MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • 'ரோஜா' சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி நடிக்கும் புதிய சீரியல் பூஜை போட்டாச்சு! ஹீரோ விஜய் டிவி பிரபலமா?

'ரோஜா' சீரியல் நடிகை பிரியங்கா நல்காரி நடிக்கும் புதிய சீரியல் பூஜை போட்டாச்சு! ஹீரோ விஜய் டிவி பிரபலமா?

பிரியங்கா நல்காரி, ஹீரோயினாக நடித்து வந்த 'சீதா ராமன்' தொடரில் இருந்து, சமீபத்தில் விலகிய நிலையில், தற்போது புதிய சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Sep 07 2023, 10:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சன் டிவி தொலைக்காட்சியில் சுமார் 4 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா' சீரியல் மூலம் ஒட்டு மொத்த இல்லத்தரசிகள் மனதையும் கொள்ளைகொண்டவர் பிரியங்கா நல்காரி. இந்த தொடர் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. எனவே மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியலில் தான் இவர் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தாவிய பிரியங்கா,  'சீதா ராமன்'  என்கிற தொடரில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். ஒரு பெண்ணின் அழகு என்பவது அவள் முகத்தில் இல்லை அகத்தில் தான் உள்ளது என்பதை மாமியாருக்கு எடுத்துரைக்கும் விதமாக இந்த சீரியலில் கதைக்களம் அமைத்திருந்தது.

'ஜவான்' படத்தில் நடிக்க ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் வாங்கிய சம்பள விவரம்!

35

இந்த சீரியல் துவங்கிய சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வந்த நிலையில், பிரியங்கா திடீர் என தன்னுடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டதால் கணவரின் விருப்பத்திற்கு ஏற்ப, சீரியலில் இருந்து விலகி.. குடும்பம், குழந்தை என வாழ உள்ளதாக தெரிவித்து இந்த சீரியலில் இருந்து அதிரடியாக விலகினார். இவர் விலகியதால், தற்போது இந்த சீரியலில், மிகமிக அவசரம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை ப்ரியங்கா நடித்து வருகிறார்.
 

45

இதை தொடர்ந்து திடீர் என மீண்டும் சீரியலில் நடிக்க உள்ளதை பிரியங்கா உறுதி செய்துள்ளார். அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும், புதிய தொடரான நல தமயந்தி என்ற தொடரில் தான் பிரியங்கா நடிக்க உள்ளாராம். இந்த சீரியலின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 

55

இந்த தொடரில், ஹீரோவாக சமீபத்தில் விஜய் டிவி தொடரான 'கண்ணே கலைமானே' சீரியலில் இருந்து விலகிய, நடன இயக்குனர் நந்தா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த சீரியல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'பிக்பாஸ் சீசன் 7' இரண்டாவது வீட்டில் தங்கவைக்கப்படும் 4 பிரபலங்கள் இவர்களா? மொத்த போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image2
Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved