MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Pandian Stores 2 : சந்தோஷம் முடிவுக்கு வருகிறதா? ராஜியை துரத்தும் கடந்த காலம்... பாண்டியன் ஸ்டோர்ஸில் அதிரடி ட்விஸ்ட்!

Pandian Stores 2 : சந்தோஷம் முடிவுக்கு வருகிறதா? ராஜியை துரத்தும் கடந்த காலம்... பாண்டியன் ஸ்டோர்ஸில் அதிரடி ட்விஸ்ட்!

Pandian Stores 2: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் - கோமதி இடையே ஈகோ யுத்தம் முற்றியுள்ளது. சென்னையில் மகிழ்ச்சியாக இருக்கும் கதிர் - ராஜி ஜோடிக்கு, புதிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இது பாண்டியனையும் கோமதியையும் ஒன்று சேர்க்குமா?!.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 04 2026, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பாண்டியன் கோமதி: ஈகோ யுத்தத்தில் வெடிக்கப்போகும் அடுத்த குண்டு!
Image Credit : jiohotstar

பாண்டியன் - கோமதி: ஈகோ யுத்தத்தில் வெடிக்கப்போகும் அடுத்த குண்டு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தற்போது அனல் பறக்கும் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கோமதி - பாண்டியன் இடையேயான மோதல் ஒருபுறம் இருக்க, மறுபுறம் சென்னையில் கதிர் - ராஜி ஜோடியின் காதல் பயணம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த நிலையில் வரும் வாரங்களில் சில பிரச்சினைகள் எழலாம் என சீரியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பனிப்போர் - முட்டி மோதிக்கொள்ளும் பாண்டியன் கோமதி

வீட்டின் தூண்களாக விளங்கும் பாண்டியனுக்கும் கோமதிக்கும் இடையே தற்போது பனிப்போர் முற்றியுள்ளது. எதற்கெடுத்தாலும் கண்டிப்பு காட்டும் பாண்டியனின் போக்கினால், கோமதி கடும் அதிருப்தியில் உள்ளார். இவர்களது இந்த முட்டி மோதிக்கொள்ளும் காட்சிகள் சீரியலில் ஒரு இறுக்கமான சூழலை உருவாக்கியுள்ளது. ஆனால், இந்தக் கோபம் நீண்ட நாள் நீடிக்காது என்றும், ஒரு பெரிய சிக்கல் இவர்களை ஒன்று சேர்க்கப் போகிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

26
மெரினா முதல் மெட்ரோ வரை: சென்னையில் கதிர் - ராஜி அட்ராசிட்டி!
Image Credit : Jiohotstar

மெரினா முதல் மெட்ரோ வரை: சென்னையில் கதிர் - ராஜி அட்ராசிட்டி!

ஊரில் இருக்கும் டென்ஷன்களை மறந்து, கதிரும் ராஜியும் தற்போது சென்னை மாநகரை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு இருவரும் நெருக்கமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதை கண்டு ரசிகர்கள் "க்யூட் ஜோடி" என கொண்டாடி வருகின்றனர். ஆனால், இந்த சந்தோஷம் நீடிக்குமா? என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி.

Related Articles

Related image1
Pandian Stores 2 E705 Today: அன்பால் இணைந்த கதிர்-ராஜி.! கோபத்தால் பிரிந்த செந்தில்-மீனா.! இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஹைலைட்ஸ்!
Related image2
Pandian Stores 2 ட்வீஸ்ட்: "என் பொண்ண மறந்துடாதீங்க மாப்ளே..!" சரவணனுக்கு நேரடியாக தூதுவிட்ட தங்க மயிலின் அப்பா!
36
என்ட்ரி கொடுக்கிறாரா முன்னாள் காதலன்? ராஜிக்கு காத்திருக்கும் செக்!
Image Credit : Jiohotstar

என்ட்ரி கொடுக்கிறாரா முன்னாள் காதலன்? ராஜிக்கு காத்திருக்கும் செக்!

