத்தானே சென்னைக்கு வந்த, டான்ஸ் போட்டியில் வெற்றி பெற்றால் ரூ.10 லட்சம் தருவார்களே அதற்காகத்தானே என்றார். எனக்கு எதுவும் தெரியாது என்று நினைத்தயா? இல்ல ஒன்றும் புரியவில்லை என்று நினைத்தயா? ஆமாம், அதுக்கு தான் வந்தேன் என்றார் ராஜீ. வீட்டில் தெரியுமா? தெரியாது. எனக்கு உன் மீது கோபம் இல்லை. நான் பதற்றத்தோடு தான் வந்தேன். நீ எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டியிருந்த, நான் வரவில்லை என்றால் என்ன ஆகும்.

எனக்குரிய பைசா பிரச்சனையை நானே டீல் பண்ணிக் கொள்வேன். நீ ஒன்றும் பீல் பண்ண வேண்டாம். எனக்கா நீ கஷ்டப்படுற என்று ராஜீ கேட்க, இல்லவே இல்ல, நான் எப்போதும் இப்படித்தான் இருப்பேன். இதைத் தொடர்ந்து உன்ன கல்யாணம் பண்ணதுனால் எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை. நீ படித்து நல்ல வேலைக்கு போயிருப்ப, நான் கஷ்டப்பட்டு எதுவும் செய்யவில்லை. ரொம்பவே இஷ்டப்பட்டு தான் செய்கிறேன். எனக்கு இதெல்லாம் ரொம்ப பிடிக்கும். நீ என்னுடைய வாழ்க்கையில் வந்ததை நான் பார்க்கவில்லை. நீ என்னுடைய வாழ்க்கையில் எனக்கு ரொம்பவே சந்தோஷம் தான்.

67
Image Credit : Jio Hot Star Screen Shot

அதன் பிறகு கொஞ்ச நேரம் இருவரும் கண்களால் பேசிக் கொண்டனர். மேலும் இருவரும் ஒருவருக்கொருவர் தங்களது காதலை சொல்லிக் கொள்ளாத நிலையில் இந்த பார்வை ஒன்றே போதும், அவர்களுக்கு இடையில் ஆயிரம் முறை காதல் பரிமாறக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். அப்போதும் கூட, நமக்கு பிடித்தவர்கள் அவர்கள் கனவை எட்டிப் பிடிக்க வேண்டும். அதற்காகத்தான் நான் காலையில் உன்னை ஜாக்கிங் அழைத்து செல்கிறேன். 

77
Image Credit : JioHotstar Screenshot

நீ போலீஸ் ஆக வேண்டும் என்று கதிர் சொல்லவே ராஜீ அப்படியே புன்னகையில் பூரித்தார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய 582ஆவது எபிசோடு முடிந்தது. இனி வீட்டிற்கு சென்ற பிறகு வீட்டில் உள்ளவர்களிடம் என்ன சொல்வார் என்பது தான் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏற்கனவே ராஜீயிடம் செல்ஃபி எடுத்துக் கொண்ட நடுவர் கதிரிடம் அடி வாங்கிய நிலையில் அந்த புகைப்படத்தை நெட்டில் பதிவேற்றம் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த சூழலில் வீட்டிற்கு வந்ததும் போட்டியில் தோல்வி அடைந்துவிட்டேன் என்று ராஜீ சொல்வாரா அல்லது வேறேதேனும் காரணம் சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image3
கர்ப்பமாகி 2 வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை பிறக்கல... சன் டிவி சீரியல் பரிதாபங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved