- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Pandian Stores 2: பாண்டியன் குடும்பத்தில் வெடித்த பூகம்பம் – உண்மையை சொல்லிட்டாரா சரவணன்? இந்த வார புரோமோ!
Pandian Stores 2: பாண்டியன் குடும்பத்தில் வெடித்த பூகம்பம் – உண்மையை சொல்லிட்டாரா சரவணன்? இந்த வார புரோமோ!
Pandian Stores 2 Serial This Week Promo Video : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் டிசம்ப 1ஆம் தேதி முதல் டிசமப்ர் 6ஆம் தேதி வரையில் என்ன நடக்கிறது என்பது தொடர்பான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ
விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. முழுக்க முழுக்க தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்ற தலையாய மூல மந்திரத்தை மையக் கருவாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் பாண்டியனின் 3 மகன்களுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. மூத்த மகளுக்கு திருமணம் நடந்த நிலையில் இளைய மகள் அரசிக்கு மட்டும் இன்னும் திருமணம் நடக்கவில்லை.
விஜய் டிவி சீரீயல் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
பாண்டியனின் மூத்த மகனான சரவணனுக்கு மட்டும் பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் நடந்தது. ஆனால், கதிருக்கு காலத்தில் கட்டாயம், செந்திலுக்கு காதல் திருமணம் நடந்தது. இதில் மூவரும் மூன்று திசையை பார்த்து சென்று கொண்டிருக்கின்றனர். செந்திலுக்கு அரசு வேலை கிடைத்த நிலையில் மனைவி மீனாவை அழைத்துக் கொண்டு தனியாக சென்றுவிட்டார். கதிர் பாண்டியன் டிராவல்ஸ் என்ற பெயரில் சொந்தமாக டிராவல் திறந்து மனைவி ராஜீயுடன் அதனை கவனித்து வருகிறார்.
தங்கமயில் சரவணன் சர்ச்சை
இந்த நிலையில் தான் மூத்த மகனான சரவணனுக்கு மட்டும் மனைவி தங்கமயில் உடன் பல பிரச்சனைகள். எப்போதும் உண்மையை பேசாத தங்கமயில் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஆபிஸ் வேலைக்கு செல்கிறேன் என்ற பெயரில் ஹோட்டலில் சர்வர் வேலை செய்தார். இவ்வளவு ஏன் மயில் தன்னை விட வயதில் 2 வருடங்கள் மூத்தவர் என்று பல அடுக்கடுக்கான உண்மைகளை சரவணன் தனது பெற்றோரிடம் சொல்லாமல் தவித்து வந்தார். ஆனால், இதற்கு மாறாக தங்கமயில் மாமியார் கோமதி மற்றும் மாமனார் சரவணனிடம் வாய்க்கு வந்த பொய்களை அள்ளிவிட்டார்.
வயதில் மூத்த தங்கமயில் - சரவணன் அதிர்ச்சி
ஒரு கட்டத்தில் சரவணனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறினார். குழந்தை இல்லை என்பதற்காக தன்னிடம் சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார் என்று சரவணன் பற்றி புகார் அளித்தார். இந்த நிலையில் தான் இந்த வார புரோமோ வீடியோவில் என்ன நடக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
ரூமுக்குள் ஆரம்பித்த பிரச்சனை இப்போது முச்சந்தி வரைக்கும் வந்துவிட்டது என்று பாண்டியன் சரவணை திட்டிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் போதும் நிறுத்துங்கள் என்று ஆக்ரோஷமாக கத்தவே குடும்பத்தில் உள்ளவர்கள் பயந்தனர். பின்னர் சரவணன், இவள் இதுவரையில் நம் எல்லோரையும் சொல்லி ஏமாற்றியுள்ளார். எம்பிஏ படித்ததாக சொன்னது பொய். வெறும் 12 ஆம் வகுப்பு மட்டும் தான் படித்திருக்கிறார். இவ்வளவு ஏன் என்னைவிட 2 வயது பெரியவள் என்று அடுக்கடுக்கான உண்மைகளை சொல்லவே கோமதி மயக்கமடைந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ
பின்னர் அவரை எழுப்பி எல்லா உண்மையும் சொல்லவே குடும்பத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில் இனிமேல் சண்டை போடமாட்டோம் என்று தங்கமயில் டிராமாவை ஆரம்பிக்க கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சரவணன் பூஞ்சாடியை எடுத்து அவரது தலையில் போட்டு கொல்லப்பார்த்தார். பின்னர், அவரை தள்ளிவிட்டார். இப்படியே இந்த புரோமோ வீடியோ முடிந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
எப்படியோ சரவணன் தனது மனதிற்குள் பூட்டி வைத்த எல்லா உண்மையும் வெளிப்படுத்தியுள்ளார். அதன் பிறகு குடும்பத்தினர் என்ன செய்வார்கள், அவர்களது ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பது பற்றி இனி வரும் வாரங்களில் பார்க்கலாம். பொய் நீண்ட நாள் நீடிக்கவும் செய்யாது, உண்மை ஒரு போதும் சாகாது என்பது இப்போது சரவணன் மற்றும் தங்கமயில் விஷயத்தில் நிரூபணமாகியுள்ளது. இதற்கு பிறகு சரவணன் மீண்டும் மயிலுடன் சேர்ந்து வாழ்வாரா? இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.