பழனிவேலுவை விரட்டியடித்த பாண்டியன் – ஆத்தாவிடம் சொல்லி கதறி அழுத பழனி!
Devasting Blow for a palanivel : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 643ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

பழனிவேல் அதிர்ச்சி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனிவேல் காந்திமதி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் புதிதாக கடை திறந்துள்ளார். ஆனால், இதில் என்ன அதிர்ச்சி என்றால் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை இருக்கும் அதே தெரிவில் தான் பழனிவேல் கடை திறந்திருக்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் காந்திமதி ஸ்டோர்ஸ் இந்த 2 கடைகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட சிறியது முதல் பெரியது வரையில் என்று 15 கடையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
பாண்டியன் மற்றும் பழனிவேல்
சீரியல் ஆரம்பித்தது முதல் அதாவது 640 எபிசோடுகள் வரையில் தனது அக்கா மற்றும் மாமாவின் தயவில் இருந்த பழனிவேல் இப்போது புதிதாக கடை ஆரம்பித்துள்ளார். கடை ஆரம்பிப்பது பற்றி தனக்கு முன்பே தெரிந்திருந்தாலும் அதைப் பற்றி எப்படி சொல்வது என்ரு தெரியாமல் பழனிவேல் தயக்கம் காட்டினார். இந்த நிலையில் தான் அவருக்குப் பதிலாக காந்திமதி தான் பாண்டியன் மற்றும் கோமதியிடம் சொல்லி கடை திறக்கவும் அனுமதி வாங்கினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
மாமியார் சொல்லிவிட்டாரே மறுபேச்சு பேச முடியாமல் பாண்டியன் பழனிவேல் கடை திறக்க வாழ்த்தி அனுப்பினார். ஆனால் பழனிவேலுவிற்கு கடை எங்கு இருக்கிறது, எப்போது திறக்க போகிறோம் என்று எதுவும் தெரியாது. இந்த சூழலில் பாண்டியன் மற்றும் சரவணன் இருவரும் கடை தெருவில் எதார்த்தமாக நடந்து வரும் அந்த நேரம் பார்த்து அந்த தெருவில் கூட்டம் அதிகமாக இருப்பதை பார்க்கிறார்கள்.
காந்திமதி ஸ்டோர்ஸ்
பிறகு கடைக்கு அருகில் வந்து பார்த்த பிறகு தான் அது பழனிவேலுவின் கடை என்று தெரிகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த பாண்டியன் கோபத்தோடு வீட்டிற்கு வந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். மச்சான் கடைக்கு வந்து கோபத்தோடு வீட்டிற்கு சென்றது குறித்து அறிந்த பழனிவேலுவும் வீட்டிற்கு வருகிறார்.
சுகன்யா ஹேப்பி
அதன் பிறகு தான் பழனிவேலுவை துரோகி, அண்ணன்களோடு சேர்ந்து குடும்பத்திற்கு துரோகம் செய்துவிட்டான். பிள்ளை மாதிரி வளர்த்தோம், நெஞ்சில் கத்தியை இறக்கிவிட்டாய் என்று கூறி கோமதியும், பாண்டியனும் மாறி மாறி தங்களத் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இதற்கு அப்புறமும் இந்த நன்றிகெட்டவன் ஒரு நிமிடம் கூட இந்த வீட்டில் இருக்க கூடாது. அக்காவும் இல்லை, மாமாவும் இல்லை. இந்த வீட்டிற்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீ வீட்டை விட்டு வெளியில் போயிடு என்று கழுத்தை பிடித்து வெளியில் துரத்தாத குறையாக பழனிவேலுவை வீட்டைவிட்டு வெளியில் விரட்டினர்.
பழனிவேல் காந்திமதி ஸ்டோர்ஸ்
எங்களுக்கு துரோகம் செய்துவிட்டு நீ எப்படி கடையை நடத்து நான் பார்க்கிறேன். பாண்டியனை மட்டும் அழித்துவிடலாம் என்று கனவில் கூட நினைக்காத. நீ மளிகைக் கடை வைத்தால் நான் என்ன தெருவுக்கு வந்துவிடுவேன் என்று நினைக்கிறாயா என்று வாய்க்கு வந்ததையெல்லாம் பாண்டியன் பேசி கடைசியில் சாபம் விட்டார். ஆனால், கடைசி வரை பழனிவேல் பக்கம் உள்ள நியாயத்தை கேட்கவே இல்லை. அழுதுகொண்டே கடைக்கு வந்த பழனிவேல் என்ன நடந்தது என்பது பற்றி தனது ஆத்தாவிடம் சொல்லி அழுதார்.