- Home
- Cinema
- தொலைக்காட்சி
- முத்துவால் ரோகிணிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி... மீனாவின் ஆர்டரை தூக்கிப்போட்ட சிந்தாமணி - சிறகடிக்க ஆசை
முத்துவால் ரோகிணிக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி... மீனாவின் ஆர்டரை தூக்கிப்போட்ட சிந்தாமணி - சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணிக்கு, முத்து சவாரி செல்லவில்லை என்கிற தகவல் கிடைத்ததால் சந்தோஷமாக இருக்கிறார். ஆனால் அவருக்கு மற்றுமொரு பேரதிர்ச்சி காத்திருக்கிறது.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் முதல் கணவர் சேகரின் அண்ணன் சென்னைக்கு வந்துள்ள நிலையில், அவர் தன் மனைவிக்கு 15 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாததால், மருத்துவமனைக்கு சென்று செக் அப் செய்வதற்காக ஐந்து நாட்கள் முத்துவின் காரை வாடகைக்கு பேசி இருந்தார். இந்த தகவல் வித்யா மூலம் ரோகிணிக்கு தெரியவர, அவர் முத்துவை இந்த சவாரிக்கு செல்லவிடக் கூடாது என்பதற்காக தன்னுடைய மாமியாரை தனியாக பாண்டிச்சேரிக்கு அழைத்து சென்றுவிடுகிறார். வீட்டில் அப்பா தனியாக இருப்பதால் முத்து சவாரியை கேன்சல் பண்ணிவிடுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
நிம்மதி அடையும் ரோகிணி
ரோகிணி தன்னுடைய அம்மாவிடம் போன் போட்டு, கிரிஷோட பெரியப்பாவிடம் போன் போட்டு, விசாரிப்பது போல் அவர்கள் யார் காரில் செல்கிறார்கள் என்பதையும் கேட்க சொல்கிறார். அவரும் போன் போட்டு விசாரித்துவிட்டு, அவர்கள் செல்வம் காரில் செல்வதாக சொல்ல, ரோகிணி நிம்மதி பெருமூச்சு விடுகிறார். தன்னால் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதால் தான் முத்து தன்னுடைய நண்பன் செல்வத்தை அந்த சவாரிக்கு அனுப்பி வைத்திருந்தார். ஆனால் செல்வம், இன்று ஒருநாள் மட்டும் தான் நான் செல்வேன், நாளை எனக்கு வேறொரு சவாரி இருக்கு என சொல்லிவிடுகிறார்.
முத்து வைத்த ட்விஸ்ட்
இதையடுத்து, யோசித்த முத்து, சரி இன்று நீ போ, நாளைக்கு நான் ரவியை வீட்டில் இருக்க வைத்துவிட்டு, அவர்களை அழைத்து செல்கிறேன் என சொல்கிறார். இந்த விவகாரம் ரோகிணிக்கு தெரியாது. அவர் முத்து அந்த சவாரிக்கு செல்ல மாட்டான் என மிதப்பில் இருக்கிறார். நாளை முத்து அந்த சவாரிக்கு சென்றால், ரோகிணியின் முதல் கணவர் பற்றி முத்துவுக்கு தெரியவர வாய்ப்பு உள்ளது. அதனால் ரோகிணி பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரவும் சான்ஸ் இருக்கிறது. வீட்டில் பெண்கள் யாரும் இல்லாததால், முத்து, மனோஜ், அண்ணாமலை, ரவி ஆகியோர் ஜாலியாக சமைத்து சாப்பிட்டு அரட்டை அடிக்கிறார்கள்.
கோபமடையும் சிந்தாமணி
மறுபுறம் சிந்தாமணி தன்னுடைய மகளை சந்திக்க ஓட்டலுக்கு சென்றிருக்க, அங்கு அவருக்கு ஒரு போன் கால் வருகிறது. அதை எடுத்து பேசும் அவரிடம், ஒரு பூ ஆர்டம் வந்திருப்பதாக சொல்கிறார். அந்த ஆர்டர் மீனா எடுத்திருந்தா தான என சிந்தாமணி கேட்க, ஆமா அக்கா, அவங்க திடீர்னு வெளியூர் போனதால ஆர்டரை கேன்சல் பண்ணிட்டாங்க. அதனால் நமக்கு அந்த பூ ஆர்டர் வந்திருக்கு என அந்த நபர் சொல்ல, அதைக்கேட்டு கடுப்பான, அவ வேண்டாம்னு சொன்ன ஆர்டரை நமக்கு பிச்சை போடுறாங்களா... அதை நான் ஏற்க மாட்டேன் என சொல்லி ரிஜெக்ட் பண்ணிவிடுகிறார். இதையடுத்து என்ன ஆகப்போகிறது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.