- Home
- Cinema
- தொலைக்காட்சி
- எப்பா சாமி, இப்படியொரு நடிப்பா? மாமியார், மாமனார் சப்போர்ட்டுக்காக இப்படியா? தங்கமயில் டிராமா!
எப்பா சாமி, இப்படியொரு நடிப்பா? மாமியார், மாமனார் சப்போர்ட்டுக்காக இப்படியா? தங்கமயில் டிராமா!
Thangamayil Saravanan Controversy : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 650ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு:
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணன் மற்றும் தங்கமயில் தொடர்பான காட்சிகள் தான் இப்போது சீரியஸாக சென்று கொண்டிருக்கிறது. இன்றைய 650ஆவது எபிசோடில் கடையிலிருந்து வீட்டிற்கு வந்த சரவணன் நேராக தங்கமயிலிடம் சென்று ஏன் இப்படியெல்லாம் டிராமா ஆடுற?
சரவணன் மற்றும் தங்கமயில் சண்டை:
உன்னுடைய கையால் பச்ச தண்ணீர் கூட குடிக்கமாட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஏன் உனக்கு தெரியாதா? ஏன் அயர்ன் பண்ண டிரஸ போடல என்றும், ஏன் சாப்பாடு கொண்டு வர, நாங்கள் வந்து சாப்பிட மாட்டோமா என்றெல்லாம் கேட்டார். இப்படியெல்லாம் பேசி வீட்டில் உள்ளவர்களை உன் பக்கம் வலைத்து போட்டுக்களாம் என்று கனவில் கூட நினைக்காத.
மகனை நம்பாமல் உன்னை நம்பமாட்டர்கள்
பெத்த பிள்ளையை நம்பாமல் உன்னையை நம்புவார்கள் என்று நினைக்காத என்று பேசிக் கொண்டிருக்கும் போது கோமதி கூப்பிடும் சவுண்ட் கேட்டு தங்கமயிலின் டிராமா அரங்கேறியது. அதாவது, அடிங்க மாமா, அடிச்சு கொல்லுங்க என்றார்.
டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்
பின்னர் கதவை திறந்து உங்களது மகன் என்னை அடிக்கிறார் என்று சொல்லவும், சரவணனை திட்டி தீர்த்தார் கோமதி. உடனே சரவணன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதைத் தொடர்ந்து கடையிலிருந்து வந்து கையை பிடித்து கொண்டு உள்ளே சென்று கோபமாக பேசி அடிக்கிறார் என்றும், என்னையை பிடிக்காமல் வேறொருவரை பிடித்திருக்கிறது என்றும் வாய்க்கூசாமல் பொய் சொன்னார்.
கோமதி நம்பவில்லை இதையெல்லாம்
சற்று நம்பாமல் இருந்த கோமதி உடனே உண்மையில் உங்கள் இருவருக்கும் குழந்தை விஷயத்தில் தான் சண்டையா இல்லை வேறேதும் சண்டை இருந்து என்னிடம் சொல்லாமல் மறைக்கிறாயா என்று கேட்டார். அப்போது சற்று அதிர்ச்சி அடைந்த தங்கமயில். இதுதான் சண்டை வேறென்ன சண்டை இருக்கு. இப்படியெல்லாம் வீண் பழி போடுகிறார். இனி நாளைக்கு என்னென்ன பொய் சொல்ல போகிறாரோ தெரியவில்லை என்று இப்போதே கோமதியை நம்ப வைத்தார்.
எப்போது உண்மை தெரியவரும்
அரசியும் நம்பவில்லை: ஆனால், உடனிருந்த அரசியும் இதையெல்லாம் நம்ப முடியாது என்றார். கோமதியும் நம்பவில்லை. எனினும், தங்கமயில் அப்படி சொல்லி அவர்களை நம்ப வைத்தார். இதற்கு எப்படி தீர்வு காண போகிறேனோ என்று கோமதி தனக்கு தானே அட்வைஸ் செய்து கொண்டார். இனி நாளை என்ன நடக்கிறது என்பது பற்றி பொறுத்திருந்து பார்க்கலாம்.
எப்போது தான் சரவணன் தனது அப்பா, அம்மாவிடம் இதைப் பற்றி சொல்வார் என்று தெரியவில்லை. உண்மையில் இது போன்ற சம்பவங்கள் பல குடும்பங்கள் வீட்டில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பெற்ற பிள்ளையை நம்பாமல் வீட்டிற்கு வந்த மருமகளை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.