Cook With Comali 4 : குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய கோமாளி.. ரசிகர்கள் அதிர்ச்சி !!
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து முக்கியமான கோமாளி ஒருவர் வெளியேறுகிறார் என்ற தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் டிவியில் வெளியாகும் குக் வித் கோமாளி தொடர்தான் தற்போது இளசுகள் முதல் அனைத்து தரப்பினருக்குமான முழு பொதுதுபோக்கு நிகழ்ச்சியாக இருக்கிறது. மேலும் சமையல் நிகழ்ச்சியை புதுவிதமாக முயற்சித்து, அதனை தற்போது நான்காவது சீசன் வரை ட்ரெண்டிங்கில் வருகிறது.
இதில் சமையல்கலை வல்லுநர்களான செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் ஆகியோர் நடுவர்களாக மட்டுமல்லாமல், காமெடியையும் செய்வதால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. சனி, ஞாயிறு தினங்களில் வரும் எபிசோட்களை குட்டிஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கிறார்கள்.
புகழ், பாலா, மணிமேகலை, சுனிதா, ஷிவாங்கி, குரேஷி என இவர்களின் கூட்டணிதான் கடந்த மூன்று சீசன்களையும் தாங்கியது என்றே கூறலாம். தற்போது நடைபெறும் 4ஆவது சீசனில் விசித்ரா, ஷெரின், மைம் கோபி, காளையன், ஸ்ருஷ்டி டாங்கே, ராஜ் அய்யப்பா, விஜே விஷால், சிவாங்கி, ஆன்டிரியான் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மொத்தம் 10 போட்டியாளர்களில் கடந்த வாரம் இயக்குநர் கிஷோர் குமார் நிகழ்ச்சியிலிருந்து எவிக்ஷன் செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் தற்போது புதிய குக்காக சிவாங்கியும் புதிய கோமாளியாக ஜிபி முத்துவும், சிங்கப்பூர் தீபனும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து முக்கியமான கோமாளி ஒருவர் வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
குக் வித் கோமாளியின் முக்கிய கோமாளியாக அனைவரின் மனசில் இடம்பிடித்திருப்பவர் மணிமேகலை. அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், எனது கடைசி எபிசோட் இன்று. நானே வருவேன் கெட்-அப்பில் "நான் வரமாட்டேன் என்று அறிவிக்கிறேன். 2019ஆம் ஆண்டில், முதல் சீசனில் இருந்து குக்கு வித் கோமாளி தொடரில் எனது அனைத்து பெர்பாமேன்ஸ்களுக்கும் நீங்கள் அனைவருமே அபரிமிதமான அன்பை பொழிந்திருக்கிறீர்கள்.
அனைத்திருக்கும் நான் நன்றிகடன் பட்டுள்ளேன். எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் மற்றும் சூழ்நிலைகளில் சிறந்தவராக இருக்க நான் எப்போதும் கூடுதல் முயற்சி எடுக்கிறேன். குக்கு வித் கோமாளி மூலம் உங்கள் அனைவரையும் மகிழ்விப்பதில் நான் சிறப்பாக செயல்பட்டேன் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரிடம் இருந்தும் நான் பெற்ற அன்பு எதிர்பாராதது.
நான் என்ன செய்தாலும் அதே அன்பை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். அன்புடன் மணி என்று பதிவிட்டுள்ளார். மணிமேகலையின் இந்த அறிவிப்பு குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிமேகலைக்கு பதிலாக வேறு எந்த கோமாளி இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்படுத்தி உள்ளது.