- Home
- Cinema
- தொலைக்காட்சி
- புது குண்டை தூக்கிப்போட்ட கிரிஷின் பாட்டி... மாட்டிக் கொண்டு முழிக்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
புது குண்டை தூக்கிப்போட்ட கிரிஷின் பாட்டி... மாட்டிக் கொண்டு முழிக்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியை தன் சொந்த ஊருக்கு அழைக்கிறார் கிரிஷின் பாட்டி லட்சுமி, அங்கு மிகப்பெரிய சம்பவம் காத்திருக்கிறது. அது என்ன என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணிக்கு இரவில் போன் போடும் கிரிஷ், தனக்கு தூக்கம் வரவில்லை, உடனே நீ இங்க கிளம்பி வா என சொல்கிறார். இப்போலாம் என்னால வர முடியாது, நாளைக்கு காலையில வர்றேன் என சொல்லி கிரிஷை சமாதானப்படுத்துகிறார் ரோகிணி. தற்போது தனக்கு தூக்கம் வரவில்லை என்ன செய்வது என கிரிஷ் கேட்க, அதற்கு ரோகிணி, படுத்துகிட்டே ஒன்றில் இருந்து நூறு வரை கவுண்ட் பண்ணு தூக்கம் வந்திடும் என சொல்லி போனை வைக்கிறார். அப்போது போனில் யாரிடம் பேசுன என மனோஜ் கேட்க, நமக்கு ஆர்டர் கொடுத்தவங்க கிட்ட தான் பேசுனேன் என சொல்லி சமாளிக்கிறார் ரோகிணி.
முத்துவால் டென்ஷன் ஆன விஜயா
மீனாவுக்கு போன் போட்டு பேசும் முத்து, புதுசா கல்யாணம் ஆன விஜயாவுக்கு நம் வீட்டில் விருந்து வைக்க இருப்பதாக சொல்கிறார். இதைக் கேட்டு டென்ஷன் ஆன விஜயா, கண்டவங்களுக்கெல்லாம் விருந்து வைக்க இது என்ன சத்திரமா, இது என் வீடு, இங்கெல்லாம் யாருக்கும் விருந்து வைக்கக் கூடாது என சொல்கிறார். இதையடுத்து பேசும் முத்து, சரி நான் அவங்களை ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் விருந்து வைக்கிறேன் என சொல்கிறார். ஸ்ருதியின் ஹோட்டலில் வித்யாவுக்கு விருந்து வைக்க ஏற்பாடு செய்கிறார் முத்து. இதைக்கேட்ட ரோகிணி, பதறிப்போய் வித்யாவுக்கு போன் போட்டு பேசுகிறார்.
வித்யாவிடம் பேசும் ரோகிணி
முத்து விருந்து வைக்க இருக்கும் விஷயத்தை கூறும் ரோகிணி, அங்கு போய் தன்னைப்பற்றி எதுவும் உலறிவிடாதே என அவரிடம் கெஞ்சிக் கேட்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வித்யா, உன்னைப் பற்றி பேசுறது தான் எனக்கு வேலையா, நான் அங்கபோய் ஜாலியா இருக்கப் போறேன், தயவு செஞ்சு போனை வை என சொல்கிறார். மீனா தன்னைப் பற்றி ஏதாவது துருவி துருவி கேட்டுவிடுவாரோ என்கிற பயத்தில் ரோகிணி இவ்வாறு பேசி இருக்கிறார். இதையடுத்து கிரிஷை பார்க்க தன் தோழியின் வீட்டிற்கு செல்லும் ரோகிணி, அங்கு அவனிடம் கொஞ்சி பேசிக் கொண்டு இருக்கிறார்.
கிரிஷ் பாட்டியால் மாட்டப்போகும் ரோகிணி
அப்போது ரோகிணியிடம் பேசும் கிரிஷின் பாட்டி லட்சுமி, உன்னுடைய அப்பாவின் நினைவு நாள் வருகிறது. அதற்காக சொந்த ஊருக்கு சென்றி திதி கொடுக்க வேண்டும் என சொல்கிறார். இதைக்கேட்டு ஷாக் ஆன ரோகிணி, நீ என்னம்மா புது குண்டை தூக்கிப் போடுற. நாங்க அடுத்த வாரம் மனோஜின் பாட்டி ஊருக்கு சென்று தீபாவளி கொண்டாடப் போறோம் என சொல்ல, இதைக்கேட்ட லெட்சுமி, நல்லதா போச்சு, அங்கு இருந்து உங்க அப்பா ஊர் பக்கம் தான, வந்து இதை செஞ்சிட்டு போ என சொல்கிறார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் மாட்டிக் கொண்டு முழிக்கிறார் ரோகிணி. இதையடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.