MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ரவியை புருஷனாக்கிய நீத்து; பதறிப்போன ஸ்ருதி... மனோஜுக்கு குட்நியூஸ் சொன்ன ஸ்வேதா - சிறகடிக்க ஆசை

ரவியை புருஷனாக்கிய நீத்து; பதறிப்போன ஸ்ருதி... மனோஜுக்கு குட்நியூஸ் சொன்ன ஸ்வேதா - சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி பெயரில் பொக்கே ஷாப் ஒன்றை தொடங்க உள்ள நீத்து, ஸ்ருதிக்கு அழைப்பிதழ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 06 2026, 07:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Siragadikka Aasai Serial Today Episode
Image Credit : jiohotstarSiragadikka Aasai

Siragadikka Aasai Serial Today Episode

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா, சிந்தாமணியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட உள்ளார். மீனாவை எப்படியாவது ஜெயிக்க வைக்க வேண்டும் என ஸ்வேதா, ஸ்ருதி ஆகியோர் தங்கள் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். மறுபுறம் மீனாவை இந்த தேர்தலில் நிற்க விடாமல் தடுக்க சிந்தாமணி தன்னுடைய ஆட்களுக்கு பணத்தை கொடுத்து மீனாவை போட்டுத்தள்ள சொல்லி உள்ளார். இது தெரியாமல் மீனா தன்னுடைய கணவர் முத்து உடன் சேர்ந்து தேர்தலுக்காக நோட்டீஸ் கொடுத்து வருகிறார். மீனாவுக்கு ஆதரவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

26
மனோஜுக்கு வரன் பார்த்த ஸ்வேதா
Image Credit : jiohotstarSiragadikka Aasai

மனோஜுக்கு வரன் பார்த்த ஸ்வேதா

இன்றைய எபிசோடில் ஸ்வேதா, விஜயாவின் வீட்டிற்கு வருகிறார். அவர் அனைவரிடமும் தான் ஒரு குட் நியூஸ் கொண்டு வந்திருப்பதாக சொல்லி, மனோஜுக்கு தனக்கு தெரிந்த ஃபிரெண்டு ஒருவர் மூலம் ஒரு வரன் வந்திருப்பதாக சொல்கிறார். பொண்ணு ஏற்கனவே திருமணமாகி ஓராண்டில் டைவர்ஸ் ஆனவர் என்றும், ஆனால் அவருடைய குடும்பம் பெரும் பணக்காரர்கள் எனக் கூறும் ஸ்வேதா, அவருடைய ஃபேமிலி தற்போது அமெரிக்காவில் இருப்பதாக கூறுகிறார். உடனே விஜயா, பெண் பார்க்க அமெரிக்காவா செல்ல முடியும் என கேட்க, ஆன்லைனிலேயே பேசி முடிக்கலாம் என கூறுகிறார் ஸ்வேதா.

Related Articles

Related image1
தேர்தலில் மீனாவை டம்மி பீஸ் ஆக்க சிந்தாமணி கையிலெடுக்கும் ஆயுதம் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Related image2
விஜயாவின் எதிர்ப்பை மீறி தேர்தலில் போட்டியிடுவாரா மீனா? சிறகடிக்க ஆசை சீரியல் ஹைலைட்ஸ்
36
ஓகே சொன்ன மனோஜ்
Image Credit : jiohotstarSiragadikka Aasai

ஓகே சொன்ன மனோஜ்

மறுபுறம் மனோஜ், பொண்ணு ஏற்கனவே கல்யாணம் ஆனவங்களா இருக்காங்க அது தான் பிரச்சனை என சொல்ல, நீயும் ஏற்கனவே கல்யாணம் ஆனவன் தாண்டா என சொல்லி கிண்டல் பண்ணுகிறார் முத்து. அதன்பின்னர் பொண்ணுடைய அப்பாவுக்கு சொந்தமாக ஃபிளைட் இருப்பதாக ஸ்வேதா சொன்னதும் வாயடைத்துப் போன விஜயா, உடனே இந்த சம்மதத்துக்கு ஓகே சொல்கிறார். மனோஜும் ஃபிளைட் இருப்பதை கேள்விப்பட்டதும் டக்குனு மனம்மாறி சம்மதம் தெரிவிக்கிறார். அதுமட்டுமின்றி ஸ்வேதாவை தங்கச்சி என்றும் அழைக்கிறார். இதைப்பார்த்த முத்து, ஃபிளைட் இருக்குனு தெரிஞ்சதும் ஸ்வேதாவை தங்கச்சி ஆக்கிட்டான் பாத்தியா என சொல்லி கிண்டல் பண்ணுகிறர்.

