- Home
- Cinema
- தொலைக்காட்சி
- மச்சானுக்கு எதிரா கடை; எனக்கு கடையும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம்: கதறி அழுத பழனிவேல்!
மச்சானுக்கு எதிரா கடை; எனக்கு கடையும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம்: கதறி அழுத பழனிவேல்!
Palanivel Shocking Movement : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் கடைக்கு முன்பாக சென்ற பழனிவேல் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது பற்றி பார்க்கலாம். இந்த வாரம் முழுவதும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனிவேலுவின் கடை திறப்பு விழா தொடர்பான காட்சிகள் இடம் பெற்று வருகின்றன. கடை எங்கு இருக்கிறது, என்ன கடை என்பது பற்றி பழனிவேலுவிற்கு மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள மற்ற யாருக்குமே தெரியாது. அதாவது காந்திமதி, மாரி, வடிவு, சுகன்யா, பழனிவேல் என்று யாருக்குமே தெரியாது.
பழனிவேல், சுகன்யா
உண்மையில் பழனிவேலுவிற்காக அவர்களது அண்ணன்களான சக்திவேல் மற்றும் முத்துவேல் இருவரும் கடைக்கு ஏற்பாடு செய்யவில்லை. பாண்டியனை பழிவாங்கவே இந்த கடைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கடைக்கு செல்லும் வரையில் பழனிவேலுவிற்கு மட்டுமின்றி மற்ற யாருக்குமே கடை எங்கு இருக்கிறது என்பது தெரியாது. கடையை பார்த்ததுமே பழனிவேல் எங்காவது ஓடியிருப்போறான் என்று அண்ணன்கள் இருவரும் பேசிக் கொண்டனர்.
சொந்தமாக கடை திறக்கும் பழனிவேல்
முதலில் கோயிலுக்கு சென்றுவிட்டு அங்கு பிரார்த்தனைகளை செய்த பிறகு பழனிவேல், சக்திவேல் மற்றும் முத்துவேல் ஆகியோர் கடைக்கு சென்றனர். செல்லும் வழியெங்கும் பழனிவேல் கடை எங்கு இருக்கிறது? ஏன், இந்த பக்கம் வருகிறோம் என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கே தெரிந்துவிட்டது. இந்த தெருவில் தான் மச்சானின் கடை இருக்கிறது. அப்படியிருக்கும் போது இந்த பக்கம் ஏன் வருகிறோம் என்று கேட்டார்.
பாண்டியன், கோமதி, காந்திமதி
இரு இன்னும் 2 நிமிடத்தில் கடை வந்திடும் என்றனர். கடைசியாக கடைக்கு அருகில் சென்ற போது இதுதான் உன்னுடைய கடை என்று சொன்ன போது கடையை பார்த்த பழனிவேல் அதிர்ச்சி அடைந்தார். மேலும், ஏன் வேறு இடமே இல்லாத மாதிரி இங்கு ஏன் கடையை ஆரம்பிச்ச என்று தன்னுடைய அண்ணனிடம் கேள்வி கேட்டார். இதே ரோட்டுல தான் மச்சான் கடையும் இருக்கு.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
மச்சான் கடை இருக்கும் அதே ரோட்டுல நான் எப்படி கடை திறக்க முடியும், எப்படி வியாபாரம் பார்க்க முடியும், அச்சச்சோ மச்சானுக்கு எதிராக நானா என்னால் முடியாது என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். மேலும், இது அவருக்கு பண்ணும் துரோகம். அவர் என்னைப் பற்றி என்ன நினைப்பார் என்று பேசினார். அவருக்கு ஆதரவாக காந்திமதியும் பேசினார்.
காந்திமதி ஸ்டோர்ஸ்
இதைத் தொடர்ந்து வடிவும், இந்த 2 கடைக்கும் நடுவில் குறைந்தது ஒரு 15 கடை இருக்கும் என்று குமரவேல் சொன்னதாக கூறினார். இப்படி எல்லோருமே பேச கடைசியில் சுகன்யா பழனிவேலுவை தனியாக அழைத்துச் சென்று பேசினார். இன்னமும் அடிமையாக வேலை பார்க்க போகிறீர்களா? உங்க மச்சான் ஒன்னும் பண்ண மாட்டார். நீங்கள் இந்த கடையை நடத்தி தான் ஆகணும். முடியாது என்று சொன்னால் நான் என்னுடைய வீட்டிற்கு சென்றுவிடுவேன் என்று மிரட்டும் தோணியில் பேசினார்.
பழனிவேலுவின் புதிய கடை
பழனிவேலுவின் உள் மனசு இல்ல இது தப்பு முடியாது அப்படி செய்யக் கூடாது என்று தனது அண்ணன் கையை பிடித்துக் கொண்டு கதறி அழுதார். அதற்கு முத்துவேல் ஒருத்தருடைய வியாபாரத்தை இன்னொருவரால் தடுத்து நிறுத்த முடியாது என்றார். வேறு வழியில்லாமல் பழனிவேல் அமைதியாக இருந்தார். இனி நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.