சந்தோஷமாக செல்லும் கதையில் ஒரு "ட்விஸ்ட்" வைக்க வேண்டாமா? சென்னையில் ஜாலியாக சுற்றி வரும் ராஜிக்கு, அவரது முன்னாள் காதலனால் புதிய தலைவலி ஏற்படப்போவதாக தகவல்கள் கசிகின்றன. தற்செயலாக அவனை சந்திப்பதோ அல்லது அவன் மூலம் ராஜிக்கு ஏதேனும் ஒரு நெருக்கடி ஏற்படுவதோ என கதை சூடுபிடிக்கப் போகிறது. இந்தச் சிக்கல் கதிர் - ராஜி உறவில் விரிசலை ஏற்படுத்துமா அல்லது கதிர் ராஜியை எப்படிக் காப்பாற்றப் போகிறான் என்பதுதான் அடுத்தடுத்த எபிசோட்களின் ஹைலைட்.

46
சென்னை விரையும் பாண்டியன் குடும்பம்: அதிரடி ஆக்ஷன் ஆரம்பம்!
Image Credit : Jiohotstar

சென்னை விரையும் பாண்டியன் குடும்பம்: அதிரடி ஆக்ஷன் ஆரம்பம்!

சென்னையில் ராஜிக்கு சிக்கல் என்றவுடன், அந்தப் பிரச்சினையைத் தீர்க்க பாண்டியனும் கோமதியும் சென்னைக்கு பயணப்பட உள்ளனர். ஊரில் முட்டிக்கொண்டிருந்தவர்கள், பிள்ளைகளுக்காக ஒன்றாகச் சேர்ந்து களமிறங்குவது ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும். பாண்டியனின் கம்பீரமும், கோமதியின் சமயோசித புத்தியும் இணைந்து அந்தப் பிரச்சினையை எப்படி முடிக்கிறது என்பதே கிளைமாக்ஸ்.

56
ஊரில் பாக்கியத்தின் "வில்லத்தனம்": மீண்டும் கிளம்பும் புயல்!
Image Credit : Jiohotstar

ஊரில் பாக்கியத்தின் "வில்லத்தனம்": மீண்டும் கிளம்பும் புயல்!

குடும்பமே சென்னைக்குச் சென்றிருக்கும் வேளையில், ஊரில் இருக்கும் பாக்கியம் சும்மா இருப்பாரா? பாண்டியன் குடும்பம் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, மீண்டும் ஏதேனும் ஒரு கலகத்தை மூட்ட அவர் திட்டமிட்டுள்ளார். ராஜியின் கடந்த கால விஷயங்களை வைத்துப் பெரிய பஞ்சாயத்தைக் கிளப்ப பாக்கியம் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

66
மீண்டும் ராஜி போர்ஷன் அதிகரிக்குமா?
Image Credit : jiohotstar

மீண்டும் ராஜி போர்ஷன் அதிகரிக்குமா?

சென்னையில் காதல் மற்றும் மோதல், ஊரில் பாக்கியத்தின் சதி என பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் வரும் வாரத்தில் விறுவிறுப்பின் உச்சத்தில் இருக்குமாம். ராஜி தனது பழைய காதலனிடமிருந்து எப்படி தப்பிக்கப் போகிறாள்? பாண்டியன் இதை எப்படி கையாளப் போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
சினிமா காட்சியகம்
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கசக்கிப்போடப்படும் லெட்டர்; கடுப்பாகும் கோமதி... ட்விஸ்ட் வைத்த பாண்டியன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image2
சிங்கப்பெண்ணே முதல் ஆடுகளம் வரை... 5 சீரியல்களின் நேரம் மாற்றம் - காரணம் என்ன?
Recommended image3
ராகவ் - நிலா காதலுக்கு வேட்டு வைத்த சோழன் - அய்யனார் துணை சீரியலில் அடிபொலி ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
Pandian Stores 2 E705 Today: அன்பால் இணைந்த கதிர்-ராஜி.! கோபத்தால் பிரிந்த செந்தில்-மீனா.! இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஹைலைட்ஸ்!
Recommended image2
Pandian Stores 2 ட்வீஸ்ட்: "என் பொண்ண மறந்துடாதீங்க மாப்ளே..!" சரவணனுக்கு நேரடியாக தூதுவிட்ட தங்க மயிலின் அப்பா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved