- Home
- Cinema
- தொலைக்காட்சி
- இதெல்லாம் கனவா- இவரெல்லாம் சீக்கிரமா எழுந்திச்சிருவாரா? கனவில் மீனா கண்ட காட்சி நிறைவேறுமா?
இதெல்லாம் கனவா- இவரெல்லாம் சீக்கிரமா எழுந்திச்சிருவாரா? கனவில் மீனா கண்ட காட்சி நிறைவேறுமா?
Meena Dream About Senthil in Pandian Stores 2 Serial : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா, தனது கணவர் செந்தில் தொடர்பான ஒரு கனவு கண்டுள்ளார். அதைப் பற்றி பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒரு வழியாக பழனிவேல் தொடர்பான காட்சிகள் வெற்றிகரமாக முடிந்தது. அதாவது அவர் வெற்றிகரமாக கடை திறந்துவிட்டார். காந்திமதி ஸ்டோர்ஸ் கடையை திறந்து வெற்றிகரமாக நடத்த தொடங்கிவிட்டார். இனி அவர் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன இருக்கும் என்று அடுத்தடுத்த எபிசோடிகளில் பார்க்கலாம். அதற்கு முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 648ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடானது ராஜீ மற்றும் கதிர் தொடர்பான காட்சிகளோடு தொடங்குகிறது. அவர்கள் பேசுவதை கேட்டு சரவணன் வந்து கதவை திறக்கிறார். மேலும், அவர் ஹாலில் படுத்திருப்பதை கண்டு தங்கமயிலுக்கும் உங்களுக்கும் இடையில் ஏதேனும் சண்டையா என்று கதிர் கேட்க அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிடுகிறார். இதைத் தொடர்ந்து பழனிவேல் எங்கே என்று பாண்டியன் கேட்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
டேய் பழனி பழனி என்று கூப்பிட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். டெலிவரி நிறைய இருக்கு எங்கடி உன்னுடைய தம்பி காலையிலேயே கடைக்கு போயிட்டானா என்று கேட்கிறார். அதற்கு சரவணன் ஆமாம் அப்பா அவர் அவருடைய கடைக்கு போய்விட்டார் என்றார். மேலும், இனி எல்லா வேலையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சரவணன் கூற, அண்ணே நானும் கடைக்கு வருகிறேன் என்று கதிர் சொல்ல பின்னர் தங்கமயில் அது எதுக்கு மாமா நான் இருக்கிறேன். அப்பா இருக்காரு, ஆகையால் கடையில் உள்ள வேலைகளை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உங்களுக்கு என்ன 100 கை, 1000 காலா இருக்கா என்று கேட்க, மேலும், எல்லா வேலைகளையும் எல்லோரும் சேர்ந்து பார்த்துக் கொள்வோம்.
மீனா கனவில் என்ன நடந்தது?
எனக்கும் வீட்டில் வேலைகள் இருக்கத்தா செய்கிறது. அதையெல்லாம் முடித்துக் கொண்டு நான் கடைக்கு வந்துவிடுகிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து பார்த்துக் கொள்வோம் என்றார். ஆனால், அதில் சரவணனுக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்லை. இன்னும் கொஞ்ச நாள் எப்படி பிஸினஸ் போகுது என்று பார்த்து அதன் பிறகு கடை வேலைக்கு ஆள் வைத்துக் கொள்வோம் என்று பாண்டியன் கூற அதோடு அந்த காட்சி முடிந்தது. அடுத்த காட்சியாக மீனா மற்றும் செந்தில் தொடர்பான காட்சிகள் வர இதில் மீனாவிற்கு கனவு வருகிறது.
கனவு கண்ட மீனா
அதில், செந்தில் காலையில் எழுந்து குளித்து முடித்து பட்டையெல்லாம் போட்டு கையில் மணி அடித்துக் கொண்டு கற்பூரம் ஏற்றிக் கொண்டு தனது மனைவிக்கு இவ்வளவு அழகு கொடுத்த மருதமலை, பழனி மலை முருகனே கொஞ்சம் அறிவு கொடுத்திருக்க கூடாது? எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறா, என்னை மட்டும் காப்பாற்று, மீனா டிபன் எல்லாம் ரெடி வந்து சாப்பிடு என்று சொல்வது போன்று அவருக்கு கனவு வர அப்போது மொபைல் போன் அலாரம் அடிக்கிறது. அதைக் கேட்டு எழுந்த மீனா கனவா இவராவது நேரத்துல எழுந்திருப்பதாவது என்று கூறிக் கொண்டே செந்திலை எழுப்புகிறார்.
கோட் பட காட்சியை காப்பியடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்
ஆனால், அவர் எழுந்திரிக்கவில்லை. பின்னர் 7 மணிக்கு எழுந்திருக்கிறேன் என்று செந்தில் சொல்லிவிட்டார். இந்த காட்சி விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் இடம் பெற்றிருந்த காட்சி. கோட் படத்தில் விஜய் கையில் மணி அடித்துக் கொண்டும், ஒரு கையில் கற்பூர ஆர்த்தியை காண்பித்துக் கொண்டும் மருதமலை மாமணியே என்ற பாடலை பாடிக் கொண்டே வருவார். அந்த காட்சியை காப்பியடித்து இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்தில் மற்றும் மீனா தொடர்பான காட்சிக்கு வைத்துவிட்டார்கள். எப்போது மீனாவிற்கு பிடித்த மாதிரி செந்தில் நடந்து கொள்ள போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.