- Home
- Cinema
- தொலைக்காட்சி
- டிசம்பர் மாதம் சன் டிவி சீரியல்களில் காத்திருக்கும் திக்... திக் திருப்பங்கள் என்னென்ன?
டிசம்பர் மாதம் சன் டிவி சீரியல்களில் காத்திருக்கும் திக்... திக் திருப்பங்கள் என்னென்ன?
சன் டிவியில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது, சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல், அன்னம் ஆகிய சீரியல்களில் டிசம்பர் மாதம் என்னென்ன ட்விஸ்ட் காத்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.

சிங்கப்பெண்ணே
மகேஷின் முயற்சியால் ஹனிமூன் செல்லும் அன்பு மற்றும் ஆனந்தி, அங்கு எதிர்பாராமல் ஏற்படும் பிரச்சனை, சூழ்ந்திருக்கும் பிரச்சனைகளில் இருந்து அன்புவும், ஆனந்தியும் தப்பிப்பார்களா? இல்லையா? என்கிற பரபரப்பான திருப்பங்களுடன் சிங்கப்பெண்ணே சீரியல் நகர இருக்கிறது.
எதிர்நீச்சல் தொடர்கிறது
தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், சக்தியின் நிலைக்கு காரணமான ஆதி குணசேகரனை பழிவாங்க முடிவெடுக்கிறார் ஜனனி. இந்த முறை ஜனனி கொடுக்கும் பதிலடியால் திணறிப்போகிறார் ஆதி குணசேகரன். இதுபோன்ற பரபரப்பான திருப்பங்களும் வரவிருக்கின்றன.
ஆடுகளம்
ஆடுகளம் சீரியலில் தேவி பற்றிய உண்மையை அறிய செல்வநாயகி திட்டம் போடுகிறார். இதனால் சத்யா, தேவிக்கு இடையே விரிசல் வரப்போகிறது. செல்வநாயகிக்கு உண்மை தெரிய வருமா? என்கிற பரபரப்பான திருப்பத்துடன் ஆடுகள் சீரியல் செல்ல உள்ளது.
கயல்
தன் கற்பனையிலும் எட்டாத பிரச்சனையை சந்திக்கிறார் கயல். அன்புக்கும் எழிலுக்கும் இடையே மோதல் வெடிக்கிறது. எழில் எடுக்கும் முடிவால் தலைகீழாக மாறப்போகும் கயலின் வாழ்க்கை என அனல்பறக்கும் ட்விஸ்டுகளுடன் கயல் சீரியல் செல்ல உள்ளது.
மருமகள்
சன் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் மருமகள் சீரியலில் குடும்பத்தை காப்பாற்ற ஆதிரை எடுக்கும் முடிவு. அந்த முடிவால் பிரபுவுக்கு ஏற்படும் அவமானம், பிரபுவால் ஆதிரைக்கு காத்திருக்கும் திக் திக் தருணங்களை இந்த மாதம் பார்க்கலாம்.
அன்னம்
சரவணன், ரம்யா திருமணத்தை நிறுத்த போராடும் அன்னத்திற்கு எதிராக பகை ஒன்றிணைகிறது. குடும்ப மரியாதையை நிலைநிறுத்த அன்னம் எடுக்கும் முயற்சி என்ன என்பதை விறுவிறுப்பான திருப்பங்களுடன் டிசம்பரில் காணலாம்.
மூன்று முடிச்சு
மூன்று முடிச்சு சீரியலில் நந்தினியின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர சூர்யா நினைக்கிறார். அதைக்கேள்விப்பட்டு அதிர்ச்சியடைகிறார் சுந்தரவள்ளி. நந்தினியை பழிவாங்க சுந்தரவள்ளியால் வரப்போகும் புதிய பிரச்சனை என்ன என்பதை மிஸ் பண்ணாம பாருங்க.

