- Home
- Cinema
- தொலைக்காட்சி
- சூடுபிடிக்கும் சன் டிவி சீரியல்கள்... இந்த வாரம் அரங்கேறப்போகும் அதிரடியான திருப்பங்கள் என்னென்ன?
சூடுபிடிக்கும் சன் டிவி சீரியல்கள்... இந்த வாரம் அரங்கேறப்போகும் அதிரடியான திருப்பங்கள் என்னென்ன?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல், மருமகள், எதிர்நீச்சல் தொடர்கிறது, சிங்கப்பெண்ணே, ஆடுகளம், மூன்று முடிச்சு ஆகிய சீரியல்களில் இந்த வாரம் அரங்கேறப்போகும் ட்விஸ்டுகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

Sun TV Serials Twist
சின்னத்திரையில் நம்பர் 1 சேனலாக சன் டிவி இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான். சன் டிவியில் காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சன் டிவியின் மாலை நேர சீரியல்களான கயல், எதிர்நீச்சல், அன்னம், ஆடுகளம், மருமகள், சிங்கப்பெண்ணே ஆகியவற்றில் இந்த வாரம் அனல்பறக்கும் திருப்பங்கள் அரங்கேற உள்ளன. அது என்னவென்று பார்க்கலாம்.
சிங்கப்பெண்ணே
தன்னுடைய சுயநலத்துக்கு மகேஷை கொலை செய்ய முடிவெடுக்கும் அரவிந்த். சுயமரியாதையோடு வாழப் போராடும் ஆனந்தி. அரவிந்தின் சூழ்ச்சியில் இருந்து மகேஷ் தப்பிப்பாரா? இல்லையா? என்பதை சிங்கப்பெண்ணே சீரியலில் இந்த வாரம் தெரியவரும்.
எதிர்நீச்சல் தொடர்கிறது
மரணத்தின் விளிம்பில் சிக்கி இருக்கும் சக்தி. சக்தியை ராமசாமி மெய்யப்பனிடம் இருந்து காப்பாற்ற போராடும் ஜனனி. வெல்லப்போவது ஜனனியின் போராட்டமா? அல்லது ஆதி குணசேகரனின் சூழ்ச்சியா? என்பது இந்த வாரம் தெரியவரும்.
ஆடுகளம்
தேவி பற்றிய உண்மையை அர்ஜுனிடம் உடைக்கப்போகும் சத்யா. உண்மை தெரிந்தால் அர்ஜுன், சத்யா வாழ்க்கையில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன? என்கிற எதிர்பாரா திருப்பத்துடன் ஆடுகளம் சீரியல் சென்றுகொண்டிருக்கிறது.
அன்னம்
ஒன்று சேர்ந்த பகையால் அன்னத்திற்கு ஏற்படும் அவமானம். சண்முகத்தின் முடிவால் அதிர்ந்து நிற்கும் செண்பகவள்ளி மற்றும் சரவணன். அன்னம் எடுக்கப்போகும் முடிவு என்ன என்பதை இந்த வாரம் தெரியவரும்.
கயல்
தன் குழந்தையின் பிரிவால் தேவியின் உயிருக்கு ஏற்படும் ஆபத்து. அதிர்ச்சியில் கயல். தங்கையின் உயிரை காப்பாற்ற விக்னேஷிடம் இருந்து குழந்தையை கயல் எப்படி மீட்கப்போகிறார் என்பது இந்த வாரம் தெரியவரும்.
மருமகள்
எதிரிகளின் பிடியில் போராடிக் கொண்டிருக்கும் பிரபுவை, தனக்கு கிடைத்த ஆதாரங்களை வைத்து ஆதிரை பிரபுவை எப்படி காப்பாற்றப்போகிறார் என்பதை இந்த வாரம் பார்க்கலாம்.
மூன்று முடிச்சு
சுந்தரவள்ளியின் சூழ்ச்சியால் நந்தினிக்கு எதிராக பகடைக்காயாக பயன்படுத்தப்படும் விஜி. தடைகள் அத்தனையையும் மீறி நந்தினி மற்றும் சூர்யா இணைவார்களா? என்பது இந்த வாரம் தெரியவரும்.

