- Home
- Cinema
- தொலைக்காட்சி
- 30 வருட பகை; பாண்டியன் முன்பு அவமானப்பட்டு தலைகுணிந்த முத்துவேல் அண்ட் சக்திவேல்!
30 வருட பகை; பாண்டியன் முன்பு அவமானப்பட்டு தலைகுணிந்த முத்துவேல் அண்ட் சக்திவேல்!
Muthuvel was humiliated and bowed his head : அம்மா காந்திமதியின் 75ஆவது பிறந்தநாளுக்காக அசைவ உணவுக்கு ஏற்பாடு செய்ய சொல்ல குமரவேல் அதனை மறக்கவே பாண்டியன் குடும்பத்தினர் முன்பு முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் அவமானப்பட்டுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. முதல் சீசன் வெற்றிகரமாக ஓடிய நிலையில் இப்போது 2ஆவது சீசனும் 600 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் முழுவதும் காந்திமதியின் 75ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் இருவீட்டார் குடும்பத்தினரும் காந்திமதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பாண்டியன் அண்ட் கோமதி
அதோடு கடந்த வார எபிசோடு முடிந்தது. இந்த வாரமும் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்ந்தது. இதில், முத்துவேல் மற்றும் சக்திவேல் குடும்பத்தினர் அம்மாவின் பிறந்தநாளுக்காக அசைவ உணவுக்கு ஏற்பாடு செய்தனர். குமரவேல் தான் அதன் பொறுப்பை ஏற்றிருந்தார். ஆனால், சமையல் மாஸ்டர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூழலில் அவரால் முத்துவேல் குடும்பத்தினர் வீட்டிற்கு சமையல் செய்ய முடியவில்லை.
காந்திமதி 75ஆவது பிறந்தநாள்
மேலும், மாற்றி ஏற்பாடு செய்து தருவதாக மற்றொரு சமையல்காரர் நம்பர் கொடுத்தார். ஆனால், அந்த நம்பருக்கு போன் போட்டு சமையல்காரரிடம் பேசுவதற்கு குமரவேல் மறந்துவிட்டார். இந்த நிலையில் தான் பிறந்தநாள் விழா முடிந்து சாப்பிடும் நேரமும் வந்தது. சக்திவேல் உறவினர்களை அழைத்துக் கொண்டு சாப்பிட வந்தார்.
ஆனால், அப்போது சாப்பாடு வரவில்லை. பிறகு தாமதமாக வந்தது. ஆனால், அவர்கள் கொண்டு வந்தது புளியோதரை, தயிர் சாதம் மற்றும் லெமன் சாதம். இது பாண்டியன் வீட்டார் ஏற்பாடு செய்த அன்னதானம். அவர்கள் உரிய நேரத்தில் கொண்டு வந்தனர். ஆனால், சக்திவேல் குடும்பத்தினர் ஏற்பாடு செய்த சாப்பாடு வரவில்லை.
ரூ.5 கோடிக்காக தனது இடத்தை விற்று அத்தையின் மானத்தை காப்பாற்றிய கார்த்திக்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் மற்றும் முத்துவேல் இருவரும் குமரவேலுவிடம் கேட்க அவரோ மறந்துவிட்டதாக சொல்ல கோபத்தின் உச்சத்திற்கு சென்ற முத்துவேல் குமரவேலுவை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். பின்னர் உறவினர்களும் ஆத்திரமடைந்து சோத்துக்காக இங்கு வந்தோம் என்றெல்லாம் பேச பாண்டியன் மற்றும் கதிர் இருவரும் இணைந்து உறவினர்களை சாப்பிட அழைத்தனர். கடைசியாக காந்திமதியையும் அழைத்து சாப்பிட வைத்தனர். இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாத சக்திவேல் மற்றும் முத்துவேல் இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்று ஒளிபரப்பாக இருக்கிறது. இனி நாளைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று நாளை பார்க்கலாம்.