- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கதிரை லவ் பண்ணும் ராஜீ – அட்வைஸ் பண்ணும் மீனா; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடு!
கதிரை லவ் பண்ணும் ராஜீ – அட்வைஸ் பண்ணும் மீனா; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடு!
Raji Love Kathir in Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 557ஆவது எபிசோடில் கதிர் தன்னை வீட்டை விட்டி வெளியே போக சொன்னது பற்றி ராஜீ யோசித்துக் கொண்டே இருக்கிறார்.

கதிரை காதலிக்கும் ராஜீ
Raji Love Kathir in Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில் தனது அப்பா மற்றும் அம்மா இருவரும் வந்து கூப்பிட்ட பிறகும் கூட தான் இங்கு சந்தோஷமாக இருப்பதாகவும் கதிர் தன்னை நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் கூறினார். மேலும், அத்தை மற்றும் மாமா, அக்கா ஆகியோரைப் பற்றி பேசினார். இதனுடைய தொடர்ச்சியாக 557ஆவது எபிசோடில் தன்னை வீட்டை விட்டு வெளியே போகாத என்று சொல்லாத கதிருடன் கடும் கோபத்தில் சண்டை போட்டார்.
இதைத் தொடர்ந்து பாண்டியன் நீயும், உன்னுடைய அம்மா, அப்பாவும் பேசவும் நான் குறுக்கிடவில்லை. அதனால், என்னை தவறாக நினைக்காத. நீ இங்கேயே இருந்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்ட, அதனால், இனிமேல் உன்னை தொந்தரவு செய்தால் என்னிடம் வந்து சொல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். கோமதியும் அப்படியே சொன்னார். அதாவது நீங்கள் உங்களது மகளை கூப்பிடும் போது நான் தலையிடவில்லை.
கதிருடன் சண்டை போட்ட ராஜீ
இப்போது, நான் என்னுடைய மருமகளை உங்களது வீட்டிற்கு அனுப்ப மாட்டேன் என்று கோமதியும் கண்டிப்புடன் சொலிவிட்டார். அதன் பிறகு கதிர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று வேடிக்கை பார்த்த மீனா, ராஜீயுடன் பேசிக் கொண்டிருக்கும் போது நீ உன்னுடைய அம்மா, அப்பா வந்து கூப்பிட்டதும் வர முடியாது என்று சொன்னதும், கதிர் ரொம்பவே சந்தோஷப்பட்டான், அவன் குஷியில் இருந்தான். இப்படி, அப்படி என்று எல்லாம் செய்தான் என்று கூறினார்.
உடனே நீ எதற்கு கோபப்படுற, உண்மையில் அவன் உன்னை போக சொன்னதுக்கு கோபப்படுகிறாயா இல்லை இருக்க சொல்லவில்லை என்று வருத்தப்படுகிறாயா என்று மீனா கேட்டார். மேலும் உன்னை தான் அவனுக்கு பிடிக்காது அல்லவா. அப்புறம் என்ன, நீ உன்னுடைய வீட்டிற்கு செல்ல வேண்டியது தானே என்றார். அதற்கு ராஜீ, இல்லை அவனை எனக்கு அவனை ரொம்ப பிடிக்கும். நான் அவனை லவ் பண்ணுறேன் என்றார்.
கதிரை பிடிக்கும் என்று உண்மையை சொன்ன ராஜீ
ஆனால், அவன் சொல்லமாட்றான், ஏன் சொல்ல வேண்டியதுதானே என்று ராஜீ கேட்க, அதற்கு மீனாவோ அதெல்லாம் ஆண்கள் சொல்லமாட்டார்கள். சொல்லிட்டால் தான் எந்த பிரச்சனையும் இல்லை என்றார். இதன் மூலமாக ராஜீ மற்றும் கதிர் இருவரும் காதலிப்பது உண்மையாகிவிட்டது. ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளவில்லை.
தொடர்ந்து ஜாமீனில் வெளியில் வந்த குமாரவேலுவிற்காக நீதிமன்றம் சென்று நடந்த உண்மையை சொல்ல அரசியை பாண்டியன் கூப்பிடுகிறார். அவருடன் கோமதியும் வர வேண்டும் என்கிறார். ஆனால், கோமதி வர முடியாது என்கிறார். இதையடுத்து மீண்டும் ராஜீ மற்றும் கதிர் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 557ஆவது எபிசோடு முடிவடைந்தது. இனி நாளைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.