46
ஸ்ருதிக்கு நீத்து கொடுத்த அதிர்ச்சி
Image Credit : jiohotstarSiragadikka Aasai

ஸ்ருதிக்கு நீத்து கொடுத்த அதிர்ச்சி

இந்த விஷயத்தை ஸ்ருதியிடம் சொல்வதற்காக அவருடைய ரெஸ்டாரண்டுக்கு செல்கிறார் மீனா. அங்கு ஸ்ருதியிடம் மனோஜுக்கு மிகப்பெரிய வரன் கிடைத்திருப்பதை சொல்வதோடு, நீங்க நிச்சயம் பேச கண்டிப்பாக வர வேண்டும் என அழைக்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதிக்கு ஒரு கொரியர் வருகிறது. அதை திறந்து பார்த்த ஸ்ருதிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நீத்து தான் அந்த கொரியரை அனுப்பி இருக்கிறார். அவர் புதிதாக தொடங்க உள்ள ரவி பொக்கே ஷாப்பிற்கான அழைப்பிதழை அனுப்பி இருக்கும் நீத்து. அதில் தன்னுடைய பெயரை நீத்து ரவி என குறிப்பிட்டு இருக்கிறார்.

56
மீனா கொடுக்கும் ஐடியா
Image Credit : jiohotstarSiragadikka Aasai

மீனா கொடுக்கும் ஐடியா

நீத்துவின் இந்த செயலால் அதிருப்தி அடையும் ஸ்ருதி, என்ன செய்வதென்று யோசிக்கையில், மீனா அவருக்கு ஒரு ஐடியா கொடுக்கிறார். நீத்து அந்த பொக்கே ஷாப் ஓபன் பண்ணும் நாள் அன்று நீங்களும் ரவியும் வெளியூர் போயிருங்க. அது தான் அவளுக்கு நீங்க கொடுக்குற பதிலடியா இருக்கும் என சொல்கிறார். நாங்க போயிட்டா கடையை யார் பார்த்துப்பாங்க என ஸ்ருதி கேட்க, அதற்கு மீனா, நானும் அவரும் பாத்துக்குறோம் என சொல்கிறார். மறுபுறம் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வந்திருந்த சிந்தாமணியிடம் அவரது ஆதரவாளர்கள், நீங்க தான் ஜெயிப்பீங்க என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

66
வேட்பு மனு தாக்கல் செய்யும் மீனா
Image Credit : jiohotstarSiragadikka Aasai

வேட்பு மனு தாக்கல் செய்யும் மீனா

அந்த நேரம் பார்த்து மீனா வேட்புமனு தாக்கல் செய்ய வருகிறார். அவரை மேளதாளம் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் அழைத்து வருகிறார் முத்து. இதைப்பார்த்து வயித்தெறிச்சல் படும் விஜயா, வேட்புமனு தாக்கல் பண்ணுவதற்கே இந்த அலப்பறையா என கேட்க, என் பொண்டாட்டி தலைவி ஆகப்போறா அதனால் தான் இப்படி செய்கிறோம் என சொல்லி ஆட்டம் போடுகிறார் முத்து. இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இதையடுத்து என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிறகடிக்க ஆசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாண்டியன்; அன்பால் ஒன்றிணைந்த கோமதி அண்ட் பாண்டியன்: Pandian Stores 2 சீரியலில் மலரும் க்யூட் ரொமான்ஸ்!
Recommended image2
கார்த்திக்கைப் பார்க்கத் துடித்த ரேவதி... அதிர்ச்சியில் மயங்கி விழுந்த கோரம்! பதறியடித்து மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்ற கார்த்திக்!
Recommended image3
பாண்டியனை தெருத் தெருவாக அலையவிடும் கோமதி; மீனாவிடம் திட்டுவாங்கிய செந்தில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Related Stories
Recommended image1
தேர்தலில் மீனாவை டம்மி பீஸ் ஆக்க சிந்தாமணி கையிலெடுக்கும் ஆயுதம் - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Recommended image2
விஜயாவின் எதிர்ப்பை மீறி தேர்தலில் போட்டியிடுவாரா மீனா? சிறகடிக்க ஆசை சீரியல் ஹைலைட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved