- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்த கோமதி – குஷி மோடில் புறப்பட்ட பாண்டியன் ஃபேமிலி!
சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வடித்த கோமதி – குஷி மோடில் புறப்பட்ட பாண்டியன் ஃபேமிலி!
Pandian Condition and Gomathi happy Tears : காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக பாண்டியன் தனது குடும்பத்தோடு கிளம்பியுள்ளார். ஆனால், அதற்கு முன் கண்டிஷன் போட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இந்த வாரம் காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடக்க இருக்கிறது. தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மகள் கோமதியும் கலந்து கொள்ள வேண்டும் என்று காந்திமதி ஆசைப்பட்ட நிலையில், விழாவில் கலந்த் கொள்ள கோமதியும் ஆவலுடன் கிளம்பியுள்ளார். தனது அம்மாவின் 75ஆவது பிறந்தநாளுக்காக தங்க வளையல் வாங்கியுள்ளார். அதோடு மட்டுமின்றி தனக்காக தனது கணவர் வாங்கி கொடுத்த புடவையையும் எடுத்து வைத்துள்ளார்.
பாண்டியனிடம் அனுமதி கேட்டார்
இதற்காக பாண்டியனிடம் அனுமதி கேட்டார். அவரும் ஓகே சொல்லவே செம குஷியில் புடவையை எடுத்து வைத்தார். ஒருபுறம் செந்தில் மற்றும் மீனா கிளம்ப தயாராக இருந்தனர். இன்னொரு புறம் தங்கமயில் தனது சேலைக்கு மேட்சிங்கா கணவர் சட்டை போடவில்லை என்று சண்டை போட்டார். இவர்களை தாண்டி கதிர் மற்றும் ராஜீ இருவரும் ரொமான்ஸ் மூடில் மூழ்கினர். ராஜீ கட்டியிருந்த சேலையை யார் எடுத்து கொடுத்தது என்பது பற்றி கதிரிடம் கேட்டார். ஆனால், அவரோ ஒரு படத்தில் சமந்தா கட்டியிருந்ததாக கூறவே, பின்னர் தெரியாது என்றார்.
ராஜீக்கு பூ வைத்து விட்ட கதிர்
இதைத் தொடர்ந்து கோபத்தில் பூ வைக்க முடியாமல் தவித்த ராஜீக்கு கதிர் பூ வைத்து விட இருவருக்கும் இடையில் ரொமான்ஸ் காட்சி அரங்கேறியது. பின்னர் பாண்டியன் எல்லோரையும் வர சொல்லவே, அனைவரும் ஹாலில் ஒன்றாக வந்தனர். அப்போது கோமதி ஆனந்த கண்ணீர்விடவே பாண்டியன் அவரை சமாதானப்படுத்தினார். இதுவரையில் கனவில் கூட நடக்காது என்ற ஒரு விஷயம் இப்போது நிஜத்தில் நடக்க போகிறது என்று சொன்னார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
இறுதியாக பாண்டியன் எல்லோரும் இப்போது எப்படி கிளம்பியிருக்கிறோமோ அதே மாதிரி சந்தோஷமாக சென்றுவிட்டு அப்படியே சந்தோஷமாக வீடு திரும்ப வேண்டும். பிறந்தநாள் விழாவின் போது யார் என்ன சொன்னாலும், செய்தாலும் பதிலுக்கு எதுவும் பேசக் கூடாது, சண்டை ஏதும் போடக் கூடாது. அப்படியே சென்றுவிட்டு வந்துவிட வேண்டும் என்றார். அதற்கு கோமதி நம்முடைய பையன்களை பற்றி நமக்கு தெரியாதா என்று சொல்லவே, பாண்டியன் நம்ம பையன்கள் தானே அதான் சொல்கிறேன் என்று சொன்னார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய காட்சி முடிந்தது.
காந்திமதி பிறந்தநாள் விழா
அதற்கு முன்னதாக காந்திமதி தனது பிறந்தநாள் விழாவில் எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்று சத்தியம் கேட்டார். அதற்கு முத்துவேல் முதலில் சத்தியம் செய்ய சக்திவேல் சத்தியம் செய்ய முடியாது என்றார். கடைசியில் சக்திவேலும் சத்தியம் செய்தார். அவர்களும் பிறந்தநாளுக்கு புறப்பட்டனர். இனி நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். எப்படியும் இந்த வாரம் முழுவதும் பிறந்தநாள் கொண்டாட்டம் தான் ஒளிபரப்பு செய்யப்படும். இது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலை பார்க்கும் ரசிகர்களுக்கு உற்சாகமாகவும், கொண்டாட்டமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.