MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • உயிலை எடுத்த சோழனுக்கு அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி... சிக்கினாரா நிலா? அய்யனார் துணை சீரியல் ட்விஸ்ட்

உயிலை எடுத்த சோழனுக்கு அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி... சிக்கினாரா நிலா? அய்யனார் துணை சீரியல் ட்விஸ்ட்

அய்யனார் துணை சீரியலில் சோழனும் நிலாவும் உயிலை எடுக்க வீட்டுக்குள் சென்றிருந்த நிலையில், அவர்கள் உயிலையும் கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 18 2026, 11:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ayyanar Thunai Serial Today Episode
Image Credit : jiohotstar

Ayyanar Thunai Serial Today Episode

அய்யனார் துணை சீரியலில் நடேசனின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், அவர் தன்னுடைய மகன்கள் மற்றும் நிலாவுடன் ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருக்கிறார். வீட்டை பெரியப்பாவிடம் இருந்து மீட்க வேண்டும் என்றால், உயில் நம்முடைய கைக்கு வர வேண்டும் என முடிவெடுக்கும் சோழன், அந்த உயில் வீட்டில் இருக்கிறது என்பதை நிலாவின் உதவியோடு தெரிந்துகொள்கிறார். இதையடுத்து, இருவரும் வீட்டுக்குள் ஏறி குதித்து உயிலை எடுக்க சென்றிருக்கிறார்கள். சோழன் உயிலை எடுக்க உள்ளே குதித்துள்ளார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
உயிலை எடுத்த சோழன்
Image Credit : jiohotstar

உயிலை எடுத்த சோழன்

ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கி, சோழன் உயிலை தேடிக்கொண்டிருக்கிறார். அவர் எங்கு தேடியும் உயில் இல்லை என சொல்ல, நல்லா தேடுங்க, இல்லேனா, நான் உள்ள இறங்கி வந்தேன்னா அவ்வளவுதான் என மிரட்டுகிறார் நிலா. அதன்பின்னர் மேலே தூசியடைந்து கிடக்கும் டிரங்கு பெட்டியை எடுத்து தேடுகிறார் சோழன். அதில் அவர் தேடிய உயில் கிடைத்துவிடுகிறது. இதனால் இருவருமே சந்தோஷமடைகிறார்கள். இதையடுத்து கயிற்றின் மூலம் மேலே ஏறி வரும் சோழன், நிலாவிடம் அந்த உயிலை கொடுக்கிறார். அவரும் உடனடியாக அந்த உயிலை எடுத்து படித்துப் பார்க்கிறார்.

Related Articles

Related image1
நிலா கொடுத்த பலே ஐடியா... பெரியப்பாவை கடத்திய சோழன் - அய்யனார் துணை சீரியலில் செம ட்விஸ்ட்
Related image2
உயில் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த நிலா... சோழன் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
35
திடீர் எண்ட்ரி கொடுக்கும் பெரியப்பா
Image Credit : jiohotstar

திடீர் எண்ட்ரி கொடுக்கும் பெரியப்பா

அந்த உயிலில், வீடு நடேசனுக்கு தான் சொந்தம் என எழுதி இருப்பதை பார்க்கும் நிலா, சந்தோஷமடைகிறார். இதன்பின்னர் ஏணி வழியாக இருவரும் இறங்குகிறார்கள். பின்னர் வெளியே செல்வதற்காக கேட்டை நோக்கி இருவரும் நடந்து சென்றபோது, கேட்டை திறக்கும் சத்தம் கேட்கிறது. சத்தத்தை கேட்டது, அருகில் இருந்த செடிக்குள் இருவரும் ஒளிந்துகொள்கிறார்கள். கேட்டை திறந்து சோழனின் பெரியப்பா உள்ளே வருகிறார். வீட்டின் உள்ளே யாராவது இருக்கிறார்களா என்பதை சோதனை செய்ய வந்திருக்கிறார். அவருக்கு தெரியாமல் சோழனும், நிலாவும் ஒளிந்திருக்கிறார்கள்.

45
ரூமுக்கு வரும் சோழன் - நிலா
Image Credit : jiohotstar

ரூமுக்கு வரும் சோழன் - நிலா

வீட்டில் யாரும் இல்லை என்று தெரிந்த பின்னர் அவர் கேட்டை மூடிவிட்டு செல்கிறார். அவர் போன பின்னர் சோழனும் நிலாவும் அந்த கேட்டின் மீது ஏறி குதித்து வெளியே செல்கிறார்கள். பின்னர் காரில் கிளம்பி ஓட்டலுக்கு சென்றுவிடுகிறார்கள். அங்கு சோழனிடம் பேசும் நிலா, உயில் கிடைச்சிடுச்சு இனிமே நம்ம வீட்டுல எந்த பிரச்சனையும் இல்லை. நாளைக்கே நம்ம வீட்டுக்கு போயிடலாம் என சொல்கிறார். இதையடுத்து, சோழன், நான் உங்க ரூம்லயே வந்து படுத்துக்குறேன் என கேட்கிறார். ஆனால் அதற்கு நோ சொன்ன நிலா, நீ உன்னோட ரூமுக்கே போ என அனுப்பி வைக்கிறார்.

55
நிலா ரூமில் தங்கும் சோழன்
Image Credit : jiohotstar

நிலா ரூமில் தங்கும் சோழன்

இதன்பின்னர் இரவில் நிலா வெளியே வந்து பார்க்கும்போது சோழன் வாசலிலேயே படுத்திருக்கிறார். என்னவென்று நிலா விசாரிக்கையில், எவ்வளவு நேரம் தட்டியும் யாருமே கதவை திறக்கலனு சொல்கிறார் சோழன். இதன்பின்னர் சோழனை தன்னுடைய ரூமில் வந்து படுக்க சொல்கிறார் நிலா, அங்கு நிலா பெட்டில் படுத்திருக்க, சோழன் கீழே படுத்துக் கொள்கிறார். உயில் கிடைத்த சந்தோஷம் ஒருபுறமும், நிலா ரூமில் படுத்திருக்கும் சந்தோஷமும் மறுபுறம் என டபுள் சந்தோஷத்தில் இருக்கிறார் சோழன். இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
தமிழ் சீரியல்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Bigg Boss Wild Card entry: பிக்பாஸ் வீட்டில் புதிய புயல்..ஆனந்தியின் அதிரடி என்ட்ரி
Related Stories
Recommended image1
நிலா கொடுத்த பலே ஐடியா... பெரியப்பாவை கடத்திய சோழன் - அய்யனார் துணை சீரியலில் செம ட்விஸ்ட்
Recommended image2
உயில் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த நிலா... சோழன் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved